25 November 2010

இன்றைய விஷயம்: 25 Nov 2010 – தமிழ் சினிமா – ஒரு அந்தாதி

பத்து தமிழ்ப் படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

குறிப்பு: ஒரு படத்தின் கடைசி எழுத்துதான் அடுத்த படத்தின் முதல் எழுத்து. உம். மின்னலே – லேசா லேசா...

உப-குறிப்பு: 6வது படம் ‘மிளகா’

ரெடி... ஜூட்...

1. சொர்ணமாஷாலினியா
2. பிரகவுண்டமந்த்ராணிபு
3. ரமேஷெரிதனுகண்ணாஷ்
4. மைபேய்ரலிவிசா
5. கோட்டாத்ரிவிக்ரஷா
6. மிளகா (படம் பெயரே இதுதான்)
7. ஜீவன்ஜோதிசூகார்யா
8. கவுண்டரேவபிரதிபுமணி
9. பாகல்பரானாஜ்
10. மாதஜோவதிகான்

நீங்களும் முயற்சிக்கலாமே...

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

08 April 2010

இன்றைய விஷயம்: 08-04-2010 – எத்தனை சினிமா ஒரு டெலிபோன் பேச்சில்

கீழே தரப்பட்டுள்ள டெலிபோன் சம்பாஷனையில் எத்தனை தமிழ்ச் சினிமாப் பெயர்கள் ஒளிந்துள்ளன (32ம் கண்டுபிடிச்சா கில்லாடிதான்).

குறிப்பு: எந்த சினிமாவும் ரிப்பீட் இல்லை.
உபகுறிப்பு: வார்த்தைகளை உடைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் சினிமாக்கள் இல்லை. (உம். ) ராஜா சின்ன ரோஜா என்பது ஒரே பெயர்தான். ராஜா, சின்ன ரோஜா, ரோஜா என்று மூன்று பெயர்கள் இல்லை.

ரெடி... ஜூட்...

-----------------------------------------
“ஹலோ... ஐயா... நான் ஏழுமலை பேசறேன்”
“யார்... ? புரோக்கரா ?”
“ஆமாம்... நம்ம சரோஜாவுக்கு நல்ல நேரம் வந்துடுச்சி... ஒரு சூப்பர் வரன் இருக்கு... “
“இடம் எப்படி ?”
”பெரிய குடும்பம்... பூர்வீகம், தஞ்சாவூர் சமஸ்தானம்... ரெண்டு பசங்க... ஒரு மகன்... ஒரு மகள்... அப்பா இல்லை... அம்மா மட்டும்தான்... ஊட்டில பெரிய டீ எஸ்டேட் இருக்கு...”
“ஜாதகம்... ?”
“அம்சமான ஜாதகம்... ரோகினி நட்சத்திரம்... கன்னி ராசி...”
“ஆஹா... இவ துலாம்... மேல சொல்லு... “
“அப்பறம் என்ன... தம்... தண்ணி... எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது... ”
“இந்தக் காலத்துல இப்படியா... நிஜமாத்தான் சொல்றியா ?”
“உங்ககிட்ட பொய் சொல்லுவனா... ? தம்பி நமக்கு ரொம்பப் பழக்கம்... என் பையனோடத்தான் படிச்சான்... ப்ரெண்ட்ஸ்”
“அப்படின்னா உடனே முடிச்சிட வேண்டியதுதான்... சரி... நம்மால தீபாவளி முடிஞ்சிதான் கல்யாணம் வெக்க முடியுங்கிறதையும் சொல்லிட்டியா”
“சொல்லிட்டேன்... அவங்களுக்கும் சம்மதம்...”
“முருகா... எல்லாம் உன் அருள்... “
“அப்ப... வர்ற 20ம் தேதி மதியம் 3-4 அவங்களைப் பொண்ணு பாக்க வரச்சொல்லட்டுமா... “
“இருய்யா... அவசரப்படறியே... மொதல்ல பையனோட வீட்டு முகவரி, கம்பெனி விலாசம் ரெண்டும் சொல்லு... நம்ம போலீஸ் சகலை கிட்ட சொல்லி விசாரிப்போம்...”
“சரிங்க... M. குமரன், S/o மகாலட்சுமி, 7G ரெயின்போ காலணி, அண்ணா நகர் முதல் தெரு, ராஜகாளியம்மன் கோவில் அருகில், சென்னை-600028”
”ரொம்ப நல்லது... அப்பறம் என்ன... ?“
“வந்துங்க... உங்களுக்காக வெயில் மழைன்னு பாக்காம அலைஞ்சி இந்த இடம் புடிச்சேன்... வந்து... வந்து... “
”புரியுது... சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வீட்டாண்ட வா...”
“ரொம்ப சந்தோஷம்... வெச்சிடவா...”

