29 May 2015

இன்றைய விஷயம்: 29-05-2015

தமிழ் சினிமாவில் மூன்று வேடங்கள்... !

தமிழ்ப் படங்களில், கதாநாயகர்கள் மூன்று வேடங்களில் நடித்த படங்கள் சில உன்டு. அதுமாதிரியான படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

இரண்டு வேடங்களோ, நான்கோ அதற்கு மேற்பட்ட வேடங்களோ  இல்லை. அதே சமயம் , நாகேஷ் பணக்காரக் குடும்பம் படத்திலும், வடிவேலு மனதைத் திருடிவிட்டாய் படத்திலும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் முன்று வேடங்களில் வருவார்கள். இவைகள் போன்ற படங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

ரெடி... ஜுட்... !!!

1.   பரங்கிமலையா... பல்லாவரமா... நடுவிலா... ?
 
2.   பொம்மையை நிஜமென்று காட்டியதால்... நிஜம் பொம்மைபோல் தோற்றது.
 
3.   மூன்று சிரம்... அதிலும் ஒன்று பரதமா... ! ரொம்ப சிரமம்... !!
 
4.   ஊர் ஊராய்ப் போவான்... காவலனும் அவனே... கார் சீர் நிபுணனும் அவனே...
 
5.   கேப்டனாய் இருந்தும் கேப்டனாய் இல்லாதவர் நாயகனாக நினைத்தது சரியா... ?
 
6.   புயல், மேல் உலகில் மையம் கொள்ளும் என்று எதிர்பார்த்தால்... இப்படி புஸ்ஸுன்னு  ஆயிடுச்சே...
 
7.   RED LOTUSம், ரத்தக்கல்லும் சேர்ந்த சிறப்பான படம்... ஏகாம்பரம்ம்ம்ம்...!!!
 
8.   இது இவர் படம்னா இவரே நம்பமாட்டார்... இல்லையா ‘நேர்மை மன்னரே’... ?
 
9.   சாமிப்புள்ளையாக... நடிகரா... திலகமா... !
 
10.இவர் கேரக்டரை இவரே புரிஞ்சிக்கலையே... இதுல எடிசன் என்ன... பூ என்ன?


நீங்களும் முயற்சிக்கலாமே...
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

28 May 2015

இன்றைய விஷயம்: 28-05-2015 - தமிழ் சினிமாவில் வில்லன்கள்...!

தமிழ்ப்படங்கள் சிலவற்றின் வில்லன் கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

உப-குறிப்பு: அடைப்புக்குறிகளுக்குள்... ரெடி... ஜுட்...
 
1.   ஆதிசேஷன் (MGR)
2.   அருமைநாயகம்
3.   பத்ரி (தனுஷ்)
4.   காக்கர்லா
5.   முத்துப்பாண்டி (செல்லம்)
6.   Dr. ஹரிசந்திர பிரசாத் (இந்திரஜித்)
7.   தேஜா
8.   ரவி (PULSAR)
9.   காசி (கும்பகோணம்)
10. கமலேஷ் (SMUGGLING)

நீங்களும் முயற்சிக்கலாமே...

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...