28 December 2006

இன்றைய விஷயம் - 28-12-2006 : இந்தப் பட்டம் யாருக்குச் சொந்தம் ?


தமிழ் நடிக, நடிகையரின் பட்டங்கள் அதாவது அடைமொழிகள், (உம். சூப்பர் ஸ்டார் – ரஜினிகாந்த்) சில தரப்பட்டுள்ளன. அந்த அடைமொழிக்குச் சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. கன்னடத்துப் பைங்கிளி
2. லட்சிய நடிகர்
3. இளம் புயல்
4. புன்னகை இளவரசி
5. நாட்டியப் பேரொளி
6. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்
7. மக்கள் நாயகன்
8. புரட்சித் தமிழன்
9. நடிகையர் திலகம்
10. நடிகவேள்

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-12-2006.html)
சொடுக்கவும்…

மீண்டும் சந்திப்போம்…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…

26 December 2006

இன்றைய விஷயம் - 26-12-2006 : மிருகம்… பாட்டு… தமிழ்ப் படம்…



கரடி, புறா மாதிரியான விலங்குகளின் பெயரில் தொடங்கும் தமிழ்படப் பாடல்கள் சில உண்டு… உம். "குயிலப் புடிச்சி… கூண்டில் அடைச்சி… கூவச் சொல்லுகிற உலகம்… " (சின்னதம்பி)

இப்படிப் பட்ட பத்து பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன (குறிப்புகள் விலங்கினைப் பற்றியோ அல்லது அந்தப் பாடல் இடம் பெற்ற படம் பற்றியோ இருக்கலாம். விலங்கு அல்லது படம் என்று தரப்பட்டுள்ளது)

நீங்கள் செய்யவேண்டியது… அந்தப் பாடலையும், படத்தினையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப குறிப்பு - 1 : பாடலின் முதல் வார்த்தையிலேயே விலங்கின் பெயர் இருக்கும்…

உப குறிப்பு - 2 : ஒரே மிருகம் இரண்டு முறை இல்லை... ஒரே படமும் இரண்டு முறை இல்லை...

சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேக்குதா – தவறு.
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே – சரி.

ரெடி… ஜூட்…

1. ராமாயண விலங்கு – ரன்னிங்குக்கு பெயர் போனது (விலங்கு)

2. டில்லி – டி.ஜி.பி கல்யாணம் – சொக்கலிங்க பாகவதர் (படம்)

3. காட்டான் நடிகர் – கண்ணழகி – ராகதேவன் (படம்)

4. உன் ஜம்பம் சாயாது… என்கிட்ட ஆகாது… ஹே… தரத்தர தரத்தரத்தர… (படம்)

5. காட்டு ராஜா (விலங்கு)

6. ‘எங்கள் கிராமத்திற்குத் திரைப்படம் வந்து பார்த்திருக்கிறேன்… எங்கள் கிராமம் திரைப்படத்தில் வந்தது இந்தப் படத்தில்தான்’ – இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து (படம்)

7. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிக்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல் (படம்)

8. சிங்கம், புலிக்கு அடுத்தது இந்த மிருகம் – படம் சிவனுக்கு அடுத்தது (விலங்கு)

9. கிருஷ்ணன் பஞ்சு – V.C. கணேசன் படத்தில் வரும் பாட்டு (படம்)

10. A.V.M. – ரூபிணி – சந்திரபோஸ் இணைந்த படத்தில் வரும் பாட்டு (படம்)


நீங்களும் முயற்சிக்கலாமே…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/26-12-2006.html) சொடுக்கவும்

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



21 December 2006

இன்றைய விஷயம் – 21-12-2006 : இந்த SCENE – SHOT எந்தப் படம் ?



உதவி இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் நடிகரிடமோ, நடிகையிடமோ (கதாநாயகன், கதாநாயகி, வில்லன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) ஒரு SHOT பற்றிய விவரிப்பு செய்வது இங்கே தரப்பட்டுள்ளது. அது எந்தப் படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ரெடி... ஜூட்...

1. “மேடம்… இந்த ஷாட்ல நீங்க இந்த CHAIRல உட்கார்ந்த மாதிரியே RIGHT SIDE திரும்பறீங்க… அப்படியே… கண்ணுல தண்ணி வரணும்… உங்க PHOTO ஒண்ணு எடுத்துக் காட்டறீங்க… ஒரு ரெண்டு செகண்ட் கழிச்சு அப்படியே PHOTOவைத் திருப்பறீங்க… அவ்வளவுதான்…”

2. “சார்… நீங்க மாட்டு வண்டியில படுத்திருக்கீங்க… அப்ப ஒரு கூட்டம் அந்தப் பக்கமா போகுது… அதுல கோயில் யானையும் உண்டு… நீங்க வானத்தையே பாக்கறீங்க… கைல ஒரு சுருட்டு… கொஞ்ச நேரத்துல கோயில் யானை உங்க பக்கம் வருது… கட் பன்றோம்… “

3. “சார்… ஹீரோயின் சத்தம் போட்டுட்டு, போறதுக்காகத் திரும்பறாங்க… அப்ப அவங்க சுடிதார்ல ஒரு செயின் மாட்டிக்குது… செயினோட இன்னொரு முனை உங்க கைல இருக்கு. அப்படியே FEELINGஆ ஒரு லுக்… அங்க ஒரு கட்… “

4. “சார் நீங்க கதவைத் தொறந்துகிட்டு ரூமுக்குள்ள வர்றீங்க… LONG SHOTல நீங்க… CLOSE UPல அவங்களும், அவரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நிக்கறாங்க… அந்த அம்மா அழுதுகிட்டு இருக்காங்க… நீங்க அப்பாவியா அதிர்ச்சியாயிட்டு அப்பறம் டயலாக் பேசறீங்க… பேசிக்கிட்டே போய் நீங்க கட்டிப் பிடிக்கறீங்க… அப்ப உங்க மனைவி ENTRY… கட்… “

5. “மேடம்… நீங்க பன்றீங்க… SCHOOL UNIFORMலயே அப்படியே தொறந்திருக்கிற ஒவ்வொரு CLASS ROOM கதவையா சாத்திக்கிட்டே வர்றீங்க… கட்… “

6. “சார்… நீங்க ஆர்வமா கேட்டுக்கிட்டே வந்து அங்க இருக்கிற சேர்ல முனையில உட்கார்றீங்க… ஒரு அஞ்சு செகண்ட் GAP விட்டு இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி உட்கார்றீங்க… இன்னும் உள்ள… இன்னும் உள்ள நல்லா சாஞ்சி உட்கார்ந்து கால் மேல கால் போட்டுக்கறீங்க… “

