30 July 2007

இன்றைய விஷயம் : 30-07-2007 : தமிழ் சினிமா – அ முதல் ஃ தானடா… !


தமிழ்ச் சினிமா பாடல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : பாடல்கள், அ முதல் ஃ வரையிலான எழுத்துக்களில் தொடங்கும். (13 பாடல்கள் – 13 எழுத்துக்கள் அதே வரிசையில்)

ரெடி… ஜூட்…

1. தியாகராஜன் – பார்வதி – டூயட் – பூவுக்குள் பூகம்பம் (அ)


2. கமலுக்கு மலேசியா பின்னணி – காக்கையில்லாச் சீமையிலே (ஆ)

3. கமலின் ஹீரோயினுக்கு L.R. ஈஸ்வரி பின்னணி – பாலசந்தர்–சுஜாதா (இ)

4. ரஞ்சித் பரோட் (ஈ)

5. ரஜினிக்கு யேசுதாஸ் டூயட் – A.V.M. – கார்த்திக்கோடு கூட்டணி (உ)

6. இளையராஜா – M.S.V கூட்டணி – R. சுந்தர்ராஜன் கூட்டணி (ஊ)

7. பார்க்க முடியாத அந்நியன் – பாடகர் ஹரிஹரன் (எ)

8. “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” (ஏ)

9. ரேஸிங் டிராக்கில் டூயட் – சிற்பி – கார்த்திக் (ஐ)

10. ஜெயலலிதா + நாகேஷ் + தசரதன் – வீட்டுக்குள்ளே ரேடியோ (ஒ)

11. கிரிஜா – சுந்தரத்தெலுங்கு ஹீரோ – இருட்டு இயக்குனர் (ஓ)

12. செல்லப்பா – முதலியார் – சேதுராமன் (ஔ)

13. விஜய் – சங்கவி – சுவலட்சுமி (ஃ)

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…