23 June 2008

இன்றைய விஷயம் : 23-06-2008 – தமிழ்ச்சினிமாவில் வினோதத் தொடர்ச்சி


தரப்பட்டிருக்கும் குறிப்புகளில் இருந்து ஜொடியான இரண்டு தமிழ்ப்படங்களின் பட்டியலைக் கண்டுபிடியுங்கள். முதல் படத்தின் பெயரின் கடைசி வார்த்தைதான், இரண்டாது படத்தின் பெயரின் முதல் வார்த்தை. (உம். உன்னால் முடியும் தம்பி – தம்பி தங்கக் கம்பி) இந்த இரு படங்களில், முதல் படத்தின் கடைசி வார்த்தைதான் இரண்டாவது படத்தின் முதல் வார்த்தை. என்ன... புரிஞ்சுதா,,, ? இரண்டு படங்களுக்கான குறிப்புகளும் ‘+’ ஆல் வேறுபடுத்தப்பட்டுள்ளன.

1. பூவே செம்பூவே + ஜெயராம் – குஷ்பு ஜோடியின் மூன்றில் ஒன்று.
2. இவங்க ஜோடி ஜோர்யா (பேர்லயே கூட) + கூர்கா இயக்குனரின் தமிழர் விளையாட்டு.
3. சென்னை பட்டணம் + சுஜாதா, P.C கூட்டணி.
4. தக்காளி ராஜ்கபூர் + கலைப்புலியின் கோட்டை
5. லைலா - மணியின் பிரியமான சிஷ்யை + கவிப்பேரரசின் தேசிய விருதும்
6. சூப்பர் ஸ்டார் மிருகமாக + சுப்பரும் இல்லாமல் குட்-ஆகவும் இல்லாத இரண்டாது புதல்வன்.

7. வில்லுக்கு சமஸ்கிருதம் – முதல் படம் + என்னடி மீனாட்சி
8. நேற்று போல் இன்று இல்லை + இது என்ன ஊர்... சிங்கப்பூர்...
9. புரட்சித் தலைவர் JB-யாக + வைஷ்ணவியும் பொம்மைப் பேயும்...
10. அது பரிட்சை இல்லை... ஒரு ஃபீலிங் + குண்டலகேசியாக கவுண்டர்

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்... இரா. அரங்கன்…

13 comments:

kavidhai Piriyan said...

Ranga.......
Kalakaure po !!!

வினையூக்கி said...

1.சொல்ல துடிக்குது மனசு - மனசு ரெண்டும் புதுசு
8.தம்பிக்கு எந்த ஊரு - ஊருவிட்டு ஊரு வந்து
9. அன்பே வா - வா அருகில் வா
10. பூவே உனக்காக - உனக்காக எல்லாம் உனக்காக

வினையூக்கி said...

7. தனுஷ், துள்ளுவதோ இளமை, இளமை ஊஞ்சலாடுகிறது

வினையூக்கி said...

5.பிரியா, கண்ட நாள் முதல், முதல் மரியாதை

நையாண்டி நைனா said...

1. பூவே செம்பூவே + ஜெயராம் – குஷ்பு ஜோடியின் மூன்றில் ஒன்று.
சொல்லத் துடிக்குது மனசு + மனசு ரெண்டும் புதுசு

2. இவங்க ஜோடி ஜோர்யா (பேர்லயே கூட) + கூர்கா இயக்குனரின் தமிழர் விளையாட்டு.
ஜில்லென்று ஒரு காதல் + காதல் சடுகுடு

3. சென்னை பட்டணம் + சுஜாதா, P.C கூட்டணி.
அள்ளி தந்த வானம் + வானம் வசப்படும்

4. தக்காளி ராஜ்கபூர் + கலைப்புலியின் கோட்டை
சென்னைக்காதல் + காதல் கோட்டை

5. லைலா - மணியின் பிரியமான சிஷ்யை + கவிப்பேரரசின் தேசிய விருதும்

6. சூப்பர் ஸ்டார் மிருகமாக + சுப்பரும் இல்லாமல் குட்-ஆகவும் இல்லாத இரண்டாது புதல்வன்.

