02 November 2014

இன்றைய விஷயம்: 02-11-2014: தமிழ்ப்படங்களில் ஆண்பாலும் பெண்பாலும்...


தமிழ்ப் படப் பெயர்களில் சில, இரண்டு வார்த்தைகளைக் கொண்டிருக்கும். அந்த இரண்டு வார்த்தைகளில், ஒரு வார்த்தை ஆண்பாலையும், இன்னொரு வார்த்தை பெண்பாலையும் குறிக்குமாறு அமைந்திருக்கும்.

உ.ம் ராஜா ராணி (இதில் ராஜா-ஆண்பால், ராணி-பெண்பால்)

அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு தமிழ்ப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு: எல்லாப் படங்களின் பெயர்களுமே இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டிருக்கும்.

1. டீச்சரோடு மட்டுமே கல்யாணம்...
2. இந்த சர்தார்ஜி டீ குடிப்பார்...
3. ஹீரோயினின் காதலன்தான் ஹீரோ என்றால் இந்தப் படத்தில் விஜய்  ஆதிராஜ்தான் ஹீரோ...
4. பை எலக்சன் பரமசிவம் குரு தனபால்
5. கல்கியின் படைப்பில் கசமுசா நடிகரா... !
6. செல்லமே-நண்பனே-இரண்டாவது படமே...
7 இன்று வரை இமயத்திற்கு இதுதான் கடைசி படம்
8 ஊர்ப்பெரியவரின் காதலி யா(கா)ராயிருந்தால்தான் என்ன?
9. மூவேந்தரில் ஒருவரின் முதல் படம்... செம படம்...
10. ஸ்டேட்ட விட்டு ஸ்டேட்டு... சேட்ட விட்டு சேட்டு


நீங்களும் முயற்சிக்கலாமே...


+ நேசத்துடன்... இரா. அரங்கன்...