21 December 2006

இன்றைய விஷயம் – 21-12-2006 : இந்த SCENE – SHOT எந்தப் படம் ?



உதவி இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் நடிகரிடமோ, நடிகையிடமோ (கதாநாயகன், கதாநாயகி, வில்லன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) ஒரு SHOT பற்றிய விவரிப்பு செய்வது இங்கே தரப்பட்டுள்ளது. அது எந்தப் படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ரெடி... ஜூட்...

1. “மேடம்… இந்த ஷாட்ல நீங்க இந்த CHAIRல உட்கார்ந்த மாதிரியே RIGHT SIDE திரும்பறீங்க… அப்படியே… கண்ணுல தண்ணி வரணும்… உங்க PHOTO ஒண்ணு எடுத்துக் காட்டறீங்க… ஒரு ரெண்டு செகண்ட் கழிச்சு அப்படியே PHOTOவைத் திருப்பறீங்க… அவ்வளவுதான்…”

2. “சார்… நீங்க மாட்டு வண்டியில படுத்திருக்கீங்க… அப்ப ஒரு கூட்டம் அந்தப் பக்கமா போகுது… அதுல கோயில் யானையும் உண்டு… நீங்க வானத்தையே பாக்கறீங்க… கைல ஒரு சுருட்டு… கொஞ்ச நேரத்துல கோயில் யானை உங்க பக்கம் வருது… கட் பன்றோம்… “

3. “சார்… ஹீரோயின் சத்தம் போட்டுட்டு, போறதுக்காகத் திரும்பறாங்க… அப்ப அவங்க சுடிதார்ல ஒரு செயின் மாட்டிக்குது… செயினோட இன்னொரு முனை உங்க கைல இருக்கு. அப்படியே FEELINGஆ ஒரு லுக்… அங்க ஒரு கட்… “

4. “சார் நீங்க கதவைத் தொறந்துகிட்டு ரூமுக்குள்ள வர்றீங்க… LONG SHOTல நீங்க… CLOSE UPல அவங்களும், அவரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நிக்கறாங்க… அந்த அம்மா அழுதுகிட்டு இருக்காங்க… நீங்க அப்பாவியா அதிர்ச்சியாயிட்டு அப்பறம் டயலாக் பேசறீங்க… பேசிக்கிட்டே போய் நீங்க கட்டிப் பிடிக்கறீங்க… அப்ப உங்க மனைவி ENTRY… கட்… “

5. “மேடம்… நீங்க பன்றீங்க… SCHOOL UNIFORMலயே அப்படியே தொறந்திருக்கிற ஒவ்வொரு CLASS ROOM கதவையா சாத்திக்கிட்டே வர்றீங்க… கட்… “

6. “சார்… நீங்க ஆர்வமா கேட்டுக்கிட்டே வந்து அங்க இருக்கிற சேர்ல முனையில உட்கார்றீங்க… ஒரு அஞ்சு செகண்ட் GAP விட்டு இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி உட்கார்றீங்க… இன்னும் உள்ள… இன்னும் உள்ள நல்லா சாஞ்சி உட்கார்ந்து கால் மேல கால் போட்டுக்கறீங்க… “

7. “சார்… அந்த அம்மா கொண்டு வந்த சாப்பாட்டை சாப்டுட்டு… கையைத் துடைக்க, நோட்ல இருந்து ஒரு பேப்பரைக் கிழிக்கிறீங்க… அப்ப அந்த அம்மா அவசரமா தன்கிட்ட இருக்கிற வாட்டர் பாட்டிலைத் தர்றாங்க… நீங்க அவங்களை ROMANCEஆ பாத்துக்கிட்டே கையைக் கழுவுறீங்க… “

8. “மேடம்… நீங்க ஓடற ரயில்ல இருந்து குதிச்சு ஹீரோவைப் பாத்து ஓடி வர்றீங்க… கண்ணுல ஆனந்தக் கண்ணீர்… ஹீரோவோட சட்டையைத் தொட்டுக் காட்டி அது நான்தான்னு சைகை செய்யறீங்க… கட்… “

9. “மேடம்… நீங்க கல்யாண டிரெஸ்ல, அழுதுகிட்டே ஓடி வந்து இங்க சாஞ்சு உட்கார்றீங்க… பயங்கரமா அழறீங்க… CAMERA அப்படியே ZOOM BACK ஆகி, TOP ANGLE போய், ஒரு FULL ROUND அடிச்சு, TILT DOWN ஆகுது… அங்க அந்தப் பக்கம் ஹீரோ அழுதுகிட்டே இருக்கார்… கட்… “

10. “காரை விட்டு அந்த அம்மா இறங்கினதும்… நீங்க காருக்குள்ள இருந்த மாதிரியே உன்னோட வீட்டு நம்பர் என்னன்னு கேக்கறீங்க… அவங்க பதில் சொல்லாம… காரோட கண்ணாடில 18ன்னு எழுதுறாங்க… அதை இந்தப் பக்கம் இருந்து பாக்கற நீங்க 81ன்னு புரிஞ்சிக்கறீங்க… “


நீங்களும் முயற்சிக்கலாமே…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/21-12-2006-scene-shot.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



21 comments:

பினாத்தல் சுரேஷ் said...

ஒன்றிரண்டு தெரிகிறது.. நல்ல குவிஸ்.