7. வில்லுக்கு சமஸ்கிருதம் – முதல் படம் + என்னடி மீனாட்சி
துள்ளுவதோ இளமை + இளமை ஊஞ்சலாடுகிறது

8. நேற்று போல் இன்று இல்லை + இது என்ன ஊர்... சிங்கப்பூர்...
தம்பிக்கு எந்த ஊரு + ஊரு விட்டு ஊரு வந்து

9. புரட்சித் தலைவர் JB-யாக + வைஷ்ணவியும் பொம்மைப் பேயும்...
அன்பே வா + வா அருகில் வா

10. அது பரிட்சை இல்லை... ஒரு ஃபீலிங் + குண்டலகேசியாக கவுண்டர்
பூவே உனக்காக + உனக்காக எல்லாம் உனக்காக

Ranganathan. R said...

கவிதைப் பிரியனே... !

என்ன பதில்களையே காணோம்... ?

Ranganathan. R said...

வினையூக்கி,

முதலில் இந்த மாதிரி ஒரு பெயரை வைத்துள்ளதற்காக வாழ்த்துக்கள்...

பதில்கள் சொன்னவரை சரியே...

பிரமாதம்... !

Ranganathan. R said...

நையாண்டி...

அது எப்படி... ? சொன்ன பதில்கள் அத்தனையும் கரெக்ட்...

Cheers...

SuryaRaj said...

10.Poove Unakkaga-Unakkaga Ellam Unakkaga
09.Anbe Vaa-Vaa Arugil Vaa
08.Thambikku Endha Ooru-Ooru Vittu Ooru Vandhu
07.Thulluvadho Ilamai-Ilamai Oonjaladugiradhu
06.Paayum Puli-Puli Varudhu
05.Kanda Naal Mudhal-Mudhal Mariyadhai
04.Chinna Jameen-Jameen Kotai
03.Alli Thandha Vaanam-Vaanam Vasapadum
02.Sillunnu Oru Kaadhal-Kaadhal Sadugudu
01.Solla Thudikkudhu Manasu-Manasu Rendum Pudhusu -SuryaRaj

Anonymous said...

1. sollath thudikkudhu manasu, manasu reNdum pudhusu
2. sillunu oru kAdhal, kAdhal sadugudu
3. aLLi thandha vAnam, vAnam vasappadum
4. chinna jamIn, jamIn kOttai
5. kaNda nAL mudhal, mudhal mariyAdhai
6. pAyum puli, puli varudhu
7. thuLLuvadhO iLamai, iLamai UnjalAdugiRadhu
8. thambikku endha Uru, Uru vittu Uru vandhu
9. anbE vA, vA arugil vA
10. pUvE unakkAga, unakkAga ellAm unakkAga

Ranganathan. R said...

சூர்யா & ஜீரோ,

10/10... பிரமாதம்... கலக்கிட்டீங்க...

வாழ்த்துக்கள்... !

குமார் வீரராகவன் said...

1) சொல்லத் துடிக்குது மனசு - மனசு ரெண்டும் புதுசு
2) சில்லுனு ஒரு காதல் - காதல் சடுகுடு
3) அள்ளித் தந்த வானம் - வானம் வசப்படும்
4) சின்ன ஜமீன் - ஜமீன் கோட்டை
5) கண்ட நாள் முதல் - முதல் மரியாதை
6) பாயும் புலி - புலி வருது
7) துள்ளுவதோ இளமை - இளமை ஊஞ்சலாடுகிறது
8) தம்பிக்கு எந்த ஊரு - ஊரு விட்டு ஊரு வந்து
9) அன்பே வா - வா அருகில் வா
10) பூவே உனக்காக - உனக்காக எல்லாம் உனக்காக

Ranganathan. R said...

வணக்கம் கும்மாங்கோ...

சொன்ன விடைகளில் எல்லாம் சரியே...

நெத்தியடி... !

வாழ்த்துக்கள்...