09 May 2008

இன்றைய விஷயம் : 09-04-2008 – தமிழ்ச்சினிமாவும் பறவைகளும்...

தமிழ்ப்படப்பாடல்களில் சிலதில் முதல் வார்த்தையில் ஒரு பறவையின் பெயர் அமைந்திருக்கும் (றெக்கை இருப்பதெல்லாம் பறவைகளே !) அப்படிப்பட்ட பாடல்கள் / படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தைக் கண்டுபிடித்து பாடலையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. மலேயா போலிசாக M.R. ராதா நடித்த படம் (தாதா மிராஸி)
2. இருக்கு… ஆனா இல்லை…
3. ஆங்கிலப் பறவையே… ஆங்கிலப் பறவையே… (இது பாடலின் ஆரம்பம்)
4. நூ ஒஸ்தானண்டே நேனு ஒத்தண்டானா…
5. தேங்காய் சீனிவாசன் – ராதிகா (அன்பே… என்ன ஒரு ஜோடி… !)
6. சிம்பாஸ்தேவாரம் நடித்த படம்…
7. சோலையம்மாவும், ஓ போடு நாயகியின் பெயரைத் தன் பெயரோடு ஒட்டிக் கொண்டுள்ளவரும் நடித்த படம்…
8. வினிதாவும், விருதாலம் சட்டமன்ற உறுப்பினரும் ஜோடியாகப் பாடிய பாடல்.
9. நந்தகோபாலாஆஆஆ… குமாரிஈஈஈ… இது இரண்டும் ஹீரோ, ஹீரோயின் பெயர் இல்லை… ஆனால் படத்தில் இந்த வார்த்தைகள் வரும்…
10. ஒரு பழைய குழந்தைகள் விளையாட்டு… சம்மனமிட்டு உட்கார்ந்துகொண்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி ஒருவர் பாட, மற்றவர்கள் விளையாடுவார்கள். (அப்பாடா… சுத்தி வளைச்சு க்ளூ கொடுத்தாச்சு… )

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… இரா. அரங்கன்…

19 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒன்னு மட்டும் பார்த்ததுமே விடை தெரிஞ்சிடுச்சு.. :-))))

4- கோழி வெடக் கோழி (சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்)

மத்ததுக்கு கொஞ்சம் முயற்சித்து விடையளிக்கிறேன். :-)

Ranganathan. R said...

மை ஃபிரெண்ட் தான் முதல் கமெண்ட்... வாழ்த்துக்கள்...

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. இப்போ நீங்களும் யார் முதல் கமேண்ட் ரெண்டாவது கமேண்டெல்லாம் போடுறீங்களா? க்ரிக்கோட் கமேண்டரி கேட்குற மாதிரி இருக்கு. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

2- மயிலிறகே மயிலிறகே (அ ஆ)
4- கோழி வெடக் கோழி (சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்)
7- குயில் பாட்டு கேட்டதென்ன (என் ராசாவின் மனசிலே)

கைப்புள்ள said...

1. புதிய பறவை
3. லவ் பேர்ட்ஸ்...லவ் பேர்ட்ஸ்(அன்பே வா)
5. வெள்ளை புறா ஒன்று(அன்பே சங்கீதா)

Radhika Srinivas said...

1. Chittukuruvi mutham kudukka (Pudhiya paravai)
2. Marangothiye Marangothiye (Anbe Aruyire)
3. Love birds Love birds (Anbe vaa)
4. Kiliye Kiliye (unakkum enakkum)
5. Chinna pura (Anbe Sangeetha - Ipadi oru padam irukku nu inniki than theriyum...)
6.
7. Kuyil paattu (En Rasavin manasule)
8. Mainaave Mainaave (Vaanathai pola)
9.
10. Kokku para para (Chandhramukhi)

Surya said...

07.Kuyil paattu(En Raasavin Manasile)
05.Chinna Pura Ondru(Anbe Sangeetha)
04.Kozhi Vedakozhi(Something Something Unakkum Enakkum)
03.Love Birds Love Birds(Anbe Vaa)
02.Mayilirage(A Aah)
01.Chittu Kuruvi(Pudhiya Paravai)

Surya said...

10.kokku Para para(Chandramukhi)
08.Mainave Mainave(Vaanathai Pola)

thamizhparavai said...

1.chittukuruvi muththam koduthu(puthiya paRavai)
2.mayiliRagae..mayiliRagae..(ah.. aahh..) or (marangothiyae..)
3.love birds.. love birds..(anbae vaa)
4.kozhi vedakkozhi..(unakkum enakkum something something)
5.chinna puRaa ondRu..(anbae sangeetha)
6.mayilu mayilu mayilamma..(VIP)
7.kuil paatu oh vandhadhenna..(en raasavin manasilae)
8.mainaavae..mainaavae..(vaanathaipola)
9.aNdankaakka koNdakkaari..(anniyan)
10.kiLithattu kiLithattu..(athu oru kanaakkaalam)

கும்மாங்கோ said...

1) சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து(புதிய பறவை)
2) மயிலிறகே மயிலிறகே(ன்பே ருயிரே)
3) லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்(அன்பே வா)
4) கோழி வெடக்கோழி (சம்திங் சம்திங்)
5) சின்னப்புறா ஒன்று (அன்பே சங்கீதா)
6)
7) குயில் பாட்டு (என் ராசாவின் மனசிலே)
8) மைனாவே மைனாவே (வானத்தைப் போல)
9) அண்டங்காக்கா கொண்டைக்காரி(அந்நியன்)
10)

Any other clues for 6 & 10?

Ranganathan. R said...

சூர்யா...

1,2,3,4,5,7,8,10 சரி... வாழ்த்துக்கள்... கலக்கிட்ட...

Ranganathan. R said...

தமிழ்ப்பறவை...

நெத்தியடி... எல்லாமே சரி... 10 கூட ஒரு வகையில் சரியான விடைதான்... ஆனால் நான் நினைத்தது வேறு...

Super... !

Ranganathan. R said...

வாய்யா கைப்புள்ள...

சொன்னதே மூனு... அதுல ஒண்ணு தப்பு... !

ரொம்பதான் ஓவர்... !

Ranganathan. R said...

மை ஃபிரெண்ட்...

முதல் பின்னூட்டம் போட்டவரே...

நாலுதான் முயற்சி பண்ண முடிஞ்சதா... ? பரவாயில்லை...

Cheers... !

Ranganathan. R said...

ராதிகா...

6-ரொம்ப ஈஸியாச்சே...

மற்றபடி எல்லாமே சரி (அன்பே சங்கீதா உட்பட...)

Ranganathan. R said...

கும்மாங்கோ...

வரணும்... வரணும்...

6-ஜம்பிள்டு வார்த்தைகளைப் பிரித்தால் இரண்டு நாயக, நாயகிகள் கிடைப்பார்கள்... இந்தப் படத்தில் ‘அனுபம் கேர்' உண்டு...

10-ரொம்ப ஈஸியாச்சே... ஒத்தக்கால்ல நின்னாவது கண்டுபிடியுங்களேன்...

கும்மாங்கோ said...

6) மயிலு மயிலு மயிலம்மா (வி.ஐ.பி)
10) கொக்கு பற பற (சந்திரமுகி)

thamizhparavai said...

10.kokku paRa paRa.. kozhi paRa paRa (chandramuki)

correct..?

Radhika said...

kandupidichutennn....
6. Mayilu mayilu mayilamma (VIP) (unga clue vechi dhan kedachudhu)