01 March 2010

இன்றைய விஷயம் : 01-03-2010 – தமிழ்ச் சினிமாவில் அந்தாக்‌ஷரி

பத்து ஜோடி தமிழ்ப் படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜோடியின் முதல் படப்பெயரின் கடைசி எழுத்துதான் அதே ஜோடியின் இரண்டாவது படப்பெயரின் முதல் எழுத்து. (உம்., திருடா திருடா-டார்லிங் டார்லிங் டார்லிங்)

ரெடி... ஜூட்...

1. மெதுவாகக் கதவு திறந்து உச்சி வகுந்தெடுத்தது காற்று.
2. நகைக் கடையில் வேகாமாக மோசடி செய்யும் படா தோஸ்துகள்.
3. சரவணனோடு இண்டிகாமுக்காக அவதாரம் எடுத்த அந்நியன்.
4. ஜட்ஜ் அண்ணாவும், ரவுடி தம்பியும் பின்னே ருக்குவென்ற கலெக்டரும்
5. கண் விழித்த வெள்ளைக்கார முத்தத்தில் கரைந்த வண்ணம்.

6. நல்ல பேரை வாங்காமல் கல்யாணத்தையே நிறுத்தப் பார்த்தவர்கள்
7. பரிட்சை ஒண்ணும் காதல் இல்லை-கவுண்டரையே குழப்பிய பழய படம்
8. ஒரே ஜீவனான ஒருவரைக் கொன்றது அபிராமிஉமாமகேஸ்வரியா ?
9. ஹோசானா கேட்டு லூசானது பசங்களும், ஒரு குட்டிப் பறவையும்தான்.
10. கர்ணன் கதையும் கை, காலை விட்டு தலய மட்டும் எடுப்பவரும்.

நீங்களும் முயற்சிக்கலாமே... மீண்டும் சந்திப்போம்... +நேசத்துடன்... இரா. அரங்கன்