10 December 2008

இன்றைய விஷயம் : 10-12-2008 – தமிழ் சினிமாவில் இலக்கணம் – அடுக்குத்தொடர்



தமிழ்ச்சினிமாப் பெயர்களில் சில இரண்டு வார்த்தைகளைக் கொண்டிருக்கும். அவை இரண்டுமே ஒரே வார்த்தையாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குள்ள ராஜன் + குஷ்பு
2. AVM + ஷாம்
3. பிரசன்னா + குற்றாலம் (சமீபத்தியது)
4. ஜோடி JUDGE + குள்ள ராஜன் + ஒரு விளையாட்டு
5. TT விக்ரம் + அஷோக் + லட்சுமி நாராயணன்
6. சேதுவின் தம்பி பாண்டியா... !
7. S.Ve Sekar இயக்கிய கண்ணனின் படம்
8. நேபாளிப் பெண் + குள்ள ராஜன் + ஊர்வசி
9. மம்முட்டிக்கு ஜோடி ஐஸ்வர்யாவா... !
10. ராமலிங்கம் – சுந்தரலிங்கம்

நீங்களும் முயற்சிக்கலாமே... !
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

29 October 2008

இன்றைய விஷயம் : 29-10-2008 – தமிழ் சினிமாவில் இங்கிலீஷ்ஷ்ஷ்... !



தமிழ்ப் படங்களின் பெயர்களில் சில ஆங்கில வார்த்தைகளாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
உப-குறிப்பு : எண்களைப் பெயர்களாகக் கொண்ட படங்கள் இதில் இல்லை. (உ.ம்) 123, 12B etc.,
ரெடி... ஜூட்...

1. கோவிந்தா
2. விக்ரமேஜிக்கியன்
3. ஆள்தோட்ட பூபதி
4. கணேஷ்-சந்தியா
5. கிச்சா
6. ஆங்கில அகரம் நாலு
7. கமல்... ரயில்...
8. வைகை... எலி... பஸ்
9. ஆனந்த விகடன்... அது... !
10. கருப்பு வெள்ளை பஸ்... கிக்...

நீங்களும் முயற்சிக்கலாமே... !
மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

13 October 2008

இன்றைய விஷயம் : 13-10-2008 – தமிழ் சினிமாவில் 1... 2... 3...

குறிப்புகளில் இருந்து மூன்று மூன்றாகத் தரப்பட்டுள்ள தமிழ் சினிமா பெயர்களைக் கண்டுபிடியுங்கள்.

குறிப்பு : ஒவ்வொரு மூன்று சினிமாக்களுள் ஒரு ஒற்றுமை உண்டு. முதல் சினிமாப்பெயர் ஒரு வார்த்தை மட்டுமே கொண்டது. இரண்டாம், மூன்றாம் சினிமாப்பெயர்கள், முறையே இரண்டு மற்றும் மூன்று வார்த்தைகள் கொண்டது, அவற்றுள் ஒரு வார்த்தை முதல் சினிமாவின் பெயராகும். (போதுமா... !)

(உம்) நல்லவன், நல்லவனுக்கு நல்லவன், நாட்டுக்கு ஒரு நல்லவன்

ரெடி... ஜூட்...

1. சிவாஜி, ரஜினி, பிரபு (Kingடா)
2. ரஜினி, வைரமுத்து பிறந்த ஊர் + ரஜினி, ஜெயராம்+கவுண்டர்
3. ?, பார்த்திபன் + பாரதி, ரஜினி + ராபின்ஹூட்
4. வேலுத்தொண்டைமான், விஜயகாந்த், கமல் + AVM
5. சங்கீதா, செயின் ஜெயபால், பாரதிராஜா + பாபு + ரமா
6. ஜிகர்தண்டா, வினோத் + திவ்யா, சுப்ரபாதம் + டெலிபோன்
7. சிம்பு, கங்கை அமரன் + கேப்டன், சின்னமணி (தே.மு.தி.க)
8. செல்வமணி + காலேஜ், வசந்த் + SPB, விசு
9. மூவேந்தரில் ஒருவர், இருவர், மூவர்
10. நேரு, ஊர்வசி + குஷ்பு, ரஜினி + AVM + Cartoon

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

22 September 2008

இன்றைய விஷயம் : 21-09-2008 – தமிழ்ச்சினிமாவில் என்னோடு சேருங்கள்


தமிழ்ப் படங்களின் பெயர்களின் சிலவற்றில் இரண்டாவது வார்த்தை ‘என்’ என்று இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் இடம்பெற்ற ஒரு பாடல் தரப்பட்டுள்ளது. படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

