10 November 2006

இன்றைய விஷயம் : 10-11-2006 – ஒரு விடுகதை – ஒரு படம்.



படத்தின் பெயர் ஒரு சிறிய விடுகதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் கண்டிபிடியுங்கள்.

1. நகைச்சுவைப் பழைய படத்தில் நன்றாகச் செய்தாய் நடிகையே… !

2. மலரே… ! தளபதி நடிகர் தனக்கென இல்லாமல் இருந்தாரே… ! திருப்புமுனை…

3. உலகெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம்.

இது வார்த்தை அல்ல. வாக்கியம். நிறைய புதுசு.

4. திசையின் முகப்பு, நவரசம் கொண்டது. வெள்ளி விழாப் படம்.

5. பேசாத இசை. பிச்சிக்கிட்டு ஓடிச்சு…

6. மனமே… ! பாசம், நேசம் எல்லாம் இல்லை… பணமே பகவான்… !! புரிஞ்சிக்கோ…

7. இரு மனங்களின் இணைப்பில் இமயம் வரைந்த சித்திரம். செம பாடல்கள்…

8. சொல்லித்தருபவனும், சொல்லிக்கொள்பவனும் சேர்ந்தால் நகைச்சுவைதான்.

9. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் சொல்வார்,

“என்னை வெளியாளா நினைக்காதீங்க… நான்… “

10. சமையல்காரனும், அவன் மனைவியும்… படத்தின் பெயர்தாங்க… !


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/10-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


08 November 2006

இன்றைய விஷயம் : 07-11-2006 – இந்த இடைவேளைக் காட்சி எந்தப் படத்தில் வரும்.


1. மொட்டை மாடியில் ஹீரோவும், ஹீரோயினும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலைச் சொல்லாமல் சண்டை போட்டுக் கொள்ளும் இடம்.

2. தன்னை எதிர்த்த ஹீரோவை, போலீஸ் வில்லன், அடித்துத் தண்டவாளத்தில் போடும் இடம் (ஹீரோ கஷ்டப்பட்டுத் தப்பித்துவிடுவார்)

3. ஹீரோயினைப் பற்றித் தப்பாகப் பேசியதால், தன் உயிர் நண்பர்களை ஹீரோ அடித்து, அதற்காக வருத்தப்படும் இடம்.

4. தன்னைப் பலமுறை அவமானப்படுத்திய ஹீரோயினின் கழுத்தில் ஹீரோ, பஞ்சாயத்தார் முன்னிலையில் தாலி கட்டும் இடம்.

5. தீவிரவாதி வில்லனைக் கொல்ல, ஹீரோவும் – அவர் படையும் கப்பலில் கிளம்பும்போது, புதிதாக இரண்டு பேர் வரும் இடம். (இடைவேளைக்குப் பிறகு அந்த இருவர் ஹீரோயினும், காமெடியனும் என்று தெரிந்து போகும்)

6. ஹீரோயினைக் கொல்லப்போவதாக, வில்லன், தன் அண்ணனைக் கொன்ற போலிஸ் ஹீரோவை, ஃபோனில் மிரட்டும் இடம்.

7. திருட்டுக் கல்யாணம் செய்து வரும் வழியில், இளம் ஜோடி, போலிஸ் வசம் சிக்கும் இடம்.

8. தான் காதலில் அவமானப்பட்டதையும் மறந்து, தன் பெற்றோர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்க, ஹீரோ (இருவரில் ஒருவர்) சபதம் செய்யும் இடம்.

9. பல பொய்கள் சொல்லிக் காதல் செய்யும் ஹீரோ, தன் நண்பர்களிடம் ஒரு கட்டத்தில், ‘இப்ப என்னடா பண்றது… பேசாம இண்டர்வல் விட்டுறலாமா… ?’ என்று கேட்கும் இடம்.

10. எட்டு வருடத்திற்கு முன்னால் இறந்ததாக நினைத்த ஹீரோ, உயிரோடு இருப்பது மட்டுமின்றி, தன் மகனின் மரணத்திற்கும் காரணம் அவனே என்று தெரியவரும்போது, வில்லன் அலறும் இடம்.

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/07-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…