26 February 2009

இன்றைய விஷயம் : 26-02-2009 – தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...


தமிழ் சினிமாக்களின் சில ஜோடிப் படங்கள், அபாரமான ஒற்றுமையுள்ள விஷயங்களைக் கொண்டு அமைந்திருக்கும்.

உம். மாப்பிள்ளை – கீழ் வானம் சிவக்கும் (ஒன்றில், மாமியோரோடு மல்லுக் கட்டும் மருமகன் - இன்னொன்றில், மாமனாரோடு மல்லுக் கட்டும் மருமகள்)

அப்படிப்பட்ட ஜோடிப் படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. ஒன்றில், சகோதரன் மனைவியை அடையத் துடிக்கும் ராமாயண அண்ணன் – இன்னொன்றில், சகோதரி கணவனை அடையத் துடிக்கும் தங்கை.

2. ஒன்றில், தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் சர்க்கஸ் ஹீரோ – இன்னொன்றில், அம்மாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் அஞ்சலி.

3. ஒன்றில், கெட்டவனான அப்பனைக் கொல்லும் மகன் (நாட்குறிப்பு) – இன்னொன்றில், கெட்டவனான மகனைக் கொல்லும் அப்பா. (பாரதீயுடு)

4. ஒன்றில், கதாநாயகன் ஓட்டப்பந்தய வீரன் – இன்னொன்றில், கதாநாயகி ஓட்டப்பந்தய வீராங்கனை (மொழிக்காரன் படமுங்கோ)

5. ஒன்றில், பணக்காரனின் மகனைக் கடத்தும் மூவர் (சேவகா) – இன்னொன்றில், பணக்காரனின் மகளைக் (அஞ்சு) கடத்தும் மூவர்.

6. ஒன்றில், இல்லாத அண்ணனாக தானே வேஷம் கட்டும் நாயகன் (AAK) – இன்னொன்றில், இல்லாத தங்கையாகத் தானே வேஷம் கட்டும் நாயகி (வைஷு)

7. ஒன்றில், இறந்து போன தென்மதுரைக் காதலனைப் போலவே இருப்பவனை காதலிக்கும் நாயகி – இன்னொன்றில், இறந்து போன பஞ்சாபிக் காதலியைப் போலவே இருப்பவளைக் காதலிக்கும் நாயகன்.

8. ஒன்றில், கதாநாயகன் வாய் பேச முடியாதவர் (சொல்லாமலே தெரியும் இது பாக்கியராஜ் படமென்று) – இன்னொன்றில், கதாநாயகி வாய் பேச முடியாதவர்.

9. ஒன்றில், அண்ணனுக்காகத் தன் காதலியை விட்டுத் தரும் இசைத் தம்பி – இன்னொன்றில், தம்பிக்காகத் தன் காதலியை விட்டுத் தரும் கிராமத்து விஜய அண்ணன்.

10. ஒன்றில், காதலுக்காக ஊமையாக நடிக்கும் நாயகன் – இன்னொன்றில், காதலுக்காகக் குருடனாக நடிக்கும் கிரேஸி நாயகன்.

நீங்களும் முயற்சிக்கலாமே... !
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

17 comments:

நாமக்கல் சிபி said...

1. வாலி - கலாபக் காதலன்
2. அபூர்வ சகோதரர்கள் - கற்பூரமுல்லை(!?)

3. ஒரு கைதியின் டைரி(!?) - இந்தியன்

சரவணகுமரன் said...

கேள்விகள் அனைத்தும் அருமை... பதில் கொஞ்சம் தான் தெரியுது...

சரவணகுமரன் said...

இவ்ளோ தான் இப்போதைக்கு தெரியுது

1) வாலி - கலாப காதலன்
2) அபூர்வ சகோதரர்கள் - துர்கா
3) ? - இந்தியன்
4) கல்லூரி - அஸ்வினி
5) ? - அரங்கேற்ற வேலை
6) ? - ஜீன்ஸ்
7) தர்மத்தின் தலைவன் - கனவே கலையாதே
8) ??
9) டூயட் - கண்ணுபட போகுதய்யா
10) சொல்லாமலே - எனக்கு கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது :-)

அகில் பூங்குன்றன் said...

