இன்றைய விஷயம் : 03-05-2007 : தமிழ்ச் சினிமா + பெண்கள் அலங்காரப் பொருட்கள்.
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில, பெண்கள் அலங்காரப் பொருட்களின் பெயர்களில் தொடங்கும். அப்படிச் சில பாடல்கள் இடம் பெற்ற படங்களின் பெயர்களோ அல்லது வேறு குறிப்புகளோ தரப்பட்டுள்ளன. பாடலையும், அலங்காரப் பொருளையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப-குறிப்பு – 1 : அதிக பட்சம் பாடலின் இரண்டாவது வார்த்தையிலேயே அந்தப் பொருள் இடம் பெற்று விடும்.
1. தூறல் நின்னு போச்சு.
2. பெண்புத்தி முன்புத்தி (கால்)
3. தாடி வைத்த கமல் + ஆஷா போன்ஸ்லே
4. விக்ரம், ஜோதிகா, ஹரி, இடுப்பு
5. மைக் மனிதன், கதிர், சின்னி ஜெயந்த் (நெற்றி)
6. இந்தியன் அமிர்தம் + செவாலியே புத்திரன் + ஜட்கா வண்டி
7. ஜனகராஜ் பாடும் பாட்டு (வைத்தால் பச்சை காய்ந்தால் சிவப்பு)
8. மகேந்திரன் இன்னொரு அற்புதம், (கால் விரல்)
9. கண்ணாடி போட்ட ஹீரோ, ஹீரோயின், அவர்கள் பையன் (பாக்யராஜ்)
10. தாய் சொல்லைத் தட்டாதே (என்னமோ ஒண்ணு காற்றாட)
நீங்களும் முயற்சிக்கலாமே…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.