2. பாபா.. அப்புறம் அந்த யானை வேலை மெனக்கெட்டு ஆசிர்வாதம் வேற பண்ணும்;-)

3. அக்னி நட்சத்திரம் - கார்த்திக் ரேவதி இதைப்படிச்சவுடன் அந்த பேமஸ் ரீரெகார்டிங்கும் கூட ஞாபகம் வந்துது. சொகத்துக்கும் ஜாலிக்கும் ஒரே ட்யூனை டெம்போ மாத்தி விளையாடியிருக்கும் தலை!

4. சதி லீலாவதியா? ஹீராவைக் கமல் கட்டிப்பிடிக்கற நேரத்தில கோவை சரளா எண்ட்ரி?

8. காதல் கோட்டை கிளைமாக்ஸ்.

9. ஏப்ரல் மாதத்தில் கிளைமாக்ஸ்

Ranganathan. R said...

சுரேஷ்,

வந்தமைக்கு, விடைகள் தந்தமைக்கு மிக்க நன்றி... சொன்னவரை விடைகள் மிகச் சரியே...

Cheers... !

இலவசக்கொத்தனார் said...

2) தலைவர் படம் - பாபா.

அது ஒண்ணுதாங்க தெரியுது.

KSB said...

2. BaBa
3. Gemini ( Guess)
4. Sathi Leelavathi
5. Kadal
6. Amaidhipadai
7. Sethu
8. lesa lesa ( guess)

Ranga anna ur posts all supero super...

Regards
srinath

பாலராஜன்கீதா said...

1. சிந்து பைரவி
3. காதலுக்கு மரியாதை
8. காதல் கோட்டை
9. காதலர் தினம்

dondu(#11168674346665545885) said...

"காரை விட்டு அந்த அம்மா இறங்கினதும்… நீங்க காருக்குள்ள இருந்த மாதிரியே உன்னோட வீட்டு நம்பர் என்னன்னு கேக்கறீங்க… அவங்க பதில் சொல்லாம… காரோட கண்ணாடில 18ன்னு எழுதுறாங்க… அதை இந்தப் பக்கம் இருந்து பாக்கற நீங்க 81ன்னு புரிஞ்சிக்கறீங்க…"

நான் சொல்லப் போற சீன்ல அவங்க நம்பரை 88-ன்னுதான் எழுதறாங்க. நீங்க தப்பான எட்டு முதலில் வருவதாக நினைத்துக் கொண்டு செயலாற்றியதால், சரியான எட்டுக்கு ஒரே கடுப்பு. அப்போ ஒரு தத்துவப்பாடலை இளையராஜா ரஹ்மான் ம்யூசிக்கில் பேக்ரௌண்டிலே பாடறாரு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1. ?
2. BaBa
3. Mouna Ragam
4. Sathi Leelavathi
5. Thulluvatho Ilamai???
6. Amaithipadai
7. Sethu
8. Kadhal Kottai
9.
10. Konw the movie, couln't recollect the name!

Anonymous said...

2. baba
4. sathi leelavathi
6. amaithi padai
8. kaadhal kottai
9. april maadathil
10. jeeva

Anonymous said...

2.baba
3.mouna raagam
4.azhagi
5.kaadhal
6.amaidhi padai
7.sethu
8.kaadhal kottai
9.april maadhathil

Anonymous said...

4. Sathileelavathi

Anonymous said...

3. Mauna Ragam

பிரதீப் said...

1. muthal mariyaathai?
2. baba
3. mouna ragam
4. sathi leelavathi
5. kaathal
6. amaithi padai
7. sethu
8. kaathal kottai
9. suthama theriyalai (ithu padam peru illanga!)
10. manmatha leelai?

KSB said...

8. kadal kottai
9. April Madathil
10. sathyaraj film..

Ranganathan. R said...

// தலைவர் படம் - பாபா.
அது ஒண்ணுதாங்க தெரியுது.//

வாங்க... ! ஒரு பதில் சொன்னாலும் நெத்தியடியா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்... !

Ranganathan. R said...

வணக்கம்... பாலராஜன்கீதா... !!

வருகை தந்து விடைகள் முயன்றமைக்கு நன்றி... !!

விடைகளில் பல சரி... சில தவறு...

Thanks... !

Ranganathan. R said...

// நீங்க தப்பான எட்டு முதலில் வருவதாக நினைத்துக் கொண்டு செயலாற்றியதால், சரியான எட்டுக்கு ஒரே கடுப்பு. அப்போ ஒரு தத்துவப்பாடலை இளையராஜா ரஹ்மான் ம்யூசிக்கில் பேக்ரௌண்டிலே பாடறாரு. //

ராகவா... !! இதென்ன விளையாட்டு... ஆனாலும் ரசித்துச் சிரித்தேன்...

Cheers... !

Ranganathan. R said...

Sampal... and... Anonymous...

Good Answers... Keep Looking for more...

Thanks for visiting and trying...

Ranganathan. R said...

// suthama theriyalai (ithu padam peru illanga!) //

பிரதீப்... !

உங்கள் ரசனை பாராட்டுக்குரியது...

நன்றி... !

Ranganathan. R said...

சூர்யா... & கல்யாண்...

விடைகள் அருமை...

Keep it Up...

Thanks... and... Enjoy...

Anonymous said...

10.poovizhi vaasalile???

Anonymous said...

10.poovizhi vaasalile???