7. “சார்… அந்த அம்மா கொண்டு வந்த சாப்பாட்டை சாப்டுட்டு… கையைத் துடைக்க, நோட்ல இருந்து ஒரு பேப்பரைக் கிழிக்கிறீங்க… அப்ப அந்த அம்மா அவசரமா தன்கிட்ட இருக்கிற வாட்டர் பாட்டிலைத் தர்றாங்க… நீங்க அவங்களை ROMANCEஆ பாத்துக்கிட்டே கையைக் கழுவுறீங்க… “

8. “மேடம்… நீங்க ஓடற ரயில்ல இருந்து குதிச்சு ஹீரோவைப் பாத்து ஓடி வர்றீங்க… கண்ணுல ஆனந்தக் கண்ணீர்… ஹீரோவோட சட்டையைத் தொட்டுக் காட்டி அது நான்தான்னு சைகை செய்யறீங்க… கட்… “

9. “மேடம்… நீங்க கல்யாண டிரெஸ்ல, அழுதுகிட்டே ஓடி வந்து இங்க சாஞ்சு உட்கார்றீங்க… பயங்கரமா அழறீங்க… CAMERA அப்படியே ZOOM BACK ஆகி, TOP ANGLE போய், ஒரு FULL ROUND அடிச்சு, TILT DOWN ஆகுது… அங்க அந்தப் பக்கம் ஹீரோ அழுதுகிட்டே இருக்கார்… கட்… “

10. “காரை விட்டு அந்த அம்மா இறங்கினதும்… நீங்க காருக்குள்ள இருந்த மாதிரியே உன்னோட வீட்டு நம்பர் என்னன்னு கேக்கறீங்க… அவங்க பதில் சொல்லாம… காரோட கண்ணாடில 18ன்னு எழுதுறாங்க… அதை இந்தப் பக்கம் இருந்து பாக்கற நீங்க 81ன்னு புரிஞ்சிக்கறீங்க… “


நீங்களும் முயற்சிக்கலாமே…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/21-12-2006-scene-shot.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



19 December 2006

இன்றைய விஷயம் – 19-12-2006 : படம் – பப்படம்…

கீழே தரப்பட்டுள்ள படங்களில் (PICTURES) இருந்து தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில படங்களுக்குக் குறிப்புகள் தனியே தரப்பட்டுள்ளன.


























குறிப்புகள் :
2. விஜயகாந்த் படம்
7. வெயில் + வானத்துத் தாரகை
8. லூசுப்பையன்
நீங்களும் முயற்சியுங்களேன்...
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/19-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

14 December 2006

இன்றைய விஷயம் – 14-12-2006 : இந்த CAPTION எந்தப் படம்


தமிழ்ப் படங்களுக்கு CAPTIONS வைப்பது என்பது வழக்கமாகிவிட்ட ஒன்று. அப்படிச் சில படங்களின் CAPTION-கள் தரப்பட்டுள்ளன.. படங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. காதலும் கற்று மற.....

2. THINK BEFORE YOU INK...

3. LAW WITHOUT FORCE IS IMPOTENT...

4. தமிழ் வாழ்க...

5. ANOTHER EPISODE IN A POLICE OFFICER'S LIFE...

6. FIGHT FOR RIGHT...

7. MAN OF THE MATCH...

8. FOR GALS...

9. பேரன்பும், பெருங்கோபமும் கொண்டவன்....

10. SOMETHING SPECIAL...


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/14-12-2006-caption.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்....

+நேசத்துடன்..... இரா. அரங்கன்....


11 December 2006

இன்றைய விஷயம் – 11-12-2006 : உடைந்த படம்… என்ன படம்… ?

கிழிந்த செய்தித்தாள்களில் தமிழ்ப் படங்களின் உடைந்த பெயர்கள் உள்ளன. அவை என்ன படங்கள் என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள்… குறிப்புகளும் உண்டு.

ரெடி… ஜூட்…



விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/11-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

















06 December 2006

இன்றைய விஷயம் - 06-12-2006 : படங்களில் எண்கள்…



கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப குறிப்பு - 1 : படத்தின் பெயரில் ஒன்று முதல் பத்துவரை ஏதாவது ஒரு எண் இருக்கும் (ஒரு, ஒருத்தி, இருவர், ஒருவன் இதுபோல)

உப குறிப்பு – 2 : இரண்டு கேள்விகளுக்கு ஒரே எண்ணுள்ள படங்கள் தரப்படவில்லை. எல்லாமே தனித்தனி எண்கள்.

உப குறிப்பு – 3 : எண்கள் மாறி மாறியும் வரலாம். அதாவது முதல் கேள்விக்கான விடையில் ஐந்து என்ற எண் ஒளிந்திருக்கலாம்.

ரெடி… ஜூட்…


1. சிம்புவும், சிம்புவும் சேர்ந்தால்…

2. ஆசான், வஸந்தி, கோபி

3. மக்கள் திலகம் நடித்த படம் (Flop)

4. இட்லி, இளநீர், இடுப்புக்கு மேல் வேஷ்டி

5. தாயின் பந்தம்… (படத்தின் பெயருக்கான குறிப்பு இது… படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம்)

6. எட்டில் பாதியும் எல்லாமும் அறிந்தவன்.

7. குலுவாலிலே, குலுவாலிலே, குலுவாலிலே (A. Jeganathan படம்)

8. வில்லன், ராஜசேகர்–ராபர்ட்-ரஹீம் என்று மூன்று கெட்டப்களில் வருவார்.

9. மாதவனும். மாதவனும் கேளடி கண்மணி நாயகி.

10. இந்தப் படத்தின் நாயகனும், நாயகியும் இந்த ஒரே படத்தில்தான் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். (ஆனால், இருவரும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்)


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/06-12-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

04 December 2006

இன்றைய விஷயம் : 04-12-2006 – இது யார் ஸ்டைல்… ?



