இங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளில் ஹீரோவின் கதாபாத்திரப் பெயரும் (ஹீரோயின் பெயரோ கூட) இருக்கும், கூடவே வேறு சில வார்த்தைகளும் இருக்கும். கேள்வி, குறிப்பு வடிவத்தில் ஐந்து வாக்கியங்களில் இருக்கிறது. படத்தின் பெயரைக் கண்டிபிடியுங்கள்.
உ.ம். சபாஷ் மீனா. எங்க ஓரு பூவாத்தா
(அண்ணாமலை, வீரா, அவ்வை சண்முகி போன்ற ஒரே வார்த்தைப் படங்களெல்லாம் இல்லை)
உப குறிப்பு : அந்தப் பெயர் அதே படத்தின் ஹீரோவோ, ஹீரோயினோ தானே தவிர, வேறு படங்களின் கதாபாத்திரப் பெய்ர்கள் இல்லை.
ரெடி… ஜூட்…
1. வாரிசு நடிக, நடிகையர் நடித்த படம். ஹீரோவின் தந்தையும், ஹீரோயின் தாயும் பழங்கால நடிக, நடிகையர்கள். அந்த இன்னொரு வார்த்தை ஒரு ஊரின் பெயர். கோயில்களில் பிரசித்தம் அந்த வார்த்தை.
2. மணிரத்னத்தின் ஒரு படத்தின் ஹீரோதான் இந்தப் படத்தின் ஹீரோவும். படத்தின் பெயரில் அடிமைப்படுத்தியவன் தெரிவான். நிழல்கள் ரவிதான் வில்லன். ‘புதிய தத்துவம்’ என்ற வார்த்தை இந்தப் படத்தில் மிகப் பிரபலம். இந்தப் படத்தின் இணை இயக்குனர், இந்தப் படத்தின் ஹீரோ கூடவே கிட்டத்தட்ட படம் முழுதும் வருவார்.
3. யோவான்தான் கதாநாயகனின் பெயர். PENTAMEDIA தயாரிப்பு. பிரவீன்மணி இசை. படம், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. முன்னாள் அணித்தலைவரின் முன்னாள் காதலியின் தங்கைதான் ஹீரோயின்.
4. ஹீரோ இன்றும் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறார். இந்தப் படத்தின் வில்லனும் சில படங்களில் ஹீரோ. இந்தப் படத்தின் பெயரில் ஒரு பிரபலம் உண்டு. 100வது படம்.
5. கதாநாயகனின் பெயரில் பாதி இந்தப் படத்தின் பெயரில் பாதி. கதாநாயகனின் பெயரில் பாதி இந்தப் படத்தின் பெயரில் பாதி. (மீண்டும், Yet Convicingly – சகாதேவன் மகாதேவன் ரகம் இல்லை). இந்தப் படத்தின் இசையமைப்பாளர், இந்தக் கதாநாயகரின் படத்திற்கு ஒரே முறைதான் இசையமைத்துள்ளார். கடவுளே… கடவுளே. இரு வார்த்தைப் படம்.
6. டீத்தூள் கதாநாயகனின் தந்தை இந்தப் படத்தின் ஹீரோ. மறுபடியும் கடவுளே… கடவுளே… அந்த இன்னொரு வார்த்தை ஒரு ஊரின் பெயர். இந்த ஹீரோ ஒரே ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மாம்பழம் வாங்கலையோ மாம்பழம்… !
7. இந்தப் படத்தின் இரு வார்த்தைகளில் ஒன்று வெளிவந்த பழைய படம் (அதே பெயரில் இன்னொரு புது படமும் வெளிவந்தது) மற்றொன்று வெளிவரப்போகும் படம். முதல் வார்த்தையில் பாதியும் ஒரு படத்தின் பெயரே. (இவன் ரொம்ப நல்லவன்) துஷ்டனைக் கண்டால் தூர விலகு. அரசன் இவன். மிகப்பெரிய வெற்றி பெற்ற படமும் கூட.
8. கதாநாயகியின் பெயர் உண்டு இந்தப் படத்தில். கதாநாயகனின் பெயர் சன்முகசுந்தரம். இந்தப் படத்தின் பெயரில் தொடங்கும் தாத்தாவான நடிகரின் பாடல் ஒன்று உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சியும் உண்டு. இந்தப் படம் ஒரு மைல்கல்.
9. இந்தக் கதாநாயகன் இன்றும் கதாநாயகன். மற்றொரு வார்த்தை ஒரு ஊரின் பெயரே. கதாநாயகனின் பாத்திரப் பெயரில் எங்களின் ஒரு படமும் உண்டு. இதே கதாநாயகி இவருடன் பல படங்களில் நடித்தார் (தோராயமாக 5, 6 படங்கள்). இந்தக் கதாநாயகன் நடித்த மற்றொரு படம் ‘சுயம்வரம்’ (இதெல்லாம் ஒரு க்ளூவா… ? )
10. காதலன் படத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி வித்தியாசமாகச் சொல்லும் வார்த்தைதான் இந்தப் படத்தின் கதாநாயகன். எங்கள் வீட்டுப் பிள்ளை படத்திற்கும், இந்தப் படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தப் படத்தின் ஒரு வார்த்தையில் நவரச நாயகனின் படத்தின் பாதி ஒளிந்திருக்கிறது. (அந்தப் படத்தின் நாயகி சௌந்தர்யா… ) இந்தக் கதாநாயகனின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று இது. மோனைப் படம் இது. (பெண்கள் வீட்டின் கண்கள் மாதிரி... முதல் வார்த்தையிலும், மூன்றாம் வார்த்தையிலும் மோனை இருக்கும்)
நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-11-2006.html) சொடுக்கவும்
மீண்டும் சந்திப்போம்.
+ நேசத்துடன்… இரா. அரங்கன்.