08 April 2010

இன்றைய விஷயம்: 08-04-2010 – எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்

கீழே தரப்பட்டுள்ள டெலிபோன் சம்பாஷனையில் எத்தனை தமிழ்ச் சினிமாப் பெயர்கள் ஒளிந்துள்ளன (32ம் கண்டுபிடிச்சா கில்லாடிதான்).

குறிப்பு: எந்த சினிமாவும் ரிப்பீட் இல்லை.
உபகுறிப்பு: வார்த்தைகளை உடைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் சினிமாக்கள் இல்லை. (உம். ) ராஜா சின்ன ரோஜா என்பது ஒரே பெயர்தான். ராஜா, சின்ன ரோஜா, ரோஜா என்று மூன்று பெயர்கள் இல்லை.

ரெடி... ஜூட்...

-----------------------------------------
“ஹலோ... ஐயா... நான் ஏழுமலை பேசறேன்”
“யார்... ? புரோக்கரா ?”
“ஆமாம்... நம்ம சரோஜாவுக்கு நல்ல நேரம் வந்துடுச்சி... ஒரு சூப்பர் வரன் இருக்கு... “
“இடம் எப்படி ?”
”பெரிய குடும்பம்... பூர்வீகம், தஞ்சாவூர் சமஸ்தானம்... ரெண்டு பசங்க... ஒரு மகன்... ஒரு மகள்... அப்பா இல்லை... அம்மா மட்டும்தான்... ஊட்டில பெரிய டீ எஸ்டேட் இருக்கு...”
“ஜாதகம்... ?”
“அம்சமான ஜாதகம்... ரோகினி நட்சத்திரம்... கன்னி ராசி...”
“ஆஹா... இவ துலாம்... மேல சொல்லு... “
“அப்பறம் என்ன... தம்... தண்ணி... எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது... ”
“இந்தக் காலத்துல இப்படியா... நிஜமாத்தான் சொல்றியா ?”
“உங்ககிட்ட பொய் சொல்லுவனா... ? தம்பி நமக்கு ரொம்பப் பழக்கம்... என் பையனோடத்தான் படிச்சான்... ப்ரெண்ட்ஸ்”
“அப்படின்னா உடனே முடிச்சிட வேண்டியதுதான்... சரி... நம்மால தீபாவளி முடிஞ்சிதான் கல்யாணம் வெக்க முடியுங்கிறதையும் சொல்லிட்டியா”
“சொல்லிட்டேன்... அவங்களுக்கும் சம்மதம்...”
“முருகா... எல்லாம் உன் அருள்... “
“அப்ப... வர்ற 20ம் தேதி மதியம் 3-4 அவங்களைப் பொண்ணு பாக்க வரச்சொல்லட்டுமா... “
“இருய்யா... அவசரப்படறியே... மொதல்ல பையனோட வீட்டு முகவரி, கம்பெனி விலாசம் ரெண்டும் சொல்லு... நம்ம போலீஸ் சகலை கிட்ட சொல்லி விசாரிப்போம்...”
“சரிங்க... M. குமரன், S/o மகாலட்சுமி, 7G ரெயின்போ காலணி, அண்ணா நகர் முதல் தெரு, ராஜகாளியம்மன் கோவில் அருகில், சென்னை-600028”
”ரொம்ப நல்லது... அப்பறம் என்ன... ?“
“வந்துங்க... உங்களுக்காக வெயில் மழைன்னு பாக்காம அலைஞ்சி இந்த இடம் புடிச்சேன்... வந்து... வந்து... “
”புரியுது... சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வீட்டாண்ட வா...”
“ரொம்ப சந்தோஷம்... வெச்சிடவா...”

“சரி...”
-----------------------------------------
நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... +நேசத்துடன்... இரா. அரங்கன்