21 February 2007

இன்றைய விஷயம் : 21-02-2007 – தமிழ்ச் சினிமாப் பாடல்களில் வித்தியாசப் பூக்கள்…


தமிழ்ப் படப் பாடல்களில் சில பூக்களின் பெயரில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளில் இருந்து தமிழ்ப் பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு-1 : ஒரே பூ இரண்டு பாடல்களுக்கோ, ஒரே படத்தில் இருந்து இரண்டு பாடல்களோ இல்லை. பத்து பூக்கள். பத்து பாடல்கள். பத்து படங்கள்.
உப-குறிப்பு-2 : ரோஜா, மல்லிகை இரண்டு பூக்களும் எந்தப் பாடலிலும் இல்லை.
உப-குறிப்பு-3 : பூவின் பெயர் பாடலின் முதல் வார்த்தையிலேயே இருக்கும்.

ரெடி. ஜூட்…

1. பாரதியின் பளார் வரிகள்-இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் பெயர்.
2. தாவணிக்கனவுகள் படத்தில் வரும் சிகப்புத் தாமரைப் பாட்டு.
3. ஸ்ரீதர் ரஜினியை வைத்து எடுத்த படத்தில் வரும் பாட்டு.
4. “இதுவரை எங்கள் கிராமத்திற்குத்தான் சினிமா வந்திருக்கிறது. முதன்முதலாக எங்கள் கிராமம் சினிமாவில் வந்தது இந்தப் படத்தில்தான்” என்று வைரமுத்து பாராட்டிய படத்தில் வந்த பாட்டு.
5. இரண்டு சிவாஜி (ஒருவன் உத்தமன்) படத்தில் வந்த கானடா ராகத்தில் அமைந்த பாட்டு.
6. பாரதிராஜாவுக்காக வித்யாசாகர் இசையமைத்த ஒரே படத்தில் வந்த பாட்டு.
7. ஒரு நாள் கூத்து படத்தில் வந்த குட்டிப் பாட்டு. விருந்தினரோடு சம்பந்தம்.
8. அரவிந்த்சாமி – ரேவதி இணைந்த படத்தில் வரும் பாட்டு.
9. தலைவர் படப் பாட்டு. தமிழ்ப் பூவின் ஆங்கிலப் பெயர்.
10. விஜய் படத்தில் உள்ள இந்தப் பாடல் இப்படி தொடங்கும். “கலர்… கலர்… கலர் பூ… “

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2007/02/21-02-2007.html
) சொடுக்கவும்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

14 comments:

MyFriend said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு இப்பத்தான் டைம் கிடைச்சிருக்கு.. ஆனால் உங்க கேள்விகள் கஷ்டமாத்தான் இருக்கு! :-P

எனக்கு தெரிந்த விடைகள் ரெண்டே ரெண்டுதான்..

6- தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ரைட்டா?

10- ஊதா ஊதா ஊதாப்பூ.. மின்சார கண்ணா.. அந்த பூவுடைய பேரே ஊதாதானா?

Ranganathan. R said...

வாங்க மை ஃபிரண்ட்... !

உங்கள் விடைகள் சரி... மிகச் சரி...
வழக்கம்போல் மற்றதையும் முயற்சிக்கலாமே... !

ஊதாப்பூ எனக்கும் கொஞ்சம் சந்தேகம்தான்... பார்க்கலாம்... !

Thanks... !

Anonymous said...

எனக்கும் தெரிந்தது ரெண்டுதான்
4.செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே..
5.முல்லைமலர் மேலே மொய்க்கும்..
மீதி யோசித்து..
நானானி

சேதுக்கரசி said...

எதுவுமே தெரியவில்லை... முதல் படம் அச்சமில்லை அச்சமில்லை என்பதைத் தவிர!

Ranganathan. R said...

தோழமைக்கு வணக்கம்,

என்ன ஆச்சு சேதுக்கரசிக்கு... ?

வழக்கமான சுறுசுறுப்பு Missing... !

அச்சமில்லை... அச்சமில்லை... மிகச்சரியே... பாடல் "ஆவாரம்பூவு ஆறேழு நாளா..."

மற்றவையும் சுலபமே... பூக்கள் இவைதான் (கலந்த வரிசையில்)

1. தாழம்பூ
2. செந்தூரப்பூ
3. தாமரை
4. அனிச்சம்
5. லில்லி
6. சென்பகப்பூ
7. ஊதா

மீண்டும் முயலுங்களேன்... Please... !

Ranganathan. R said...

Dear அனானி,

சொன்ன விடைகள் மிகச்சரி... நெத்தியடி... !

மற்றவைகளையும் முயற்சித்தால் மிகவும் மகிழ்வேன்...

Cheers... !

Anonymous said...

Romba kashtama than irukku.

1. Movie Achamillai Achamillai
4. Sendhoora poove (16 Vayadhinile)
9. Lilly malarukku kondaattam (endha thalaivar nu sollatti epadi?)
10. OOdha OOdha OOdha poo...

Anonymous said...

sengamalam sirikkudhu for Dhavani Kanavugal question
Thaamarapoovukkum from pasumpon (BR-VS Combo)

Anonymous said...

senbagapoovai paarthu for Arvind-Revathy Combo

Anonymous said...

btw, 16 V song could also be Sevvanthi Poo mudicha apart from Sendhoora Povve!

Ranganathan. R said...

Raj... !

// btw, 16 V song could also be Sevvanthi Poo mudicha apart from Sendhoora Povve! //

You are absolutely right...

விடைகளுக்கு மகிழ்ச்சிகளும், நன்றிகளும்...

Cheers... !

Ranganathan. R said...

ராதிகா... !

அவ்வளவு கஷ்டமாகவா இருக்கிறது... ?

இருந்தாலும், தந்த விடைகள் அனைத்தும் சரியே...

Thanks... !

சேதுக்கரசி said...

//பூக்கள் இவைதான் (கலந்த வரிசையில்)//

விட்டா நீங்களே எல்லாத்தையும் சொல்லிடுவீங்க போலிருக்கே? :-)))

நீங்களே விடைப் பக்கத்தில் விடைகள் வெளியிடும் வரை சரியான மறுமொழிகளை வெளியிடாதீங்க (தப்பான மறுமொழிகளை வெளியிடலாம்...) அப்புறம் விடை அறிவிக்கும் காலகட்டத்தில் எல்லா மறுமொழிகளையும் ரிலீஸ் பண்ணுங்க. அப்படித்தான் மத்தவங்க குவிஸ் வைக்கிறாங்கன்னு பார்த்திருக்கேன்...

Ranganathan. R said...

Sethukarasi... !

You are absolutely right...

Appadiye Seigiren... !

Thanks... !