19 January 2007

இன்றைய விஷயம் : 19-01-2007 : தமிழ்ப் படப் பெயரும், பாடலின் தொடக்கமும் ?



தமிழ்ப் படப் பெயர்கள் சில ஏதோ ஒரு பாடலின் தொடக்க வரியாக இருக்கும். அப்படிப்பட்ட சில பாடல்களின் நடு வரிகள் தரப்பட்டுள்ளன. பாடலின் தொடக்கத்தை, அதாவது, தமிழ்ப் படப் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Simple. நடுவரிகள் தரப்பட்டுள்ள பாடலின் தொடக்க வரிகள் ஒரு தமிழ்ப் படத்தின் பெயர். அது என்ன ?

உப குறிப்பு – 1 : பாடல் அதே படத்தில் இடம் பெற்றிருக்காது.

உ.ம்.
1. அண்ணாமலை அண்ணாமலை
படம் : அண்ணாமலை.

2. காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
படம் : காதலிக்க நேரமில்லை.

இது மாதிரி இல்லை.

உப குறிப்பு – 2 : எந்தப் படமுமே ஒரு வார்த்தைப் படம் அல்ல (குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகளாவது உண்டு.)

உப குறிப்பு – 3 : சில கேள்விகளுக்கு மட்டும் கண்டுபிடிக்க வேண்டிய படத்தைப் பற்றிய குறிப்பும் தரப்பட்டுள்ளது. (IN BRACKETS)

ரெடி… ஜூட்… (அப்பாடா… ! ஒரு வழியா கேள்விகளுக்கு வந்தாச்சு)

1. போகப் போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும். (அஜித் – ராஜ்கபூர்)

2. சட்டென்று… சலனம் வரும் என்று… ஜாதகத்தில் சொல்லலையே…

3. பெண்ணாலே கெட்டு… போவேனோ என்று…
ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.

4. தங்கச் சிலைபோல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே…

5. ஐயாவோட மானம்… அந்தக் கவரி மான மீறும்…
அந்தக் கவரி மானு பரம்பரைக்கே உன்னாலதான் பேரு…

6. பெண்ணென்றாள் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ…
(பிரபு – மந்த்ரா)

7. இடது விழியில் தூசி விழுந்தால்… வலது விழியும் கலங்கி விடுமே… (நிவேதா)

8. கால் போன பாதைகள் நான் போனபோது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…

9. காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்…
காற்றிடம் கோபம் கிடையாது…

10. எனக்குக் கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… (விஜயகாந்த் படம்)

நீங்களும் முயலுங்களேன்… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/19-01-2007.html) சுட்டுங்கள்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…