நம்முடைய தமிழ் இயக்குனர்கள் / வசனகர்த்தாக்கள் சிலர் ‘காக்கா – வடை – நரி’ கதையை எடுப்பதற்காக தங்களின் டைரியில் குறிப்பு எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து வந்து விட்டோம். ஆனால் எது – யார் எழுதியது என்று குழப்பமாக உள்ளது. கொண்டு வந்த குறிப்புகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன. அதை வைத்து அந்த இயக்குனர் / வசனகர்த்தா யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்… ! (எல்லாமே கற்பனைதான்… ! )

கதை இப்படி ஆரம்பிக்கிறது…

நரி வடையைத் தூக்கிகிட்டு போனவுடனே…


1. காக்கா நரியிடம் : ஏன்… ?
நரி : பசி.
காக்கா : எனக்கு… ?
நரி : அஸ்க்கு…
காக்கா : குடு…
நரி : மாட்டேன்.
காக்கா : அப்ப நான்…
நரி : ஓடிரு… (இயக்குனர்)


2. காக்கா நியாயம் கேக்கப் பஞ்சாயத்துக்குப் போச்சு. அங்க நரி, பொய்சாட்சியா, ஓநாயைக் கொண்டு வந்து நிப்பாட்ட, நொந்து போன காக்கா இறந்து போய்டுது. அந்தக் காக்காவோட இரண்டு பிள்ளைங்களும் வளர்ந்து, நரியைப் பழிவாங்கறதோட மட்டுமில்லாம, தன்னோட அப்பா காக்காவோட களங்கங்கத்தையும் துடைக்கறாங்க. (இயக்குனர்)


3. வடையை எடுத்திட்டுப் போன நரி ராத்திரி தூங்கறப்போ, கனவுல காக்கா வந்து பரிதாபமா நிக்குது. அனுதாபப்பட்ட நரி, மறுநாளே காக்கா வீட்டுக்குப் போய், தான் செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தமா காக்காவோட மேற்படிப்புக்கு உதவி செஞ்சி, கல்யாணம் வரைக்கும் ஏற்பாடு செய்யுது. தாலி கட்டுற நேரம் பார்த்து ஒரு உண்மை தெரிய வருது. கிளைமாக்ஸில் பயங்கர டச்சிங்கா டயலாக் பேசிட்டு நரி போய்டுது. (இயக்குனர்)


4. காக்கா தன்னோட ‘Remote Satellite Connection’ மூலமா நரி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சு, தானே ஒரு நாள் நரியா இருக்கிற மாதிரி ஒரு சின்ன Ordinance போட்டு, நரியையே தந்திரமா ஏமாத்தி வடையைத் திரும்பி வாங்கிடுது. (வசனகர்த்தா)


5. சுட்ட வடையை ஒளிச்சு வைக்க நரி இடம் பார்க்குது. அப்ப காக்கா அங்க வந்துடுது. ஒரு பைட். நரி தப்பிச்சுடுது. படத்தோட இயக்குனர் திடீர்னு ஸ்கிரீன்ல வந்து… ‘இது பாக்கத்தான் காக்கா… பாஞ்சா கார்கில் பீரங்கி’ அப்படீன்னு டயலாக் விடுறாரு… காக்கா, பாக்கி இருக்கிறவங்களோட இன்னொரு சண்டை போடுது. நரி இருக்கிற இடம் தெரிஞ்ச உடனே நேர்லயே போய் வடையை வாங்காம வெறும் சவால் மட்டும் நாலு முறை விட்டுட்டு இன்னொரு சண்டை. ஒரு சில குழந்தைத் தனமான தந்திரங்களால நரியை வெற்றி கொள்கிற காக்கா, கிளைமாக்ஸில் நரியைக் கொன்னுட்டு, ஜெயுலுக்குப் போகாம வெளியையே சுத்துது. (இயக்குனர்)


6. காக்கா வடையைத் திரும்ப வாங்கும் முயற்சியில் உதவுவதற்காக, காக்காவோட ஒண்ணு விட்ட மாமா ‘காரைக்கால் காத்தவராயன்’ வர்றாரு. வந்து பாத்தா, ஏற்கனவே காக்காவோட குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சனைகள். தன்னோட இம்சை ஐடியாக்களால அத்தனை பிரச்சனைகளளயும் சமாளிக்கிற காத்தவராயன் நரிகிட்ட கடைசியா வடையை வாங்கும்போது காக்காவே வேண்டாங்குது. ஏன். அது கிளைமாக்ஸ். (இயக்குனர்)


7. காக்கா சோகமாகுது. ஒரு பாட்டு. வடையை நினைத்துப் பாக்குது. ஒரு பாட்டு. நடுவுல ‘ரெண்டு பலாப்பழக் காமெடி’. நரி அந்தப் பக்கம் வடையைத் திங்குது. ஒரு பாட்டு. காக்காவும், நரியும் கனவுல ஒருத்தரை ஒருத்தர் நெனெச்சு ரெண்டு பாட்டு. கிளைமாக்ஸில் மாரியம்மன் கோயிலில் ஒரு பாட்டு. (இயக்குனர்)


8. திருடிக்கிட்டுப் போன வடையைத் திரும்பக் கேக்க நரியோட வீட்டுக்குக் காக்கா போகுது. ஆனா, நரியோ சாமர்த்தியமா, அந்த வடையைத் திருடினது தான் இல்லை, தன்னோட தம்பின்னு சொல்லி ஏமாத்திடுது. காக்கா விடாம தினமும் நரியோட வீட்டுக்குப் போக, நரியும் எப்படியோ கஷ்டப்பட்டு, ஒரு நாள் ரியல் கெட்டப்லயும், ஒரு நாள் தம்பி கெட்டப்லயும் வந்து ஆள் மாறாட்டம் செஞ்சி, குண்டக்க மண்டக்க டயலாக் பேசி, குழப்பித் தப்பிச்சுடுது. (வசனகர்த்தா)


9. காக்கா தன் அடியாள் காக்காவிடம் : வயசான பாட்டி சுட்ட வடையைத் திருடறவனெல்லாம் இந்த பூமிக்கு எதுக்கு. போட்டுத் தள்ளு. போட்டுத் தள்ளு.

(அதே நாள் ராத்திரி) : இதெல்லாம் செய்யறதுக்கு சாமியா வரும். நாமதான் செய்யனும்.
(இயக்குனர்)


10. காக்கா வருத்தத்தோட கொஞ்ச நாள் இருக்குது. அப்புறம், வடை திருடிய நரின்னு தெரியாமலேயே அதைக் காதலிச்சு கல்யாணமும் செஞ்சுக்க முடிவு செய்யுது. இதுக்கு நடுவுல அந்த நரியோ, காக்காவோட அப்பா காக்காவை விரும்ப ஆரம்பிச்சுடுது. அதே நேரம், இந்த நரியோட அம்மா நரி அந்த முதல் காக்காவோட குடும்பமே நடத்தற அளவுக்குப் போயிடுச்சு. (இயக்குனர்)


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/04-12-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

01 December 2006

இன்றைய விஷயம் : 01-12-2006 – இந்த வேற்றுமொழிப்படம் தமிழில் எந்தப் படம் ?



வேறு மொழிப் படங்களில் இருந்து தமிழுக்கு Remake செய்யப்பட்ட படங்கள் சில தரப்பட்டுள்ளன (அந்தந்த மொழிப் பெயர் மட்டும்) அவை தமிழில் எந்தப் பெயரில் படமாக வந்தன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இதில் Dubbing / Semi-Dubbing படங்கள் (வைஜெயந்தி I.P.S / கண்டேன் சீதையை) எல்லாம் சேர்த்தி இல்லை.

