23 June 2008

இன்றைய விஷயம் : 23-06-2008 – தமிழ்ச்சினிமாவில் வினோதத் தொடர்ச்சி


தரப்பட்டிருக்கும் குறிப்புகளில் இருந்து ஜொடியான இரண்டு தமிழ்ப்படங்களின் பட்டியலைக் கண்டுபிடியுங்கள். முதல் படத்தின் பெயரின் கடைசி வார்த்தைதான், இரண்டாது படத்தின் பெயரின் முதல் வார்த்தை. (உம். உன்னால் முடியும் தம்பி – தம்பி தங்கக் கம்பி) இந்த இரு படங்களில், முதல் படத்தின் கடைசி வார்த்தைதான் இரண்டாவது படத்தின் முதல் வார்த்தை. என்ன... புரிஞ்சுதா,,, ? இரண்டு படங்களுக்கான குறிப்புகளும் ‘+’ ஆல் வேறுபடுத்தப்பட்டுள்ளன.

1. பூவே செம்பூவே + ஜெயராம் – குஷ்பு ஜோடியின் மூன்றில் ஒன்று.
2. இவங்க ஜோடி ஜோர்யா (பேர்லயே கூட) + கூர்கா இயக்குனரின் தமிழர் விளையாட்டு.
3. சென்னை பட்டணம் + சுஜாதா, P.C கூட்டணி.
4. தக்காளி ராஜ்கபூர் + கலைப்புலியின் கோட்டை
5. லைலா - மணியின் பிரியமான சிஷ்யை + கவிப்பேரரசின் தேசிய விருதும்
6. சூப்பர் ஸ்டார் மிருகமாக + சுப்பரும் இல்லாமல் குட்-ஆகவும் இல்லாத இரண்டாது புதல்வன்.

7. வில்லுக்கு சமஸ்கிருதம் – முதல் படம் + என்னடி மீனாட்சி
8. நேற்று போல் இன்று இல்லை + இது என்ன ஊர்... சிங்கப்பூர்...
9. புரட்சித் தலைவர் JB-யாக + வைஷ்ணவியும் பொம்மைப் பேயும்...
10. அது பரிட்சை இல்லை... ஒரு ஃபீலிங் + குண்டலகேசியாக கவுண்டர்

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்... இரா. அரங்கன்…