21 November 2007

இன்றைய விஷயம் : 21-11-2007 – ‘அ’ வரிசை – 2 முதல் 11 வரை


‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ப் படங்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : படங்களின் பெயர்களில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 2 முதல் 11 வரை இருக்கும். அதாவது, முதல் படத்தின் பெயரில் உள்ள எழுத்துக்கள் 2, அடுத்தது மூன்று… இப்படி... 11 வரை செல்லும். படத்தின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது.

ரெடி… ஜூட்…

1. ஹீரோ – ஹீரோயின் இருவருமே இரட்டை வேடம். இரண்டாம் வேடத்திற்கான காஸ்ட்யூம் வெறும் நீலம். (2)

2. மகாராணியாக ஒரு டூயட்ராஜா நடித்த படம். (3)

3. எதிர் வீட்ல பொறந்திருக்கலாம்… கீழ் வீட்ல பொறந்திருக்கலாம்… (4)

4. இந்தப் படத்தில், சொர்ணமால்யாவுக்கு - விவேக் முறைப்பையன்… (5)

5. பழைய சஸ்பென்ஸ் படம். இன்றுவரை மிஞ்ச வேறு படமில்லை. ரிம்… ஜிம்… எத்தனை பூக்கள்… ! (6)

6. ஹீரோ இந்தப் படத்தின் கதைப்படி ஒரு படம் தயாரிப்பார்…கிரேஸி… (7)

7. “சார்… லட்டு… !” “நம்பியண்ணே… !” அஞ்சுவைக் கடத்து (8)

8. “வசந்த காலத்தில் மழை தரும் மேகம்… “ இந்த வரிகள் இடம் பெற்ற பாடல் இடம்பெற்ற படம் (9)

9. தியாகராஜன் – சில்க், கணவன் – மனைவியாக நடித்த “என் இனிய…” படம் (10)

10. “பீம்சிங்-கா பேட்டா ராம்சிங்… “ “மாதவா… எப்படிரா… ?” (11)


நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…