Only Remakes…

குறிப்பு : சில படங்களுக்கு Clues தரப்பட்டுள்ளன.

1. வாஸந்தியும், லஷ்மியும் பின்னே நானும் - மலையாளம்
2. கோல்மால் – இந்தி
3. ப்ரேம லோகா – கன்னடம் (பழைய பேரழகி… )
4. அதனொக்கடே – தெலுங்கு
5.தொம்மனும் மக்களும் – மலையாளம்
6. தோ ஆங்கேன் பாஹ்ரா ஹாத் – இந்தி (பழசு… கண்ணா… பழசு)
7. அய்தே – தெலுங்கு
8. தேவா – கன்னடம் (தமிழில் மது(ஹீரோவாக அல்ல) நடித்த படம்)
9. ராமோஜி ராவ் ஸ்பீக்கிங் – மலையாளம்
10. அம்மா நாணா ஓ தமிழ அம்மாயி – தெலுங்கு


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/01-12-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


28 November 2006

இன்றைய விஷயம் - 28-11-2006 : என்ன படம்… என்ன படம்… ?



இங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளில் ஹீரோவின் கதாபாத்திரப் பெயரும் (ஹீரோயின் பெயரோ கூட) இருக்கும், கூடவே வேறு சில வார்த்தைகளும் இருக்கும். கேள்வி, குறிப்பு வடிவத்தில் ஐந்து வாக்கியங்களில் இருக்கிறது. படத்தின் பெயரைக் கண்டிபிடியுங்கள்.

உ.ம். சபாஷ் மீனா. எங்க ஓரு பூவாத்தா

(அண்ணாமலை, வீரா, அவ்வை சண்முகி போன்ற ஒரே வார்த்தைப் படங்களெல்லாம் இல்லை)

உப குறிப்பு : அந்தப் பெயர் அதே படத்தின் ஹீரோவோ, ஹீரோயினோ தானே தவிர, வேறு படங்களின் கதாபாத்திரப் பெய்ர்கள் இல்லை.

ரெடி… ஜூட்…

1. வாரிசு நடிக, நடிகையர் நடித்த படம். ஹீரோவின் தந்தையும், ஹீரோயின் தாயும் பழங்கால நடிக, நடிகையர்கள். அந்த இன்னொரு வார்த்தை ஒரு ஊரின் பெயர். கோயில்களில் பிரசித்தம் அந்த வார்த்தை.

2. மணிரத்னத்தின் ஒரு படத்தின் ஹீரோதான் இந்தப் படத்தின் ஹீரோவும். படத்தின் பெயரில் அடிமைப்படுத்தியவன் தெரிவான். நிழல்கள் ரவிதான் வில்லன். ‘புதிய தத்துவம்’ என்ற வார்த்தை இந்தப் படத்தில் மிகப் பிரபலம். இந்தப் படத்தின் இணை இயக்குனர், இந்தப் படத்தின் ஹீரோ கூடவே கிட்டத்தட்ட படம் முழுதும் வருவார்.

3. யோவான்தான் கதாநாயகனின் பெயர். PENTAMEDIA தயாரிப்பு. பிரவீன்மணி இசை. படம், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. முன்னாள் அணித்தலைவரின் முன்னாள் காதலியின் தங்கைதான் ஹீரோயின்.

4. ஹீரோ இன்றும் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறார். இந்தப் படத்தின் வில்லனும் சில படங்களில் ஹீரோ. இந்தப் படத்தின் பெயரில் ஒரு பிரபலம் உண்டு. 100வது படம்.

5. கதாநாயகனின் பெயரில் பாதி இந்தப் படத்தின் பெயரில் பாதி. கதாநாயகனின் பெயரில் பாதி இந்தப் படத்தின் பெயரில் பாதி. (மீண்டும், Yet Convicingly – சகாதேவன் மகாதேவன் ரகம் இல்லை). இந்தப் படத்தின் இசையமைப்பாளர், இந்தக் கதாநாயகரின் படத்திற்கு ஒரே முறைதான் இசையமைத்துள்ளார். கடவுளே… கடவுளே. இரு வார்த்தைப் படம்.

6. டீத்தூள் கதாநாயகனின் தந்தை இந்தப் படத்தின் ஹீரோ. மறுபடியும் கடவுளே… கடவுளே… அந்த இன்னொரு வார்த்தை ஒரு ஊரின் பெயர். இந்த ஹீரோ ஒரே ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மாம்பழம் வாங்கலையோ மாம்பழம்… !

7. இந்தப் படத்தின் இரு வார்த்தைகளில் ஒன்று வெளிவந்த பழைய படம் (அதே பெயரில் இன்னொரு புது படமும் வெளிவந்தது) மற்றொன்று வெளிவரப்போகும் படம். முதல் வார்த்தையில் பாதியும் ஒரு படத்தின் பெயரே. (இவன் ரொம்ப நல்லவன்) துஷ்டனைக் கண்டால் தூர விலகு. அரசன் இவன். மிகப்பெரிய வெற்றி பெற்ற படமும் கூட.

8. கதாநாயகியின் பெயர் உண்டு இந்தப் படத்தில். கதாநாயகனின் பெயர் சன்முகசுந்தரம். இந்தப் படத்தின் பெயரில் தொடங்கும் தாத்தாவான நடிகரின் பாடல் ஒன்று உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சியும் உண்டு. இந்தப் படம் ஒரு மைல்கல்.

9. இந்தக் கதாநாயகன் இன்றும் கதாநாயகன். மற்றொரு வார்த்தை ஒரு ஊரின் பெயரே. கதாநாயகனின் பாத்திரப் பெயரில் எங்களின் ஒரு படமும் உண்டு. இதே கதாநாயகி இவருடன் பல படங்களில் நடித்தார் (தோராயமாக 5, 6 படங்கள்). இந்தக் கதாநாயகன் நடித்த மற்றொரு படம் ‘சுயம்வரம்’ (இதெல்லாம் ஒரு க்ளூவா… ? )

10. காதலன் படத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி வித்தியாசமாகச் சொல்லும் வார்த்தைதான் இந்தப் படத்தின் கதாநாயகன். எங்கள் வீட்டுப் பிள்ளை படத்திற்கும், இந்தப் படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தப் படத்தின் ஒரு வார்த்தையில் நவரச நாயகனின் படத்தின் பாதி ஒளிந்திருக்கிறது. (அந்தப் படத்தின் நாயகி சௌந்தர்யா… ) இந்தக் கதாநாயகனின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று இது. மோனைப் படம் இது. (பெண்கள் வீட்டின் கண்கள் மாதிரி... முதல் வார்த்தையிலும், மூன்றாம் வார்த்தையிலும் மோனை இருக்கும்)

நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-11-2006.html) சொடுக்கவும்


மீண்டும் சந்திப்போம்.

