தமிழ் சினிமாக்களின் சில ஜோடிப் படங்கள், அபாரமான ஒற்றுமையுள்ள விஷயங்களைக் கொண்டு அமைந்திருக்கும்.
உம். மாப்பிள்ளை – கீழ் வானம் சிவக்கும் (ஒன்றில், மாமியோரோடு மல்லுக் கட்டும் மருமகன் - இன்னொன்றில், மாமனாரோடு மல்லுக் கட்டும் மருமகள்)
அப்படிப்பட்ட ஜோடிப் படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. ஒன்றில், சகோதரன் மனைவியை அடையத் துடிக்கும் ராமாயண அண்ணன் – இன்னொன்றில், சகோதரி கணவனை அடையத் துடிக்கும் தங்கை.
2. ஒன்றில், தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் சர்க்கஸ் ஹீரோ – இன்னொன்றில், அம்மாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் அஞ்சலி.
3. ஒன்றில், கெட்டவனான அப்பனைக் கொல்லும் மகன் (நாட்குறிப்பு) – இன்னொன்றில், கெட்டவனான மகனைக் கொல்லும் அப்பா. (பாரதீயுடு)
4. ஒன்றில், கதாநாயகன் ஓட்டப்பந்தய வீரன் – இன்னொன்றில், கதாநாயகி ஓட்டப்பந்தய வீராங்கனை (மொழிக்காரன் படமுங்கோ)
5. ஒன்றில், பணக்காரனின் மகனைக் கடத்தும் மூவர் (சேவகா) – இன்னொன்றில், பணக்காரனின் மகளைக் (அஞ்சு) கடத்தும் மூவர்.
6. ஒன்றில், இல்லாத அண்ணனாக தானே வேஷம் கட்டும் நாயகன் (AAK) – இன்னொன்றில், இல்லாத தங்கையாகத் தானே வேஷம் கட்டும் நாயகி (வைஷு)
7. ஒன்றில், இறந்து போன தென்மதுரைக் காதலனைப் போலவே இருப்பவனை காதலிக்கும் நாயகி – இன்னொன்றில், இறந்து போன பஞ்சாபிக் காதலியைப் போலவே இருப்பவளைக் காதலிக்கும் நாயகன்.
8. ஒன்றில், கதாநாயகன் வாய் பேச முடியாதவர் (சொல்லாமலே தெரியும் இது பாக்கியராஜ் படமென்று) – இன்னொன்றில், கதாநாயகி வாய் பேச முடியாதவர்.
9. ஒன்றில், அண்ணனுக்காகத் தன் காதலியை விட்டுத் தரும் இசைத் தம்பி – இன்னொன்றில், தம்பிக்காகத் தன் காதலியை விட்டுத் தரும் கிராமத்து விஜய அண்ணன்.
10. ஒன்றில், காதலுக்காக ஊமையாக நடிக்கும் நாயகன் – இன்னொன்றில், காதலுக்காகக் குருடனாக நடிக்கும் கிரேஸி நாயகன்.
நீங்களும் முயற்சிக்கலாமே... !
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...