இன்றைய விஷயம் : 09-04-2008 – தமிழ்ச்சினிமாவும் பறவைகளும்...
தமிழ்ப்படப்பாடல்களில் சிலதில் முதல் வார்த்தையில் ஒரு பறவையின் பெயர் அமைந்திருக்கும் (றெக்கை இருப்பதெல்லாம் பறவைகளே !) அப்படிப்பட்ட பாடல்கள் / படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தைக் கண்டுபிடித்து பாடலையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. மலேயா போலிசாக M.R. ராதா நடித்த படம் (தாதா மிராஸி)
2. இருக்கு… ஆனா இல்லை…
3. ஆங்கிலப் பறவையே… ஆங்கிலப் பறவையே… (இது பாடலின் ஆரம்பம்)
4. நூ ஒஸ்தானண்டே நேனு ஒத்தண்டானா…
5. தேங்காய் சீனிவாசன் – ராதிகா (அன்பே… என்ன ஒரு ஜோடி… !)
6. சிம்பாஸ்தேவாரம் நடித்த படம்…
7. சோலையம்மாவும், ஓ போடு நாயகியின் பெயரைத் தன் பெயரோடு ஒட்டிக் கொண்டுள்ளவரும் நடித்த படம்…
8. வினிதாவும், விருதாலம் சட்டமன்ற உறுப்பினரும் ஜோடியாகப் பாடிய பாடல்.
9. நந்தகோபாலாஆஆஆ… குமாரிஈஈஈ… இது இரண்டும் ஹீரோ, ஹீரோயின் பெயர் இல்லை… ஆனால் படத்தில் இந்த வார்த்தைகள் வரும்…
10. ஒரு பழைய குழந்தைகள் விளையாட்டு… சம்மனமிட்டு உட்கார்ந்துகொண்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி ஒருவர் பாட, மற்றவர்கள் விளையாடுவார்கள். (அப்பாடா… சுத்தி வளைச்சு க்ளூ கொடுத்தாச்சு… )
நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… இரா. அரங்கன்…