+ நேசத்துடன்… இரா. அரங்கன்.


24 November 2006

இன்றைய விஷயம் : 24-11-2006 – இந்த ஹீரோ எந்தப் படம் ?


ஹீரோவின் கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்.


1. இந்து
2. மெட்ராஸ்
3. சாம்ராஜ்
4. பாலுத்தேவர்
5. பட்டாசு
6. மல்லி
7. நாகராஜசோழன் M.A. M.L.A
8. டைகர்
9. பர்மா
10. மதனகோபால் (மைக்கேல் மதன காமராஜன் இல்லை)



விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/24-11-2006.html) சொடுக்கவும்...


மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…


22 November 2006

இன்றைய விஷயம் : 22-11-2006 – இந்த வரிசையில் சேராதது என்ன ?



வரிசையில் நான்கு படங்கள் தரப்பட்டுள்ளன. அதில் மூன்று படங்களில் ஒரு ஒற்றுமை உண்டு. நான்காவது படத்தில் அந்த ஒற்றுமை இல்லை. அது என்ன படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். (கேள்விகளிலேயே ஒரு ஒற்றுமை இருப்பதையும் நீங்கள் காணலாம்.)

ஒரு முக்கியக் குறிப்பு : ஒரே ஒற்றுமை இரண்டு வரிசைகளுக்கு இல்லை…


Find the ODD MAN out… ?


1. ஜென்டில்மேன், காதலன், சக்தி, ஸ்டார்

2. ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ்

3. ஜென்டில்மேன், முதல்வன், அந்நியன், பாய்ஸ்

4. ஜென்டில்மேன், வானமே எல்லை, ரோஜா, பாஞ்சாலங்குறிச்சி

5. ஜென்டில்மேன், நேசம், வின்னர், இந்தியன்

6. ஜென்டில்மேன், முதல்வன், ஜெய்ஹிந்த், வாத்தியார்

7. ஜென்டில்மேன், காதலுக்கு மரியாதை, லவ்டுடே, கோல்மால்

8. ஜென்டில்மேன், ஆய்த எழுத்து, திருடா திருடா, வண்டிச்சோலை சின்னராசு

9. ஜென்டில்மேன், பாட்ஷா, வீரா, அண்ணாமலை

10. ஜென்டில்மேன், பம்மல் K. சம்மந்தம், காதலன், அந்நியன்



விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/22-11-2006.html) சொடுக்கவும்...

நீங்களும் முயற்சிக்கலாமே… !


மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…




16 November 2006

இன்றைய விஷயம் : 16-11-2006 – இந்தப் பொருள் எந்தப் படத்தில் வரும்…



ஒரு பொருளைப் பற்றிய சிறுகுறிப்பு (சிறுகவிதை) தரப்படும். அந்தப் பொருளைக் கண்டுபிடித்து, எந்தப் படத்தில் அது நினைவில் நிற்கும் வகையில் வந்தது எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குளிருக்கு இதம்
காதலுக்கு அடையாளம்
கண்டுபிடி என்ன அது… ?

2. அச்சடித்த காகிதமோ நிலைக்குது…
ஆறடியில் மனிதனையும் குலைக்குது…

3. பொய்யாய்க் கண் சிமிட்டும்…
பொற்பாதம் அடி வைத்து நடக்கும்…

4. பருவம் எழுதிய
மூன்றாம் புருவம்…

5. பச்சை நிறமே… உன்னை
அசோகர் நட…
அரசாங்கம் எடுக்கிறதே… !

6. போகும் இடமெல்லாம்…
பேச்சுத் துணையாய்க் கூட வரும்
நவ நாகரீகத் தோழி…

7. எலும்புக்கூடு (நேரடிக் குறிப்பு)

8. கண்ணுக்கு அழகு…
கலைஞருக்கும் அழகு…

9. நீ அழைத்தால்… நான்
எங்கிருந்தாலும் ஓடி வந்து…
உடனே நிற்பேன்…

10. விரலில் ஒன்று இந்தப் பெயரோடு உண்டு…
முன்னே சேர்த்திடு ‘ஓம்’ என்ற வார்த்தை…

11. முதுமைக்கு இது அழகு…

12. பழவகை ஒன்று
பாவம் முடிவாய்…
வந்தது கூடையோடு…

13. இசைப்பெட்டி… கொஞ்சம் பெருசு…

14. மாங்கா மச்சம்… (நேரடிக் குறிப்பு)

15. ‘அஞ்சாம் நம்பர் சன்னதி தெரு திருவல்லிக்கேணி’ என்று பின்பக்கம் எழுதப்பட்ட போட்டோ… (நேரடிக் குறிப்பு)


நீங்களும் முயற்சிக்கலாமே…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/16-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


13 November 2006

இன்றைய விஷயம் : 13-11-2006 - கொஞ்சம் கவனிக்கவும்...



ஒரு கதாபாத்திரம், அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பக் கலைஞரின் பெயர், மற்றும், அந்தத் தொழில் நுட்பக் கலைஞரோடு தொடர்புள்ள படத்தைப் (படங்களைப்) பற்றிய குறிப்பு.

இன்னும் விளக்குகிறேன். முதல் குறிப்பு - ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம், இரண்டாவது குறிப்பு - அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட ஒரு தொழில்நுட்பக் கலைஞர், மூன்றாவது குறிப்பு - அந்தத் தொழில்நுட்பக் கலைஞர் பணிபுரிந்த படம் அல்லது படங்கள் பற்றிய செய்தி. இதில் முதல் குறிப்பிற்கும், மூன்றாவது குறிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது குறிப்புகளுக்குத் தொடர்பு உண்டு.

முடிந்தால் அந்தத் தொழில்நுட்பக் கலைஞரின் பெயரைக் (Infact, அந்தக் கதாபாத்திரப் பெயரும் அதேதான்) கண்டுபிடியுங்கள்…

1. ஒரு கல்லூரி இளைஞர் (விலாசம் தவறிக் காதலித்தும் பார்ப்பார்), ஒரு இயக்குனர் – காதலைப் பற்றிய படங்களை மட்டுமே எடுப்பார்.

2. ஆசாரமான குடும்பத்தில் படத்தில் (நகைச்சுவை) ஒரு பொறுப்பில்லாத இளைஞர், ஒரு ஒளிப்பதிவாளர் – இரண்டு, மூன்று படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.

3. மிகப்பெரிய படத்தில் வில்லன், ஒரு படத்தொகுப்பாளர் – இன்றைய இளைஞர்களின் Choice இவர்தான்.

