இன்றைய விஷயம்: 29-05-2015
தமிழ் சினிமாவில் மூன்று வேடங்கள்... !
தமிழ்ப் படங்களில், கதாநாயகர்கள் மூன்று வேடங்களில் நடித்த படங்கள் சில உன்டு. அதுமாதிரியான படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
இரண்டு வேடங்களோ, நான்கோ அதற்கு மேற்பட்ட வேடங்களோ இல்லை. அதே சமயம் , நாகேஷ் பணக்காரக் குடும்பம்
படத்திலும், வடிவேலு மனதைத் திருடிவிட்டாய் படத்திலும் ஒரே ஒரு காட்சியில் மட்டும்
முன்று வேடங்களில் வருவார்கள். இவைகள் போன்ற படங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
ரெடி...
ஜுட்... !!!
1.
பரங்கிமலையா...
பல்லாவரமா... நடுவிலா... ?
2.
பொம்மையை நிஜமென்று காட்டியதால்... நிஜம் பொம்மைபோல் தோற்றது.
3.
மூன்று சிரம்...
அதிலும் ஒன்று பரதமா... ! ரொம்ப சிரமம்... !!
4.
ஊர் ஊராய்ப்
போவான்... காவலனும் அவனே... கார் சீர் நிபுணனும் அவனே...
5.
கேப்டனாய் இருந்தும் கேப்டனாய் இல்லாதவர் நாயகனாக நினைத்தது
சரியா... ?
6.
புயல், மேல் உலகில் மையம் கொள்ளும் என்று எதிர்பார்த்தால்... இப்படி
புஸ்ஸுன்னு ஆயிடுச்சே...
7.
RED LOTUSம், ரத்தக்கல்லும் சேர்ந்த சிறப்பான
படம்... ஏகாம்பரம்ம்ம்ம்...!!!
8.
இது இவர்
படம்னா இவரே நம்பமாட்டார்... இல்லையா ‘நேர்மை மன்னரே’... ?
9.
சாமிப்புள்ளையாக... நடிகரா... திலகமா... !
10.இவர் கேரக்டரை
இவரே புரிஞ்சிக்கலையே... இதுல எடிசன் என்ன... பூ என்ன?
நீங்களும்
முயற்சிக்கலாமே...
மீண்டும்
சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...