குறிப்பு : எல்லாப் படங்களின் நடுவார்த்தையும் ‘என்’ தான்... ‘என்னை’ ‘எந்தன்’ இது மாதிரியெல்லாம் இல்லை... ரெடி... ஜூட்...
1. ஆண்டவனப் பாக்கனும்...
2. பொட்டு வைத்த முகமோ...
3. எட்டணா இருந்தா...
4. வானம்பாடி பாடும் எல்லாமே... !
5. சொர்க்கம் மதுவிலே...
6. மன்னா உன் கோவிலைத் தேடி... (ரேகா)
7. நம்பாத நம்பாத... சில பொன்னுங்கள நம்பாத...
8. உயிரே உயிரே... இது தெய்வீக சம்பந்தமோ... (மாஸ் + மனிஷா)
9. வீணை பேசும்... அதை மீட்கும் விரல்களைக் கண்டு...
10. பாடுவோர் பாடினால்...
(4-ம், 9-ம் google பண்ணுங்க... நானும் அதைத்தான் செஞ்சேன்...)

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்... இரா. அரங்கன்…

30 July 2008

இன்றைய விஷயம் - 30-07-2008 : தமிழ்ச் சினிமாவில் இரட்டை வேடம்...

கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடித்த படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு – 1 : அண்ணன் – தம்பி, அப்பா - மகன் வேடங்கள் இல்லை.
உப-குறிப்பு – 2 : ஒரே நடிகரின் இரண்டு டபுள் ஆக்‌ஷன் படங்கள் இல்லை.

1. பிரபுதேவா... ஜானகிராமன்... சுருக்கினால்... Super Star
2. கண்ணா... ரஜினிகாந்த்... செவாலியே... Never
3. ரெண்டு தளபதி... ரெண்டு தளபதி... Diamond Girl
4. சின்னா... விவேக்... STD Booth
5. பழைய கேடி... புதிய பதிப்பு... I am Back
6. இலங்கை ரேவதி... செல்லப்பா... Dancer Hero
7. பிரபு... விசு... கண்ணகி புருஷன்... Director
8. இருக்கு... இல்லை... Best Friend
9. குவாட்டர் கோவிந்தன்... சுத்தி சாமியார்... Cool Drinks

நீங்களும் முயற்சிக்கலாமே...

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

23 June 2008

இன்றைய விஷயம் : 23-06-2008 – தமிழ்ச்சினிமாவில் வினோதத் தொடர்ச்சி


தரப்பட்டிருக்கும் குறிப்புகளில் இருந்து ஜொடியான இரண்டு தமிழ்ப்படங்களின் பட்டியலைக் கண்டுபிடியுங்கள். முதல் படத்தின் பெயரின் கடைசி வார்த்தைதான், இரண்டாது படத்தின் பெயரின் முதல் வார்த்தை. (உம். உன்னால் முடியும் தம்பி – தம்பி தங்கக் கம்பி) இந்த இரு படங்களில், முதல் படத்தின் கடைசி வார்த்தைதான் இரண்டாவது படத்தின் முதல் வார்த்தை. என்ன... புரிஞ்சுதா,,, ? இரண்டு படங்களுக்கான குறிப்புகளும் ‘+’ ஆல் வேறுபடுத்தப்பட்டுள்ளன.

1. பூவே செம்பூவே + ஜெயராம் – குஷ்பு ஜோடியின் மூன்றில் ஒன்று.
2. இவங்க ஜோடி ஜோர்யா (பேர்லயே கூட) + கூர்கா இயக்குனரின் தமிழர் விளையாட்டு.
3. சென்னை பட்டணம் + சுஜாதா, P.C கூட்டணி.
4. தக்காளி ராஜ்கபூர் + கலைப்புலியின் கோட்டை
5. லைலா - மணியின் பிரியமான சிஷ்யை + கவிப்பேரரசின் தேசிய விருதும்
6. சூப்பர் ஸ்டார் மிருகமாக + சுப்பரும் இல்லாமல் குட்-ஆகவும் இல்லாத இரண்டாது புதல்வன்.

7. வில்லுக்கு சமஸ்கிருதம் – முதல் படம் + என்னடி மீனாட்சி
8. நேற்று போல் இன்று இல்லை + இது என்ன ஊர்... சிங்கப்பூர்...
9. புரட்சித் தலைவர் JB-யாக + வைஷ்ணவியும் பொம்மைப் பேயும்...
10. அது பரிட்சை இல்லை... ஒரு ஃபீலிங் + குண்டலகேசியாக கவுண்டர்