4.ஓர் வித்தியாசமான இரட்டை வேடப் படத்தில் ஒருவர், ஒரு இசையமைப்பாளர் (சுமாராகப் பிரபலம்) – மெலடி பாடல்களின் தற்கால மன்னர்.

5. ஒரு வக்கீல் (இரட்டை வேடத்தில் ஒன்று), ஒரு நடிகர் – கிட்டத்தட்ட மிகப் பெரிய மனிதர்.

6. பஸ்ஸோடு தொடர்புள்ள படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவர், நடன இயக்குனர் – ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களோடும் பணிபுரிந்தவர்.

7. சூப்பர் ஹிட் படத்தின் நாயகன், சூப்பர் தயாரிப்பாளர் – நீண்ட நாள் கம்பெனி. (This one is a bit misguiding… )

8. தெலுங்கில் இருந்து வந்த படத்தின் நாயகி, ஒரு பிண்ணணிப் பாடகி – மெல்லிசை யுவராணி.

9. நகைச்சுவைக்கு இலக்கணமான படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவர், நடிகர் / இயக்குனர் – பல வெற்றிப் படங்களை எடுத்தவர்.

10. காதலை வித்தியாசமாகச் சொன்ன படத்தின் நாயகர், இசை அமைப்பாளர் (கள்) – ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.


நீங்களும் முயற்சிக்கலாமே…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/13-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

10 November 2006

இன்றைய விஷயம் : 10-11-2006 – ஒரு விடுகதை – ஒரு படம்.



படத்தின் பெயர் ஒரு சிறிய விடுகதையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் கண்டிபிடியுங்கள்.

1. நகைச்சுவைப் பழைய படத்தில் நன்றாகச் செய்தாய் நடிகையே… !

2. மலரே… ! தளபதி நடிகர் தனக்கென இல்லாமல் இருந்தாரே… ! திருப்புமுனை…

3. உலகெல்லாம் ஒரு சொல். ஒரு சொல்லில் உலகம்.

இது வார்த்தை அல்ல. வாக்கியம். நிறைய புதுசு.

4. திசையின் முகப்பு, நவரசம் கொண்டது. வெள்ளி விழாப் படம்.

5. பேசாத இசை. பிச்சிக்கிட்டு ஓடிச்சு…

6. மனமே… ! பாசம், நேசம் எல்லாம் இல்லை… பணமே பகவான்… !! புரிஞ்சிக்கோ…

7. இரு மனங்களின் இணைப்பில் இமயம் வரைந்த சித்திரம். செம பாடல்கள்…

8. சொல்லித்தருபவனும், சொல்லிக்கொள்பவனும் சேர்ந்தால் நகைச்சுவைதான்.

9. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் சொல்வார்,

“என்னை வெளியாளா நினைக்காதீங்க… நான்… “

10. சமையல்காரனும், அவன் மனைவியும்… படத்தின் பெயர்தாங்க… !


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/10-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


08 November 2006

இன்றைய விஷயம் : 07-11-2006 – இந்த இடைவேளைக் காட்சி எந்தப் படத்தில் வரும்.


1. மொட்டை மாடியில் ஹீரோவும், ஹீரோயினும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலைச் சொல்லாமல் சண்டை போட்டுக் கொள்ளும் இடம்.

2. தன்னை எதிர்த்த ஹீரோவை, போலீஸ் வில்லன், அடித்துத் தண்டவாளத்தில் போடும் இடம் (ஹீரோ கஷ்டப்பட்டுத் தப்பித்துவிடுவார்)

3. ஹீரோயினைப் பற்றித் தப்பாகப் பேசியதால், தன் உயிர் நண்பர்களை ஹீரோ அடித்து, அதற்காக வருத்தப்படும் இடம்.

4. தன்னைப் பலமுறை அவமானப்படுத்திய ஹீரோயினின் கழுத்தில் ஹீரோ, பஞ்சாயத்தார் முன்னிலையில் தாலி கட்டும் இடம்.

5. தீவிரவாதி வில்லனைக் கொல்ல, ஹீரோவும் – அவர் படையும் கப்பலில் கிளம்பும்போது, புதிதாக இரண்டு பேர் வரும் இடம். (இடைவேளைக்குப் பிறகு அந்த இருவர் ஹீரோயினும், காமெடியனும் என்று தெரிந்து போகும்)

6. ஹீரோயினைக் கொல்லப்போவதாக, வில்லன், தன் அண்ணனைக் கொன்ற போலிஸ் ஹீரோவை, ஃபோனில் மிரட்டும் இடம்.

7. திருட்டுக் கல்யாணம் செய்து வரும் வழியில், இளம் ஜோடி, போலிஸ் வசம் சிக்கும் இடம்.

8. தான் காதலில் அவமானப்பட்டதையும் மறந்து, தன் பெற்றோர்களைக் கொன்றவர்களைப் பழிவாங்க, ஹீரோ (இருவரில் ஒருவர்) சபதம் செய்யும் இடம்.

9. பல பொய்கள் சொல்லிக் காதல் செய்யும் ஹீரோ, தன் நண்பர்களிடம் ஒரு கட்டத்தில், ‘இப்ப என்னடா பண்றது… பேசாம இண்டர்வல் விட்டுறலாமா… ?’ என்று கேட்கும் இடம்.

10. எட்டு வருடத்திற்கு முன்னால் இறந்ததாக நினைத்த ஹீரோ, உயிரோடு இருப்பது மட்டுமின்றி, தன் மகனின் மரணத்திற்கும் காரணம் அவனே என்று தெரியவரும்போது, வில்லன் அலறும் இடம்.

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/07-11-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

02 November 2006

இன்றைய விஷயம் : 02-11-2006 – இந்த வரிசையில் அடுத்தது என்ன… ?


தரப்பட்ட வரிசையில் அடுத்து இடம் பெறக்கூடியது என்ன என்று (நிச்சயமாக

இரண்டில் ஒன்றுதான்) கண்டுபிடியுங்கள்.


அதாவது, கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் உள்ள ஒற்றுமையைக் முதலில் தெரிந்து

கொண்டு, அதன்பின் இதே வரிசையில் அடுத்ததாக வரக்கூடியது எது என்று பதில்

சொல்லுங்கள்.


ரெடி… ஜூட்… What is next in the sequence… ?


