21 April 2008

இன்றைய விஷயம் - 20-04-2008 : தமிழ்ச் சினிமாவில் உறவுகள்


தமிழ்ப் படப் பெயர்களில் சிலவற்றில் உறவுகள் ஒளிந்திருக்கும். (உம். அன்புள்ள அப்பா) அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. சினிமாப் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப-குறிப்பு 1 : எந்த உறவும் இரண்டு முறை தரப்படவில்லை.
உப-குறிப்பு 2 : படங்களின் பெயர்களில் இடம்பெற்ற உறவுகள் (+ சில additional உறவுகள்)கேள்விகளுக்குக் கீழே தரப்பட்டுள்ளன (வரிசையாக அல்ல)

1. இட்லி நடிகையும், இன்று போய் நாளை வந்த நடிகரும் இணைந்த படம்…
2. வெத்தலை மடிச்சு கொடுத்த பொம்பளையாக ஊர்வசி நடித்த படம்…
3. வி. சேகர் இயக்கத்தில் ஜனகராஜ் மாமனார்…
4. வைதேகி காத்திருந்தாள் (விஜயகாந்த்+ரேவதி+சுந்தர்ர்ராஜன்) வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றிப்படம்…
5. கங்கை அமரன் இயக்கத்தில் செல்வா, ரஞ்சிதா நடித்த படம்…
6. வேலுத்தொண்டைமானாக A. Ars நடித்த படம்.
7. பராசக்தியில் உடன்பிறப்புதான் இதிலும் உடன்பிறப்பு (சிம்புவும் உண்டு)
8. கபி… கபி… மேரே தில் மே… (தமிழ் படத்தில் வந்த காமெடி குட்டிப் பாடல்-தாடிக்காரர்)
9. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று M.G.R பாடிய படம்…
10. நாரதர் நாயுடுவா அப்பாவின் அண்ணன்… !


(அண்ணன், அக்கா, அம்மா, தங்கை, மாமனார், மாமன், அத்தை, தம்பி, மச்சினி, மச்சான், மாமியார், மாப்பிள்ளை, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி)

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + இரா. அரங்கன்…