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்... இரா. அரங்கன்…

30 May 2008

இன்றைய விஷயம் - 30-05-2008 : சினிமாப் பாட்டில் உடல் உறுப்புகள்



தமிழ்ச் சினிமாப் பாடல்கள் சிலவற்றின் முதல் வார்த்தை நம் உடல் உறுப்பில் ஒன்றாக இருக்குமாறு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. அல்டிமேட் ஸ்டார் + அல்டிமேட் ஸ்டார்
2. மூன்று ரிப்பீட்டுகளில் ஒன்றின் தம்பி + சேனாதிபதியின் அமிர்தம்... காம்பினேஷனே கிரேஸியா இருக்கே... !
3. வைஷ்ணவி + ராமு + மதுமிதா + விசு + கிருஷ்ணவேணி etc.,
4. மின்னல் சென்னும், போடாங்கோ நாயகனும், குத்துப் பாட்டும்.
5. பஞ்சாப் முதலாளியும், கல்கத்தா முதலாளியும்...
6. டிராவல்ஸ் டிரைவரும், ராஜகுமாரியும் flower-ம், bell-மாய் இணைந்த படப்பாடல். (ராஜகுமாரனின் மனைவி ராஜகுமாரிதானே... ! )
7. நீ வருவாய் என படத்தில் நட்புக்காக நடித்தவர் இதில் நாயகன். அதே படத்தின் ஹீரோ இதில் கௌரவ நடிகர். சின்னத்திரையில் சமீபத்தில் கால் பதித்த பெரிய திரை நாயகி...
8. மீண்டும் அமிர்தம் + மாதவ படையாச்சி = Mrs. (bharath+vikram)
9. குள்ளராஜன் + ஆதியின் சுமி சேர்ந்து... “இது இப்போது ஜாஸ்தியாயிருக்கு” எனப் பாடுவார்கள்.
10. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்பார் “இங்கே என்னடி INJURY… ?”

நீங்களும் முயற்சிக்கலாமே... மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

09 May 2008

இன்றைய விஷயம் : 09-04-2008 – தமிழ்ச்சினிமாவும் பறவைகளும்...

தமிழ்ப்படப்பாடல்களில் சிலதில் முதல் வார்த்தையில் ஒரு பறவையின் பெயர் அமைந்திருக்கும் (றெக்கை இருப்பதெல்லாம் பறவைகளே !) அப்படிப்பட்ட பாடல்கள் / படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தைக் கண்டுபிடித்து பாடலையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. மலேயா போலிசாக M.R. ராதா நடித்த படம் (தாதா மிராஸி)
2. இருக்கு… ஆனா இல்லை…
3. ஆங்கிலப் பறவையே… ஆங்கிலப் பறவையே… (இது பாடலின் ஆரம்பம்)
4. நூ ஒஸ்தானண்டே நேனு ஒத்தண்டானா…
5. தேங்காய் சீனிவாசன் – ராதிகா (அன்பே… என்ன ஒரு ஜோடி… !)
6. சிம்பாஸ்தேவாரம் நடித்த படம்…
7. சோலையம்மாவும், ஓ போடு நாயகியின் பெயரைத் தன் பெயரோடு ஒட்டிக் கொண்டுள்ளவரும் நடித்த படம்…
8. வினிதாவும், விருதாலம் சட்டமன்ற உறுப்பினரும் ஜோடியாகப் பாடிய பாடல்.
9. நந்தகோபாலாஆஆஆ… குமாரிஈஈஈ… இது இரண்டும் ஹீரோ, ஹீரோயின் பெயர் இல்லை… ஆனால் படத்தில் இந்த வார்த்தைகள் வரும்…
10. ஒரு பழைய குழந்தைகள் விளையாட்டு… சம்மனமிட்டு உட்கார்ந்துகொண்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி ஒருவர் பாட, மற்றவர்கள் விளையாடுவார்கள். (அப்பாடா… சுத்தி வளைச்சு க்ளூ கொடுத்தாச்சு… )

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… இரா. அரங்கன்…

21 April 2008

இன்றைய விஷயம் - 20-04-2008 : தமிழ்ச் சினிமாவில் உறவுகள்


தமிழ்ப் படப் பெயர்களில் சிலவற்றில் உறவுகள் ஒளிந்திருக்கும். (உம். அன்புள்ள அப்பா) அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. சினிமாப் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப-குறிப்பு 1 : எந்த உறவும் இரண்டு முறை தரப்படவில்லை.
உப-குறிப்பு 2 : படங்களின் பெயர்களில் இடம்பெற்ற உறவுகள் (+ சில additional உறவுகள்)கேள்விகளுக்குக் கீழே தரப்பட்டுள்ளன (வரிசையாக அல்ல)

1. இட்லி நடிகையும், இன்று போய் நாளை வந்த நடிகரும் இணைந்த படம்…
2. வெத்தலை மடிச்சு கொடுத்த பொம்பளையாக ஊர்வசி நடித்த படம்…
3. வி. சேகர் இயக்கத்தில் ஜனகராஜ் மாமனார்…
4. வைதேகி காத்திருந்தாள் (விஜயகாந்த்+ரேவதி+சுந்தர்ர்ராஜன்) வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றிப்படம்…
5. கங்கை அமரன் இயக்கத்தில் செல்வா, ரஞ்சிதா நடித்த படம்…
6. வேலுத்தொண்டைமானாக A. Ars நடித்த படம்.
7. பராசக்தியில் உடன்பிறப்புதான் இதிலும் உடன்பிறப்பு (சிம்புவும் உண்டு)
8. கபி… கபி… மேரே தில் மே… (தமிழ் படத்தில் வந்த காமெடி குட்டிப் பாடல்-தாடிக்காரர்)
9. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று M.G.R பாடிய படம்…
10. நாரதர் நாயுடுவா அப்பாவின் அண்ணன்… !


