இன்றைய விஷயம் : 19-01-2007 : தமிழ்ப் படப் பெயரும், பாடலின் தொடக்கமும் ?
தமிழ்ப் படப் பெயர்கள் சில ஏதோ ஒரு பாடலின் தொடக்க வரியாக இருக்கும். அப்படிப்பட்ட சில பாடல்களின் நடு வரிகள் தரப்பட்டுள்ளன. பாடலின் தொடக்கத்தை, அதாவது, தமிழ்ப் படப் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
Simple. நடுவரிகள் தரப்பட்டுள்ள பாடலின் தொடக்க வரிகள் ஒரு தமிழ்ப் படத்தின் பெயர். அது என்ன ?
உப குறிப்பு – 1 : பாடல் அதே படத்தில் இடம் பெற்றிருக்காது.
உ.ம்.
1. அண்ணாமலை அண்ணாமலை
படம் : அண்ணாமலை.
2. காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
படம் : காதலிக்க நேரமில்லை.
இது மாதிரி இல்லை.
உப குறிப்பு – 2 : எந்தப் படமுமே ஒரு வார்த்தைப் படம் அல்ல (குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகளாவது உண்டு.)
உப குறிப்பு – 3 : சில கேள்விகளுக்கு மட்டும் கண்டுபிடிக்க வேண்டிய படத்தைப் பற்றிய குறிப்பும் தரப்பட்டுள்ளது. (IN BRACKETS)
ரெடி… ஜூட்… (அப்பாடா… ! ஒரு வழியா கேள்விகளுக்கு வந்தாச்சு)
1. போகப் போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும். (அஜித் – ராஜ்கபூர்)
2. சட்டென்று… சலனம் வரும் என்று… ஜாதகத்தில் சொல்லலையே…
3. பெண்ணாலே கெட்டு… போவேனோ என்று…
ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.
4. தங்கச் சிலைபோல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே…
5. ஐயாவோட மானம்… அந்தக் கவரி மான மீறும்…
அந்தக் கவரி மானு பரம்பரைக்கே உன்னாலதான் பேரு…
6. பெண்ணென்றாள் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ…
(பிரபு – மந்த்ரா)
7. இடது விழியில் தூசி விழுந்தால்… வலது விழியும் கலங்கி விடுமே… (நிவேதா)
8. கால் போன பாதைகள் நான் போனபோது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…
9. காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்…
காற்றிடம் கோபம் கிடையாது…
10. எனக்குக் கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… (விஜயகாந்த் படம்)
நீங்களும் முயலுங்களேன்… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/19-01-2007.html) சுட்டுங்கள்…
மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…
19 comments:
1. போகப் போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும். (அஜித் – ராஜ்கபூர்)
அவள் வருவாளா?
10. எனக்குக் கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… (விஜயகாந்த் படம்)
என்கிட்ட மோதாதே!
இந்த ஆண்டின் முதல் பதிவா ?
வாழ்த்துக்கள் !
2. சட்டென்று… சலனம் வரும் என்று… ஜாதகத்தில் சொல்லலையே…
மனம் விரும்புதே!
4. தங்கச் சிலைபோல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே…
பம்பரக் கண்ணாலே!
சிபி, கண்ணன்...
வந்தமைக்கு... விடைகள் தந்தமைக்கு நன்றி... சொன்னவரை சரியே... கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்...
ஆமாம் கண்ணன்... உங்கள் பங்களிப்பும், பகுத்தாய்தலும் இருக்கும் தைரியத்தில்... மற்றொரு ஆண்டு எனக்குத் தொடங்குகிறது...
நூறு கோடி நன்றிகள்... !
வாங்க... வாங்க... சிபி, கண்ணன்...
வந்தமைக்கு... விடைகள் தந்தமைக்கு நன்றி... சொன்னவரை சரியே... கூடிய விரைவில் பதிவில் இடுகிறேன்...
ஆமாம் கண்ணன்... உங்கள் பங்களிப்பும், பகுத்தாய்தலும் இருக்கும் தைரியத்தில்... மற்றொரு ஆண்டு எனக்குத் தொடங்குகிறது...
நூறு கோடி நன்றிகள்... !
5. ஐயாவோட மானம்… அந்தக் கவரி மான மீறும்…
அந்தக் கவரி மானு பரம்பரைக்கே உன்னாலதான் பேரு
கண்ணுபடப் போகுதய்யா!
8. கால் போன பாதைகள் நான் போனபோது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி!
7. இடது விழியில் தூசி விழுந்தால்… வலது விழியும் கலங்கி விடுமே…
நீ பாதி நான் பாதி!
