21 February 2007

இன்றைய விஷயம் : 21-02-2007 – தமிழ்ச் சினிமாப் பாடல்களில் வித்தியாசப் பூக்கள்…


தமிழ்ப் படப் பாடல்களில் சில பூக்களின் பெயரில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளில் இருந்து தமிழ்ப் பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு-1 : ஒரே பூ இரண்டு பாடல்களுக்கோ, ஒரே படத்தில் இருந்து இரண்டு பாடல்களோ இல்லை. பத்து பூக்கள். பத்து பாடல்கள். பத்து படங்கள்.
உப-குறிப்பு-2 : ரோஜா, மல்லிகை இரண்டு பூக்களும் எந்தப் பாடலிலும் இல்லை.
உப-குறிப்பு-3 : பூவின் பெயர் பாடலின் முதல் வார்த்தையிலேயே இருக்கும்.

ரெடி. ஜூட்…

1. பாரதியின் பளார் வரிகள்-இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் பெயர்.
2. தாவணிக்கனவுகள் படத்தில் வரும் சிகப்புத் தாமரைப் பாட்டு.
3. ஸ்ரீதர் ரஜினியை வைத்து எடுத்த படத்தில் வரும் பாட்டு.
4. “இதுவரை எங்கள் கிராமத்திற்குத்தான் சினிமா வந்திருக்கிறது. முதன்முதலாக எங்கள் கிராமம் சினிமாவில் வந்தது இந்தப் படத்தில்தான்” என்று வைரமுத்து பாராட்டிய படத்தில் வந்த பாட்டு.
5. இரண்டு சிவாஜி (ஒருவன் உத்தமன்) படத்தில் வந்த கானடா ராகத்தில் அமைந்த பாட்டு.
6. பாரதிராஜாவுக்காக வித்யாசாகர் இசையமைத்த ஒரே படத்தில் வந்த பாட்டு.
7. ஒரு நாள் கூத்து படத்தில் வந்த குட்டிப் பாட்டு. விருந்தினரோடு சம்பந்தம்.
8. அரவிந்த்சாமி – ரேவதி இணைந்த படத்தில் வரும் பாட்டு.
9. தலைவர் படப் பாட்டு. தமிழ்ப் பூவின் ஆங்கிலப் பெயர்.
10. விஜய் படத்தில் உள்ள இந்தப் பாடல் இப்படி தொடங்கும். “கலர்… கலர்… கலர் பூ… “

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2007/02/21-02-2007.html
) சொடுக்கவும்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…