“சரி...”
-----------------------------------------
நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... +நேசத்துடன்... இரா. அரங்கன்

01 March 2010

இன்றைய விஷயம் : 01-03-2010 – தமிழ்ச் சினிமாவில் அந்தாக்‌ஷரி

பத்து ஜோடி தமிழ்ப் படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜோடியின் முதல் படப்பெயரின் கடைசி எழுத்துதான் அதே ஜோடியின் இரண்டாவது படப்பெயரின் முதல் எழுத்து. (உம்., திருடா திருடா-டார்லிங் டார்லிங் டார்லிங்)

ரெடி... ஜூட்...

1. மெதுவாகக் கதவு திறந்து உச்சி வகுந்தெடுத்தது காற்று.
2. நகைக் கடையில் வேகாமாக மோசடி செய்யும் படா தோஸ்துகள்.
3. சரவணனோடு இண்டிகாமுக்காக அவதாரம் எடுத்த அந்நியன்.
4. ஜட்ஜ் அண்ணாவும், ரவுடி தம்பியும் பின்னே ருக்குவென்ற கலெக்டரும்
5. கண் விழித்த வெள்ளைக்கார முத்தத்தில் கரைந்த வண்ணம்.

6. நல்ல பேரை வாங்காமல் கல்யாணத்தையே நிறுத்தப் பார்த்தவர்கள்
7. பரிட்சை ஒண்ணும் காதல் இல்லை-கவுண்டரையே குழப்பிய பழய படம்
8. ஒரே ஜீவனான ஒருவரைக் கொன்றது அபிராமிஉமாமகேஸ்வரியா ?
9. ஹோசானா கேட்டு லூசானது பசங்களும், ஒரு குட்டிப் பறவையும்தான்.
10. கர்ணன் கதையும் கை, காலை விட்டு தலய மட்டும் எடுப்பவரும்.

நீங்களும் முயற்சிக்கலாமே... மீண்டும் சந்திப்போம்... +நேசத்துடன்... இரா. அரங்கன்

11 January 2010

இன்றைய விஷயம் : 11-01-2010 – சுஜாதாவின் தீவிர ரசிகர்களுக்காக...


சுஜாதா பங்கு பெற்ற தமிழ்ப் படங்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் (கொஞ்சம் கஷ்டம்தான்)

1. சாராயக் கடை தாஸாக தாமு – T.T. விக்ரம் - கதிர்
2. பெரியாத்தா – வெள்ளி – ‘பிரதாப்’
3. ”DOTE-ல வந்தயா... NOTE-ல வந்தயா...” – “ரோட்ல வந்தேன்...”
4. சலாமியா – கபாடியா - சுகிர்தராஜா
5. வேகம் – “நீங்க இருப்பீங்க மேஜர் சார்...”
6. ஹீரோயின் ப்ரெண்ட் பேரு ‘சம்பதா’ – ”ஒரே எழுத்தில் கவிதை, ‘நீ’”
7. இமான், ஐரீன் – Cool Drink
8. சாஷா – ஜெக்தீஷ் – வேலு
9. ‘நொன்னைங்களா’ நடிகர் ஹீரோவாக நடித்த படத்தின் பெயரும், தங்கரின் படப் பெயரும் சேர்ந்த படம்.
10. புள்ளி – அமர் - நிலா

நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...