05 March 2008

இன்றைய விஷயம் : 03-03-2008 – விடுகதைக்குள் தமிழ்ப் படம்


தரப்பட்டுள்ள விடுகதைகளைக் கொண்டு தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். (8 மட்டும் கொஞ்சம் கடினம்… ?)

1. இமயமாம் இந்த ராசா… இணைஞ்சதாம் திலகத்தோட… அது என்ன ?
2. திரிச்சிப் பேசுன பொய்க்காக பிரிச்சிப் போட்டானாம் பேச்சுறுப்ப… !
3. தாலாட்டு கேக்குதம்மா… திருட்டு முழிக்காரன்கிட்ட…
4. மச்சு வீடு கட்டிப் பார்க்க… மக்கா குடும்பமே வந்தது கிராமத்துக்கு…
5. செல்லாத காசு பேர வெச்சு… செல்லுலாய்டில் ஒரு சிற்பம்…
6. அஞ்சு பேரக் கொன்னுட்டுப் பொறந்தா… அவன் பேரு கடவுளா… ?
7. கட்டுன பூ இல்லாம பாக்கிய வெச்சு… கலக்கலா ஒரு காவியப் படம்
8. மூக்குங்குறது விடையானா… அதுக்கான விடுகதை என்ன… ?
9. இம்மாம் பெரிய பேரு வெச்சு… இந்தக் காலத்துல ராஜா படமா… ?
10. ஆட்டத்துக்கு நடுவுல ஆசைக் காதல்… ஆத்தி… ! இது தபால் குறியீடு…

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

20 comments:

Venkatramanan said...

1. பசும்பொன்
2. சொல்லாமலே
5. ஒன்பது ரூபாய் நோட்டு
6. சாமி (இது ஆறாவது கேள்வியாய் வந்திருப்பது தற்செயலா? தனிச்செயலா?)
9. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

சேதுக்கரசி said...

4. பாண்டவர் பூமி
8. என் சுவாசக் காற்றே
9. இம்சை அரசன் இருபத்திமூன்றாம் புலிகேசி

சேதுக்கரசி said...

//8 மட்டும் கொஞ்சம் கடினம்… ?//

அதுசரி! மத்ததையெல்லாம் எதுல சேர்க்கிறதாம்? :-)

Surya said...

WELCOME DHODDA ANNA!!!
10.Chennai-600028
09.Imsai Arasan 23m Pulikesi
08.En Swasa Kaatre???!!!
07.
06.Saami
05.Onbadhu Roobai Nottu
04.Paandavar Bhoomi
03.Thaaikulame Thaaikulame?
02.Sollamale
01.Mudhal Mariyadhai....
will try 7th

Surya said...

07.S it Ambigapathi???

Surya said...

03.Aararo Aariraro?
07.UDHIRI POOKAL

Ranganathan. R said...

வெங்கட்ரமணன்,

வணக்கம்... அது எப்படி... உடனேயே பதில்களைத் தந்துவிடுகிறீர்கள்... !

வாழ்த்துக்கள்...

6-வது தற்செயலே (அட... !)

Ranganathan. R said...

வாங்க சேதுக்கரசி...

ஒவ்வொரு முறையும் உங்கள் விடைகளைவிட உங்கள் COMMENTS ரசிக்க வைக்கிறது... இயல்பான நகைச்சுவையாளர் நீங்கள்...

Ranganathan. R said...

சூர்யா... வரணும்... வரணும்...

சொன்ன எல்லா விடைகளும் சரியே...

கலக்கிட்டீங்க... !!

பாச மலர் said...

2. சொல்லாமலே
4. பாண்டவர் பூமி
7. உதிரிப்பூக்கள்
9. இம்சையரசன் 22ம் புலிகேசி

சரி..விடை தெரிஞ்சா மீண்டும் வர்றேன்..

பாச மலர் said...

1.எதிரொலி/முதல் மரியாதை
3. ஆராரோ ஆரிரரோ

மீண்டும் விடை சொல்ல/விடை பார்க்க வருகிறேன்..

கும்மாங்கோ said...

1. முதல் மரியாதை
2. சொல்லாமலே
3.
4. பாண்டவர் பூமி
5. ஒன்பது ரூபாய் நோட்டு
6. சாமி (?)
7. உதிரிப் பூக்கள்
8.
9. ராஜாதி ராஜ ... காமராஜன் / இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
10. சென்னை 600028

கும்மாங்கோ said...

1. முதல் மரியாதை
2. சொல்லாமலே
3. தாய்க்கு ஒரு தாலாட்டு (?)
4. பாண்டவர் பூமி
5. ஒன்பது ரூபாய் நோட்டு
6. சாமி
7. உதிரிப் பூக்கள்
8. என் சுவாசக் காற்றே (?)
9. ராஜாதி ராஜ ... காமராஜன் / இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
10. சென்னை 600028

Surya said...

8th answer enna anna?

Ranganathan. R said...

பாசமலர் வரணும் வரணும்...

முயற்சி செய்து தந்த விடைகள் அத்தனையும் சரியே... வாழ்த்துக்கள்..

Ranganathan. R said...

அட கும்மாங்கோவா அது... !

எவ்வளோ நாளாச்சு பார்த்து...

கேள்விக்குறி பதில்கள் இரண்டைத்தவிர மற்றவை மிகச்சரியே...

Cheers... !

Ranganathan. R said...

எட்டாவதுக்கான விடை...

ஒரு வீடு இரு வாசல்... (!)

Surya said...

8th sema kalakkal....

Radhika said...

Goood one... kalakitta..

பாச மலர் said...

ஒரு வீடு இரு வாசல்..அட..ஆமா.. எப்படித்தான் புதிரை யோசிச்சீங்களோ