1. அவள் வருவாளா
2. மனம் விரும்புதே உன்னை
3. ஊரு விட்டு ஊரு வந்து
4.
5. கண்ணுபடப்போகுதையா
6. தேடினேன் வந்தது
7. நீ பாதி நான் பாதி
8.
9.
10. எங்கிட்ட மோதாதே
2. மனம் விரும்புதே உன்னை
6. தேடினேன் வந்தது
7. நீ பாதி நான் பாதி கண்ணே
10.Devadhaiyai kandaen
09.Enkitta modhadhe
08.Kaeladi kanmani
07.Nee padhi naan padhi
06.Thaedinaen vandhadhu
03.Ooru vittu ooru vandhu
02.Manam virumbudhe unnai
01.Aval varuvala
4. பம்பரக் கண்ணாலே (மிகவும் சுலபமானது இது தான் :-))
5. கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே
7. (பிரபலமான பாடல் - சட்டென்று நினைவுக்கு வரவில்லை!)
8. கேளடி கண்மணி
உங்கள் வலைப்பூ, தமிழ்மண மறுமொழி நிலவர சேவையில் இல்லையா?
2) manam virumbudhae unnai -- Naerukku Naer
3) Ooru vittu ooru vandhu - Karakattakaran
4) Pambarakkannalae kathal sankathi sonnalae - Maragatham (I Guess)
5) kannu pada pokuthaiya chinna koundarae - Chinna kounder
6) Thaedinaen vanthathu nadinaen nindaruthu -- Ooty varai uravu
7)Nee pathi naan pathi kannae - Kaeladi Kanmani
8) Kaeladi kanmani patagan sankathi -- puthu puth arthankal
10)ennoda raasi nalla raasi - mappillai
one small correction in my previous answers.
10) engitta mothathaey naan rajathi rajanada -- Rajathi raja
அப்பாடா... !
நிறைய சரியான விடைகள் வந்துள்ளன...
மிக்க மகிழ்ச்சி... !!
சிபி : நல்ல Answers... Cheers and Keep Blogging... !
கானா பிரபா : உங்கள் போட்டோவில் அற்புதமான Lighting... யார் எடுத்தது ?
லதா : முத்தான மூன்று பதில்கள். மூன்றும் சரியே... வாழ்த்துக்கள்...
சேதுக்கரசி : விடைகளுக்கு நன்றி...
// உங்கள் வலைப்பூ, தமிழ்மண மறுமொழி நிலவர சேவையில் இல்லையா? //
அப்படியென்றால் என்ன ? சுத்தமாகப் புரியவில்லை... (வலைப்பூ விஷயங்களில் நான் தவழும் குழந்தை)
தயவு செய்து விளக்கினால் மகிழ்வேன்...
அருப்புக்கோட்டையன் : எல்லா விடைகளும் அருமை... கலக்கீட்டிங்க... !
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்... !
oops, so I am late this time :(
என் படம் ஒரு ப்ரொபெஷனல் போட்டோகிராபரால் எடுத்தது, அதுதான் அப்படி.
உங்கள் பதிவுகள் பின்னூட்டமிட்டவுடன் தமிழ்மண வலதுபக்கப் பெட்டியில் மறுமொழியிட்ட இடுகையாகத் தெரிவதில்லை. சரி பார்க்கவும், அல்லது தமிழ்மணத்துக்கு மடல் போடவும்
தமிழ்மண முகப்புப் பக்கத்தில் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்றொரு பகுதி இருக்குமே? பார்த்திருக்கிறீர்களா? அதில் உங்கள் பதிவின் மறுமொழி நிலவரம் தெரிந்தால் இன்னும் பலரைச் சென்றடையும். மறுமொழி நிலவர சேவை பற்றி எனக்குத் தெரிந்தது:
தமிழ்மணம் 'பதிவு' கருவிப்பட்டை
http://thamizmanam.com/tmwiki/index.php?id=toolbar
மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை அறிவிக்க
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html
தமிழ்மணம் மறுமொழி நிலவரம் சேவை: வ. கே. கே.
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post_17.html
தேன்கூடு
http://www.thenkoodu.com/blog/help/features/comments-page
உதவி:
http://thamizmanam.com/tmwiki/index.php?id=help
http://thamizmanam.blogspot.com
http://tamilblogging.blogspot.com
Excellent Topic,
After a long search this is the only topic where I could answer all the questions.
Keep posting more.
Cheers...
Mannikavum tamil font enable aga villai.
Post a Comment