இன்றைய விஷயம் : 24-03-2009 – தமிழ் சினிமாவில் விசித்திர கதாபாத்திரங்கள்
தமிழ்ப் படங்கள் சிலவற்றில் வினோதமான பெயர்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள், அந்தப் பெயரினாலேயே நம் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். உம். காக்கர்லா சத்யநாராயணா (காதலன்)
அதுமாதிரியான வித்தியாசமான கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். குறிப்புகளும் உண்டு.
1. வால்பாறை வரதன்
2. பிரான்சிஸ் அன்பரசு (கோலியால் காலி)
3. அகரம் சேது
4. Dr. ராஜு சுந்தரம் (ஸ்கூல் போகாமல் பீச்சில்...)
5. எண்கவுண்டர் சங்கர்
6. ஜேம்ஸ் அப்பாதுரை (Corporation Commissioner)
7. இப்போ ராமசாமி
8. இயந்திரச் செம்மல் எத்திராஜ் (முதலமைச்சருக்கு நிதி)
9. டைமண்ட் பாபு
10. அன்னவேலி கண்ணையன் (OTMP)
நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...