1வாலி- கலாபக்காதலன்
2அபூர்வ சகோதரர்கள் - தாய் மீது சத்தியம்
3ஒரு கைதியின் டைரி- இந்தியன்
4கல்லூரி - இங்கீலிஷ்காரன்
5 ?? - ??
6தில்லுமுல்லு - ஜீன்ஸ்
7நீ வருவாய் என- உன்னை கொடு என்னை தருவேன்
8ஒரு கை ஓசை- மொழி
9 டூயட்- பகவதி
10 சொல்லாமலே -??

SuryaRaj said...

10.சொல்லாமலே : பொய்க் கால் குதிரை

9.டூயட் : கண்ணுபடப் போகுதைய்யா

8.ஒரு கை ஓசை : ஆண் பாவம்

7.தர்மத்தின் தலைவன் : கனவே கலையாதே

6.தில்லு முல்லு : ஜீன்ஸ்

5. : அரங்கேற்ற வேளை

4.கல்லூரி : இங்கிலீஷ்காரன்

3.ஒரு கைதியின் டைரி : இந்தியன்

2.அபூர்வ சகோதரர்கள் : துர்கா

1.வாலி : கலாபக் காதலன்

Ranganathan. R said...

சிபி,

நீங்கள்தான் முதல் ஆள்...

10 கேள்விகளுக்கு 3 பதில்கள்தானா... ? ஆனாலும் சொன்னவற்றில், 2/3 சரியே...

வாழ்த்துக்கள்...

Ranganathan. R said...

சரவணகுமாரன்,

அது எப்படி... ?

கொஞ்சம்தான் பதில்கள் தெரியுதா... ? ரொம்பதான் குறும்பு... !

சொன்னவரை எல்லாமே சரிங்க...

Ranganathan. R said...

அகில்,

வருக வருக... !

பகவதி எப்படிங்க வரும்... ?

மற்றபடி விடைகள் எல்லாம் சரியே...

நன்றி...

Ranganathan. R said...

சூர்யா...

வழக்கம்போல் எல்லாம் சரியே...

5 தெரியலையா... ? அதேபோல் ஆண்பாவம் பதில்கூட தப்புங்க... கொஞ்சம் யோசிங்க... நாயகி ஊமையாக ஆகமாட்டார்... ஊமையாகவே வருவார்...

Anonymous said...

1. வாலி - கலாபக்காதல்
2. அபூர்வ சகோதரர்கள் - துர்கா
3. ஒரு கைதியின் டைரி - இந்தியன்
4. குருவி - இங்லிஷ்காரன்
5.
6. ஜீன்ஸ்

Shiny

SuryaRaj said...

8. kaasi or en mana vaanil...

5th innum yosikkiren

Anonymous said...

1. Vaali, Kalabakkadhalan
2. Aboorva Sagodharargal, "Paapa paadum paattu" paattu vara padam
3. Oru Kaidhiyin Diary, Indian
4. Azhagiya tamil magan, Englishkaran
5. Mumbai Express, Arangetravelai
6. Thillu Mullu, Jeans
7. ??, Kanave Kalaiyadhe
8. ??, Mozhi
9. Duet, ??
10. Sollamale, ??

Nice collection of Movies Ranganatha.. nalla irundhadhu combinations....

Ranganathan. R said...

வாங்க ஷைனி,

என்ன இந்த முறை தாமதமாக வந்திருக்கீக... !

மத்தபடி, ‘குருவி' தவிர எல்லாமே சரிதான்... வாழ்த்துக்கள்...

Ranganathan. R said...

சூர்யாராஜ்,

8-வது... ரொம்ப சிம்பிள்... ‘மொழி' (Infact, என் மனவானில் மற்றும் காசியும் சரியே)

5-வது கூட சுலபம்தான்... !

Ranganathan. R said...

ராதிகா,

சொன்ன பதில்கள் எல்லாமே சரி...

பத்துக்கு ஒன்பதரை... ‘அழகிய தமிழ்மகனை' விட மற்றொரு பதில் ரொம்பவே பொருத்தமானது...

Raj said...

5th ku ennadhan vidai...?

Ranganathan. R said...

ராஜ்...

நினைவுபடுத்தியமைக்கு நன்றி...

5-வதுக்கான விடை...

மும்பை எக்ஸ்பிரஸ் - அரங்கேற்ற வேளை...