1. சுசீலா, ஸ்ருதி, ஐஸ்வர்யா – மஞ்சுளா or மதுமிதா

2. சுரேஷ் கிருஷ்ணா, K.S. ரவிகுமார், சுந்தர். C – சுரேஷ் கிருஷ்ணா or K.S. ரவிகுமார்

3. ஜீன்ஸ், அமைதிப்படை, நாயகன் – பூவெல்லாம் உன் வாசம் or தீனா

4. ஜீவா, மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றி விழா – அன்பே சிவம் or ஆத்மா

5. மிருதங்க சக்கரவர்த்தி, கோவை பிரதர்ஸ், சாந்தி எனது சாந்தி – பார்த்தால் பசி தீரும் or பாடும் வானம்பாடி

6. உருவங்கள் மாறலாம், மகளிர் மட்டும், பொய்க்கால் குதிரை – நினைத்தாலே இனிக்கும் or பார்த்தாலே பரவசம்

7. இந்தியன், மனிதன் மாறிவிட்டான், அட்டகாசம் – மந்திரப் புன்னகை or பூவிழி வாசலிலே

8. வில்லாதி வில்லன், நான் மகான் அல்ல, தமிழன் – நல்லவன் or நான் சிகப்பு மனிதன்

9. ஊட்டி வரை உறவு, திருவிளையாடல், எதிரொலி – ஒன்ஸ்மோர் or முதல் மரியாதை

10. பாசப் பறவைகள், மாயாவி, அபூர்வ ராகங்கள் – விதி or விண்ணுக்கும் மண்ணுக்கும்


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/02-11-2006.html) சொடுக்கவும்...


மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



31 October 2006

இன்றைய விஷயம் - 31-10-2006 : ஒரு பெயர் – ஒரு படம்


ஒரே ஒரு கதாபாத்திரப் பெயர் தரப்படும். முடிந்தால் படத்தைக் (தமிழ்ப் படம்) கண்டுபிடியுங்கள்.

1. வெள்ளிக்கிழமை ராமசாமி.

2. மவுண்ட்பேட்டன் மகாதேவன். (Tough One… ! )

3. காக்கர்லா சத்தியநாராயணா

4. பாலையா

5. அவினாசி

6. செல்லப்பா

7. D.S.P. தீனதயாளன்

8. வால்பாறை வரதன்

9. கஜா.

10. எழுத்தாளர் பைரவன்

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/31-10-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…

25 October 2006

இன்றைய விஷயம் - 25-10-2006 : இந்த வரிகள் எந்தப் பாடலில் வரும்…



1. ஒரு நாள் போவார்… ஒரு நாள் வருவார்… ஒவ்வொரு நாளும் துயரம்…

2. வெத்தலய மடிச்சு, மாமன் அத கடிச்சு… துப்ப ஒரு இடமில்லையே…

3. நீரோட்டம் போல் எந்தன் ஆட்டம்…

4. உன் நாணம் ஒருமுறை, விடுமுறை எடுத்தால் என்ன… ?

5. நேரம் கூடி வந்த வேளை… நீ நெஞ்சை மூடி வைத்த கோழை…

6. எந்தனது கல்லறையில்… வேறொருவன் தூங்குவதா… ? விதி என்பதா… ? சதி என்பதா… ?

7. ஆரவாரப் பேய்களெல்லாம் ஓய்ந்து விட்டதடா…

8. ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே… அய்யா உன்னை நெனச்சேனே… !

9. சுற்றும் உலகின் விட்டம் தெரியும்… சூரியன் பூமி தூரம் தெரியும்…

10. அரண்மனைய விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/25-10-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்

18 October 2006

18-10-2006 - இன்றைய விஷயம் : மூன்று வார்த்தைகள் - ஒரு படம்.


ஒரு படத்தைப் பற்றிய மூன்று வார்த்தைகள் / குறிப்புகள் தரப்படும்.

அது, படத்தில் வந்த வசனமாகவோ, கதாபாத்திரங்களின் பெயர்களோவோ, பாடல் வரிகளாகவோ, படக்குழுவினரில் யாருடைய பெயராகவோ அல்லது அந்தப் படம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விஷயமாகவும் இருக்கலாம்.

ரெடி… !

1. முருகன், ஐஸ்வர்யா, ஜிகர்தண்டா.


2. தியாகு, ஸ்ரேயா ரெட்டி, நாசர்.

3. மணிபாரதி, கோவா, ஜாலி,

4. அருணாசலம், பழனி, பாகி

5. ஜில், ஜங், ஜக்

6. தங்கமணி, அஷோக், கௌதம்

7. கேசவா, BYE… !, இந்திரன்

8. சந்தியா, All-In-All, காமிரா

9. திருமுல்லைவாயல், கிருஷ்ணஸ்வாமி, Bio-gas

10. அகூந்பதம், கபீம்குபாம், மிருகினஜம்போ


விடைகள் அடுத்த சந்திப்பில்… (நீங்களும் முயற்சிக்கலாம்… ) சென்ற முறை கேள்விகளுக்கான விடைகள் இதோ…

1. கட்டுமரக்காரன்

2. நானே வருவேன்

3. கிழக்காப்பிரிகாவில் ராஜு

4. சார்லி

5. பார்த்திபன், K. S. ரவிக்குமார்

6. லட்சுமிகாந்த் – பியாரிலால்

7. S. P. முத்துராமன்

8. பாலு மகேந்திரா

9. அப்பச்சன்

10. ஹவுஸ்புல், ஏர்போர்ட் இன்னும் பல படங்கள் உள்ளன.

மீண்டும் சந்திப்போம்…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்

12 October 2006

12-10-2006 - இன்றைய விஷயம் : அப்படியா… ! (சில ஆச்சர்யமான செய்திகள் )



1. இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பிண்ணனி இசை அமைத்திருக்கிறார். அது எந்தப் படம் ?

2. ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகமாகக் கருதப்பட்ட படம் எது ? (இந்தப் படம் வெளிவந்தது)

3. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்க இருந்த படத்தின் பெயர் என்ன ? (அந்தப் படம் எடுக்கப்படவேயில்லை)

4. அறிமுகமான படம் முதல் K. பாலசந்தரின் எல்லாப் படங்களிலும் நடித்த நடிகர் யார் ?

5. விக்கிரமன் யாருடைய உதவி இயக்குனராக இருந்து பின்பு இயக்குனரானார் ?

6. ‘உயிரே உனக்காக’ படத்தின் இசையமைப்பாளர் யார் ? (Quite Interesting if you know the answer )

7. ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தின் இயக்குனர் யார் ?

8. கமல் நடித்த ‘சதி லீலாவதி’ படத்தின் இயக்குனர் யார் ?

9. ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்திற்கும் தாம்பரத்தில் உள்ள ‘கிஷ்கிந்தா’விற்கும் இருக்கும் தொடர்பு என்ன ?

10. ‘அந்த நாள்’, ‘பேசும் படம்’, குருதிப்புனல்’ ஆகியவை தவிர தமிழில் வேறு ஏதேனும் பாடல்களே இல்லாத படம் (கள்) உண்டா ?


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/12-10-2006.html) சொடுக்கவும்...

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

29 September 2006

29-09-2006 – இன்றைய விஷயம் : இந்த வசனம் எந்தப் படம் ?


