04 June 2007

இன்றைய விஷயம் : 04-06-2007 : தமிழ் சினிமா – வில்லன் எப்படி இறப்பான் ?


தமிழ்ப் படங்கள் சிலவற்றில் வில்லன் இறக்கும் விதம் தரப்பட்டுள்ளது. அது எந்தப் படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே பார்க்க, கத்தியால் குத்துப்படுவார்.

2. தன்னுடைய தங்கக் காரில் இருந்தபடியே உருகி இறப்பார்.

3. சர்க்கஸ்ஸில் சிங்கத்தால் கொல்லப்படுவார்.

4. உயிர்ப்பிச்சை அளித்த ஹீரோவைக் கொல்ல ஓடி வரும்போது லாரி இடித்து தூக்கி வீசப்படுவார்.

5. கூடப்பிறந்த அக்காவைக் கொன்றதற்காக சொந்தத் தம்பியாலேயே கத்தியால் குத்துப்பட்டு இறப்பார்.

6. இரண்டு வில்லன்களில் ஒருவன் தலைகீழாகத் தொங்கியபடியே, இன்னொருவனுக்கு மின்சார ஷாக் கொடுத்துக் கொல்லுவான்.

7. வில்லனைக் காரில் தப்பிக்கவிட்டு, சிந்திய பெட்ரோலில் குச்சி கிழித்துப் போட்டு, Close பண்ணுவார், bad man ஹீரோ.

8. உடல் முழுவது பட்டாசு சுற்றியும், ஹீரோவிடம் கிண்டலாகப் பேச, ஹீரோ தீக்குச்சியால் ராக்கெட் பற்றவைத்து அனுப்பி, அதனால் காலி.

9. பழிவாங்கும் ஹீரோ, வில்லனை ஹெலிகாப்டரில் இருந்து தள்ளிவிட, வில்லன் தொங்கியபடியே. கெஞ்சியபடியே உயிரை விடுவார்.

10. சொல்லச் சொல்லக் கேட்காத வில்லனை, ஹீரோ, பொட்டல் காட்டில், ஒரு உணர்ச்சி வேகத்தில் அய்யனார் அரிவாளால் ஒரே சீவு.


நீங்களும் முயற்சிக்கலாமே… !

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.