30 May 2008

இன்றைய விஷயம் - 30-05-2008 : சினிமாப் பாட்டில் உடல் உறுப்புகள்



தமிழ்ச் சினிமாப் பாடல்கள் சிலவற்றின் முதல் வார்த்தை நம் உடல் உறுப்பில் ஒன்றாக இருக்குமாறு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. அல்டிமேட் ஸ்டார் + அல்டிமேட் ஸ்டார்
2. மூன்று ரிப்பீட்டுகளில் ஒன்றின் தம்பி + சேனாதிபதியின் அமிர்தம்... காம்பினேஷனே கிரேஸியா இருக்கே... !
3. வைஷ்ணவி + ராமு + மதுமிதா + விசு + கிருஷ்ணவேணி etc.,
4. மின்னல் சென்னும், போடாங்கோ நாயகனும், குத்துப் பாட்டும்.
5. பஞ்சாப் முதலாளியும், கல்கத்தா முதலாளியும்...
6. டிராவல்ஸ் டிரைவரும், ராஜகுமாரியும் flower-ம், bell-மாய் இணைந்த படப்பாடல். (ராஜகுமாரனின் மனைவி ராஜகுமாரிதானே... ! )
7. நீ வருவாய் என படத்தில் நட்புக்காக நடித்தவர் இதில் நாயகன். அதே படத்தின் ஹீரோ இதில் கௌரவ நடிகர். சின்னத்திரையில் சமீபத்தில் கால் பதித்த பெரிய திரை நாயகி...
8. மீண்டும் அமிர்தம் + மாதவ படையாச்சி = Mrs. (bharath+vikram)
9. குள்ளராஜன் + ஆதியின் சுமி சேர்ந்து... “இது இப்போது ஜாஸ்தியாயிருக்கு” எனப் பாடுவார்கள்.
10. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்பார் “இங்கே என்னடி INJURY… ?”

நீங்களும் முயற்சிக்கலாமே... மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

11 comments:

MyFriend said...

1- தல போல வருமா ஏ தல போல வருமா? (அட்டகாசம்)
3- கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்)
4- கை கை கை கை வைக்குறா (பகவதி.. எங்க ஊருல படம் பேன் செய்யப்பட்டு பசுபதியா வெளியாகியது):-)))
7- இடுப்பு சேலைக்குள்ள (உன்னை கொடு என்னை தருவேன்).. ஆனா படத்துல ஹீரோயின் சிம்ரன். ஜோதிகா இல்லையே

2- பிரபு படம்ன்னு தெரியுது.. க்ரேஸி மோகன் காம்பினேஷனா?
6- முரளி, தேவயானி --??
9- பாண்டியராஜன். "ஆதியின் சுமி சேர்ந்து" புரியல. :-(..

5, 8& 10 தெரியல

கப்பி | Kappi said...

1. தல போல வருமா
2. காதோரம் லோலாக்கு???
3. கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
4. கை கை வைக்கிறா
5. நெஞ்சினிலே நெஞ்சினிலே - உயிரே
6. தோள்மேல தோள் மேல
7. இடுப்பு சேலைக்குள்ள
8. பாதக்கொலுசு மணி
9. வாய்க்கொழுப்புதான் இப்போது - வாய்க்கொழுப்பு
ஒரு கெளதமி எப்படி ஆதியின் சுமி? குழப்பமா இருக்கே :D

10. கன்னத்தில் என்னடி காயம்

குமார் வீரராகவன் said...

1) தல போல வருமா - அட்டகாசம்
2) காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே
3) கண்ணோடு காண்பதெல்லாம் - ஜீன்ஸ்
4) கை கை கை கை கை வெக்கிறான் - பகவதி
5) நெஞ்சினிலே நெஞ்சினிலே - உயிரே
6) தோள் மேல தோள் மேல - பூமணி
7) இடுப்பு சேலைக்குள்ள - உன்னைக்கொடு என்னைத்தருவேன்
8) பாதக் கொலுசுப் பாட்டு - திருமதி பழனிச்சாமி
9) வாய்க்கொழுப்பு தான் - வாய்க்கொழுப்பு
10) கன்னத்தில் என்னடி காயம் - தனிப்பிறவி

thamizhparavai said...

1.தல போல வருமா?
2.காதோரம் லோலாக்கு..
3.கண்ணோடு காண்பதெல்லாம்..
4.கை கை கை கை வைக்கிறான்..
5.
6.தோள் மேல தோள் மேல...
7.இடுப்பு சேலைக்குள்ள...
8.பாத கொலுசு பாட்டு..
9.
10.கன்னத்தில் என்னடி காயம்..

thamizhparavai said...

9.வாய்க்கொழுப்புதான் இப்போது...

thamizhparavai said...

5.நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே...
தல இந்த தடவை எல்லாமே சரின்னு நினைக்கிறேன்..

Ranganathan. R said...

வணக்கம் மை ஃபிரண்ட்...

வந்தமைக்கும், விடைகள் தந்தமைக்கும்... மிக்க நன்றி...

வாழ்த்துக்கள்...

Ranganathan. R said...

கப்பிப்பயலே கப்பிப்பயலே...

பின்னீட்டீங்க... 10/10...

Cheers...

Ranganathan. R said...

கும்மாங்கோ... !

எப்பவும் போல எல்லாமே சரிதான்...

மீண்டும் வருக... !

Ranganathan. R said...

தமிழ்ப்பறவையே... !

நீங்கள் சொன்னமாதிரி இந்த முறை எல்லாமே சரி...

ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

MyFriend said...

அறிவுஜீவி அறிவுஜீவிதான்.

கப்பி = அறிவுஜீவி. :-)