22 January 2007

இன்றைய விஷயம் – 22-01-2007 : தமிழ்ப் படங்களில் இரட்டை வேடம்… !



கதாநாயகனோ, கதாநாயகியோ, வேறு யாரோ இரட்டை வேடத்தில் நடித்த தமிழ்ப்படங்கள் சிலவற்றைப் பற்றிய குறிப்பு தரப்பட்டுள்ளது. அது என்ன படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ?

உப குறிப்பு – 1 : இரட்டை வேடத்திற்குள் அப்பா-மகன் (அ) அண்ணன்–தம்பி உறவு இல்லை.

உப குறிப்பு – 2 : ஹீரோ இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் KNN (கதாநாயகன்) என்றும், ஹீரோயின் இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் KNI (கதாநாயகி) என்றும், மற்ற யாராவது இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் VY (வேறு யாரோ) என்றும் குறிப்பு தரப்பட்டுள்ளது.

ரெடி… ஜூட்…

1. தேவருக்காக ரஜினி நடித்த கடைசிப் படம் (KNN)

2. தமிழில் வெளிவந்த ஒரே சமகால அரசியல் படம் - இதை இயக்குனர்
ஒத்துக்கொள்ளாவிட்டால் கூட (KNI)

3. இந்தப் படத்தின், இந்தி இன்றைய வடிவம் வெளிவந்து சரியாக ஓடவில்லை (KNN)

4. “அடடா வயசுப்பொண்ணு அடியெடுத்தா… ஜல் ஜல் ஜல்” என்ற பாடல் இடம்பெற்ற படம்
(KNN)

5. படத்தில் முழுதாக இடம்பெறாமல், கேஸட்டில் இடம்பெற்ற “உன் நெஞ்சத் தொட்டுச்
சொல்லு… என் ராசா என் மேல் ஆசை இல்லையா… ?” என்ற பாடல் இந்தப் படத்தில் உண்டு
(KNN)

6. சிம்ரன் – செல்லப்பா (VY)

7. இரட்டை வேடப் படங்கள் இப்படிக்கூட இருக்குமா என்று ஆச்சர்யப்படுத்திய படம்.
வித்யாசாகர் – அர்ச்சனா (KNN)

8. கதாநாயகி இரட்டை வேடத்தில் நடித்துத் தமிழில் வெளிவந்த கடைசிப் படம். சில
நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் நாயகன் பெயரும், இந்தப் படத்தின் நாயகன் பெயரும்
ஒன்றே. (KNI)

9. இந்தப் படத்தின் நாயகி இலங்கைப் பெண்ணாக நடித்திருப்பார். கதாநாயகனின் கதாபாத்திரப்
பெயர் சேது (KNN)

10. அனேகமாக கதாநாயகனும், கதாநாயகியும் இரட்டை வேடத்தில் நடித்துத் தமிழில்
வெளிவந்த கடைசிப் படம் இதுதான். ஸ்னேகா, கமிஷன் மண்டி கஜேந்திரா ஆகிய
பெயர்கள் இந்தப் படத்தில் உண்டு. (KNN / KNI)

நீங்களும் முயலுங்களேன்… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/22-01-2007.html) சுட்டுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


20 comments:

கோவி.கண்ணன் said...

//1. தேவருக்காக ரஜினி நடித்த கடைசிப் படம் (KNN)
//
தர்மத்தின் தலைவன்

வினையூக்கி said...

//9. இந்தப் படத்தின் நாயகி இலங்கைப் பெண்ணாக நடித்திருப்பார். கதாநாயகனின் கதாபாத்திரப்
பெயர் சேது (KNN)

//புன்னகை மன்னன்

வினையூக்கி said...

// தமிழில் வெளிவந்த ஒரே சமகால அரசியல் படம் - இதை இயக்குனர்
ஒத்துக்கொள்ளாவிட்டால் கூட (KNI)
//இருவர், ஐஸ்வர்யாராய்

வினையூக்கி said...

//. சிம்ரன் – செல்லப்பா (VY)
// என்னம்மா கண்ணு, வடிவேலு

வினையூக்கி said...