1. ‘இந்த உலகத்துல தோத்தா மக்குன்னு சொல்லுவாங்க… ஜெயிச்சா லக்குன்னு சொல்லுவாங்க… ‘


2. ‘அழைத்து வரவில்லை… திருத்திக் கொள்ளுங்கள்… இழுத்து வரப்பட்டிருக்கிறேன்… ‘


3. ‘ஜெயிக்கிறத்துக்கும், தோக்கறதுக்கும் காதல் ஒண்ணும் பரிட்சை இல்லைங்க… அது ஒரு ஃபீலிங்… ‘


4. ‘காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை… ஆனா… காதல் இல்லாம வாழ்க்கையே இல்லை… ‘


5. ‘நான் செஞ்சது ரைட்டுன்னு சொல்லமாட்டேன்… ஆனா நான் செஞ்சது தப்பில்லை…



6. ‘கோவமோ, சந்தோஷமோ, ஆத்திரமோ, ஆர்ப்பாட்டமோ… எதுவா இருந்தாலும் ஒரு அஞ்சி நிமிஷம் தள்ளிப் போடு… ‘


7. ‘என் ஸ்டைல், சார்ம், கிரேஸ் இதெல்லாம் பார்த்து மயங்கிடுவியோன்னு நீ பயப்படறே… ‘


8. ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்… ஆனால் வாய்தான்… ‘


9. ‘பப்பி ரொம்ப நல்ல குக்… ‘


10. ‘கேக்கறது கடன்பாக்கி… கைல துப்பாக்கியா… ?’



விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்...

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

28 September 2006

28-09-2006 – இன்றைய விஷயம் : ஒரு படம்



பத்து குறிப்புகள்… படம் என்ன என்று கண்டுபிடியுங்கள்… (அவ்வளவு சுலபம் அல்ல… )

1. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் என்பவர்கள் உண்டு.

2. சுமார் 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம்.

3. இந்தப் படம் ஆங்கில sub-titles கொண்டு வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டது.

4. M.K. ராதா கதாநாயகனாக நடித்தார்.

5. இந்தப் படத்தின் தயாரிப்பாளரே இதன் இயக்குனரும் ஆவார்.

6. இந்தப் படத்திற்கு இசை ராஜேஸ்வர ராவ்

7. நகைச்சுவைப் பகுதிகளை N.S. கிருஷ்ணன், T.A. மதுரம் நடித்தனர்.

8. படம் வெளியான ஆண்டு – காந்தி இறந்த ஆண்டு.

9. இந்தப் படத்தில் நடித்த ஒருவர் தன்னுடைய அடுத்த படத்தில் இரட்டை வேடம் கொண்டு நடித்தார்.

10. மிகவும் பிரபலமான ‘DRUM DANCE’ இந்தப் படத்தில் உண்டு.



விடைக்கு இங்கே சொடுக்கவும்...


+ நேசத்துடன்… இரா. அரங்கன்

27 September 2006

27-09-2006 - இன்றைய விஷயம் : எழுத்தாளர் சுஜாதா


ஒரு சிறிய கேள்வி – பதில் பகுதி


1. சுஜாதாவும் பாலசந்தரும் இணைந்த படம் எது ?

2. கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் சுஜாதாவின் பங்கு என்ன ?

3. சுஜாதாவின் “இருள் வரும் நேரம்” என்ற கதை, என்ன பெயரில் படமானது ? அதன் இயக்குனர் யார் ?

4. சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது யார் ?

அ. ஷங்கர் ஆ. கவிஞர் வாலி இ. மணிரத்னம்

5. சுஜாதாவிற்கும், தற்போதைய தேர்தல் முறைக்கும் உள்ள தொடர்பு என்ன ?


6. ஜீவா இயக்கத்தில் சுஜாதா வசனம் எழுதிய படம் எது ?
அ. 12B ஆ. உள்ளம் கேட்குமே


7. திருடா திருடா படத்தில் சுஜாதாவின் பங்கு என்ன ?

8. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் கதைத் தொகுப்பில் வரும் ‘வத்சலா’ என்ற கதாபாத்திரம் நிஜமா, கற்பனையா ?


9. சுஜாதாவும், பாரதிராஜாவும் இணைந்த படங்கள் ?


10. சுஜாதாவின் கதைகளில் வரும் ‘கணேஷ்’ யார் ?

அ. துப்பறியும் நிபுணர் ஆ. போலீஸ் அதிகாரி இ. வக்கீல்



விடைகளுக்கு இங்கே சொடுக்கவும்...



+ நேசத்துடன்… இரா. அரங்கன்

26 September 2006

இப்படிக்கூட ஆரம்பிக்கலாம்...




ஒரு குறுக்கெழுத்துப் புதிர். (CROSSWORD)

தயாரா… ?


இடமிருந்து வலம்

1. இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் – தயாரித்த படம் (4,3)
4. புண்ணியம் – விக்ரம் (2)
5. நாக்ரவி நடிகை (3)
7. அர்ஜுன் நடித்த ஏழு கலர் (4)
8. நாடகம் போடும் இடம் (2)
10. அண்ணன் இயக்கி, தம்பி நடித்த படம் (2)

வலமிருந்து இடம்

9. ஒன்றும் நூறும் சமம். (3)
11. கடவுள் பெயர் – ரஜினி படம் (2)
12. ‘இது’ தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் என்று பிரஷாந்த் பாடுவார். (3,4)



மேலிருந்து கீழ்

1. இதற்குத்தான் விஜய் மரியாதை தந்தார் (5)
6. மூனு தல (5)
13. வீட்டு முகப்பு – இந்த நடிகரின் பெயரும் ____________ விஜய்தான் (5)
2. இ.அ. 23ல் வைகைப் புயல் அடிக்கடி சொல்லும் பெயர் (கொஞ்சம்
பிழையோடு) (6)
14. திமிர் பிடித்த சண்டைக்கோழி (3)
5. இப்படின்னு ஒரு காதல் (2)



கீழிருந்து மேல்

1. மீனுக்கு இன்னொரு பெயர் (3)




விடைகளுக்கு
இங்கே சொடுக்கவும்...

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

என்ன சொல்லப் போகிறாய்… ?


பத்து முறை விழுந்தவனை
பார்த்துச் சொன்னாள் பூமித்தாய்
ஒன்பது முறை எழுந்தவனே… !
இன்னும் ஒரு முறை
முயன்று பாரேன்… !


முயற்சி… ! இதுதான் என் அடிப்படை, அஸ்திவாரம், ஆதாரம் எல்லாமே.

சும்மா நேரத்தை வீணாக்காமல்…

வாங்க… ! சினிமா பற்றிப் பேசலாம்… !

+ நேசத்துடன்… இரா. அரங்கன்