இன்றைய விஷயம்: 02-11-2014: தமிழ்ப்படங்களில் ஆண்பாலும் பெண்பாலும்...
தமிழ்ப் படப்
பெயர்களில் சில, இரண்டு வார்த்தைகளைக் கொண்டிருக்கும். அந்த இரண்டு வார்த்தைகளில்,
ஒரு வார்த்தை ஆண்பாலையும், இன்னொரு வார்த்தை பெண்பாலையும் குறிக்குமாறு
அமைந்திருக்கும்.
உ.ம் – ராஜா ராணி (இதில்
ராஜா-ஆண்பால், ராணி-பெண்பால்)
அப்படிப்பட்ட
படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு தமிழ்ப்படங்களின்
பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப-குறிப்பு: எல்லாப் படங்களின் பெயர்களுமே இரண்டு வார்த்தைகளை மட்டுமே
கொண்டிருக்கும்.
1. டீச்சரோடு
மட்டுமே கல்யாணம்...
2. இந்த சர்தார்ஜி
டீ குடிப்பார்...
3. ஹீரோயினின்
காதலன்தான் ஹீரோ என்றால் இந்தப் படத்தில் விஜய் ஆதிராஜ்தான் ஹீரோ...
4. பை எலக்சன்
பரமசிவம் – குரு தனபால்
5. கல்கியின்
படைப்பில் கசமுசா நடிகரா... !
6. செல்லமே-நண்பனே-இரண்டாவது
படமே...
7 இன்று வரை
இமயத்திற்கு இதுதான் கடைசி படம்
8 ஊர்ப்பெரியவரின்
காதலி யா(கா)ராயிருந்தால்தான் என்ன?
9. மூவேந்தரில்
ஒருவரின் முதல் படம்... செம படம்...
10. ஸ்டேட்ட
விட்டு ஸ்டேட்டு... சேட்ட விட்டு சேட்டு
நீங்களும்
முயற்சிக்கலாமே...
+ நேசத்துடன்...
இரா. அரங்கன்...
0 comments:
Post a Comment