//படத்தில் முழுதாக இடம்பெறாமல், கேஸட்டில் இடம்பெற்ற “உன் நெஞ்சத் தொட்டுச்
சொல்லு… என் ராசா என் மேல் ஆசை இல்லையா… ?” என்ற பாடல் இந்தப் படத்தில் உண்டு
(KNN)
// ராஜாதிராஜா ரஜினிகாந்த்

//“அடடா வயசுப்பொண்ணு அடியெடுத்தா… ஜல் ஜல் ஜல்” என்ற பாடல் இடம்பெற்ற படம்
(KNN)
//
உழவன் மகன்

வினையூக்கி said...

//அனேகமாக கதாநாயகனும், கதாநாயகியும் இரட்டை வேடத்தில் நடித்துத் தமிழில்
வெளிவந்த கடைசிப் படம் இதுதான். ஸ்னேகா, கமிஷன் மண்டி கஜேந்திரா ஆகிய
பெயர்கள் இந்தப் படத்தில் உண்டு. (KNN / KNI)
//பேரழகன் சூர்யா ஜோதிகா

aruppukottaiyan said...

2) Iruvar -- Aishwarya Rai is the heroine

5) Rajathi Raja

Ranganathan. R said...

மீண்டும் வந்து முதல் பதில் தந்த கோவி. கண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

Ranganathan. R said...

வினையூக்கி... ! (என்ன... அருமையான பெயர்... ! Superb... !)

தந்த விடைகளில் உழவன் மகன் மட்டும் தவறு... மற்றவை சரியோ சரி...

கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்...

நன்றி... !

Ranganathan. R said...

அருப்புக்கோட்டை தங்கமே... வா...

என்ன இது... ஒரே பதில்தானா... ?

இன்னும் எதிர்பார்க்கிறேன்... !

Anonymous said...

2.இருவர்

3.பில்லா

5.ராஜாதி ராஜா

6.என்னம்மா க்ண்ணு

8.பார்த்திபன் கனவு

9.புன்னகை மன்னன்

10.பேரழகன்

Anonymous said...

1. DHarmathin Thalaivan
2. Iruvar
3. Billa
4.
5. Rajadhi Raja
6.
7.
8. Parthiban kanavu
9. Punnagai Mannan
10.Perazhagan

Anonymous said...

6. That Sathyaraj movie - Ennamma Kannu

Anonymous said...

4. Ulagam pirandhadhu enakaaga

Unknown said...

1. தேவருக்காக ரஜினி நடித்த கடைசிப் படம் - தர்மத்தின் தலைவன்

2. தமிழில் வெளிவந்த ஒரே சமகால அரசியல் படம் - இருவர்

4. “அடடா வயசுப்பொண்ணு அடியெடுத்தா… ஜல் ஜல் ஜல்” என்ற பாடல் இடம்பெற்ற படம் - உலகம் பிறந்தது எனக்காக

5. படத்தில் முழுதாக இடம்பெறாமல், கேஸட்டில் இடம்பெற்ற “உன் நெஞ்சத் தொட்டுச்
சொல்லு… என் ராசா என் மேல் ஆசை இல்லையா… ?” என்ற பாடல் இந்தப் படத்தில் உண்டு - எங்க சின்ன ராசா

8. கதாநாயகி இரட்டை வேடத்தில் நடித்துத் தமிழில் வெளிவந்த கடைசிப் படம். சில
நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் நாயகன் பெயரும், இந்தப் படத்தின் நாயகன் பெயரும்
ஒன்றே. - பார்த்திபன் கனவு

Bart said...

1. Dharmathin Thalaivan
2. Iruvar
3. Don, Billa
4. Ulagam Pirandhadhu Enakkaga
5. Rajathi Raja
6. Ennamma Kannu
7. Johnny
8. Parthiban Kanavu
9. Punnagai Mannan
10. Perazhagan

Ranganathan. R said...

Siva... K.V.R... Bart and Radhika...

All your answers are right... absolutely right...

Wishes...

Bart... Excellent... 10/10

Great... Thanks a lot...

Anonymous said...

7. Jhony ?? (Reg dual role, I dont think periya aachariyam irukku indha movie la.. still just a guess)

Sud Gopal said...

1.தர்மத்தின் தலைவன்
2.இருவர்
3.
4.உலகம் பிறந்தது எனக்காக
5.
6.என்னம்மா கண்ணு
7.
8.
9.புன்னகை மன்னன்
10.பேரழகன்

ராம்குமார் அமுதன் said...

10) Peralagan
2)Iruvar