இன்றைய விஷயம் : 09-05-2007 : ஜோடி போட்டுக்கிறலாமா… ஜோடி… !
சாதாரண கேள்வி பதில்கள்தான்… கொஞ்சம் வேற மாதிரி…
1. விஜய்யுடன் இணைந்து அதிகப் படங்களில் நடித்தவர் யார் ?
அ. விவேக் ஆ. நாசர் இ. ஸ்ரீமன்
2. இவர்களின் யார் நடித்த படங்களுக்கு A.R. ரஹ்மான் அதிகமாக இசையமைத்துள்ளார் ?
அ. சிம்ரன் ஆ. பிரபுதேவா இ. மாதவன்
3. கமல் நடித்த படங்களை இவர்களில் யார் அதிகமாக இயக்கியுள்ளார் ?
அ. சந்தானபாரதி ஆ. சுரேஷ் கிருஷ்ணா இ. சிங்கீதம் சீனிவாசராவ்
4. இவர்களில் எந்த ஜோடி அதிகப் படங்களில் நடித்துள்ளனர் ?
அ. ஜெயராம்-குஷ்பு ஆ. கமல்-ஊர்வசி இ. சரத்-மீனா
5. கேமராமேன் இயக்குனர்களில் இவர்களில் யார் அதிகப் படங்களை எடுத்துள்ளார் ?
அ. தங்கர் பச்சான் ஆ. ராஜீவ் மேனன் இ. ஜீவா
6. இவைகளில் எந்தக் கூட்டணி அதிகப் படங்களைத் தந்துள்ளனர் ?
அ. செல்வா-கவிதாலயா ஆ. தரணி-சூர்யா மூவிஸ் இ. Super Good – விக்ரமன்
7. இவர்களில் எந்த இயக்குனரின் இரண்டாவது படம் மிகத் தாமதமாக வெளிவந்தது ?
அ. பாலா ஆ. தரணி இ. ராஜகுமாரன்
8. இவர்களில் யார் அதிக முறை தேசிய விருது வாங்கியுள்ளார் ?
அ. வைரமுத்து ஆ. A.R. ரஹ்மான் இ. பார்த்திபன்
9. ரஜினிக்காக அதிகப் படங்களை இயக்கியவர் யார் ?
அ. பாலசந்தர் ஆ. SP. முத்துராமன் இ. சுரேஷ்கிருஷ்ணா
10. மலையாள நடிகர்களில் யார் அதிகத் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் ?
அ. மம்முட்டி ஆ. ஜெயராம் இ. மோகன்லால்
நீங்களும் முயற்சிக்கலாமே…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…