(அண்ணன், அக்கா, அம்மா, தங்கை, மாமனார், மாமன், அத்தை, தம்பி, மச்சினி, மச்சான், மாமியார், மாப்பிள்ளை, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி)

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + இரா. அரங்கன்…


28 March 2008

இன்றைய விஷயம் : 28-03-2008 – ஆங்கிலமும், தமிழ்ச்சினிமாவும்


தமிழ்ச் சினிமாப் பாடல்களில் ஆங்கில வார்த்தையில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பாடல்களையும், படங்களையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : தரப்பட்டுள்ள குறிப்புகளும் ஆங்கிலத்திலேயே (உடைந்த) உள்ளன.

1. Tring Tring… Who is smiling ?
2. The name of the film – One of the two heroes in THIRUDA THIRUDA
3. It’s the dancer-actor’s JACKPOT to dance with this heroine, at least for a song.
4. A flower from this PLANET-METAL.
5. Annai Mary Matha + Sammanasu Pandian : A hero is born, and he is not OLD.
6. Alphabets from a Universal Hero.
7. Double Bell + a big sea director (C-ing him now as an actor)
8. What if one month goes ? It’s all because of YOU…
9. Hey… what happened to my question… you opposition party… !
10. Oh… Pair of Birds… ! sings the Parrot of Karnataka…

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

05 March 2008

இன்றைய விஷயம் : 03-03-2008 – விடுகதைக்குள் தமிழ்ப் படம்


தரப்பட்டுள்ள விடுகதைகளைக் கொண்டு தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். (8 மட்டும் கொஞ்சம் கடினம்… ?)

1. இமயமாம் இந்த ராசா… இணைஞ்சதாம் திலகத்தோட… அது என்ன ?
2. திரிச்சிப் பேசுன பொய்க்காக பிரிச்சிப் போட்டானாம் பேச்சுறுப்ப… !
3. தாலாட்டு கேக்குதம்மா… திருட்டு முழிக்காரன்கிட்ட…
4. மச்சு வீடு கட்டிப் பார்க்க… மக்கா குடும்பமே வந்தது கிராமத்துக்கு…
5. செல்லாத காசு பேர வெச்சு… செல்லுலாய்டில் ஒரு சிற்பம்…
6. அஞ்சு பேரக் கொன்னுட்டுப் பொறந்தா… அவன் பேரு கடவுளா… ?
7. கட்டுன பூ இல்லாம பாக்கிய வெச்சு… கலக்கலா ஒரு காவியப் படம்
8. மூக்குங்குறது விடையானா… அதுக்கான விடுகதை என்ன… ?
9. இம்மாம் பெரிய பேரு வெச்சு… இந்தக் காலத்துல ராஜா படமா… ?
10. ஆட்டத்துக்கு நடுவுல ஆசைக் காதல்… ஆத்தி… ! இது தபால் குறியீடு…

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

28 January 2008

இன்றைய விஷயம் : 28-01-2008 : திரைப்படத்துக்குள் சினிமா… அது என்ன ?


தமிழ்ச் சினிமா பெயர்களில், சிலவற்றில், இன்னொரு தமிழ்ச் சினிமா பெயரும் ஒளிந்திருக்கும்.
(உம்.)
Main Cinema : தேவதாஸ் - ஒளிந்த சினிமா : தாஸ்

Main Cinema வைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒளிந்த சினிமா பற்றிய குறிப்பு IN BRACKETS. திரைப்படங்களின் பெயர்களைக் (ரெண்டு… ரெண்டு… படங்கள்) கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. King and a Small Flower (சுந்தரபாண்டியபுரம். திருநெல்வேலி மாவட்டம்)
2. மனோஜ் பட்நாயக் இசையமைத்து, இயக்கிய விஜய் படம் (ஐஸ்வர்யா-முருகன்)
3. முப்பிக்குள் சித்து (திவான்… SUPER STAR)
4. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு… (விஜயகாந்த் இப்படத்தில் இரு வேடம்)
5. சாகேதராமன் – ஷாருக் கான் (பருத்திவீரனின் முன்னோடி)
6. ஜெய்சங்கர் வில்லனான முதல் படம் (திமிர் பிடித்த இயக்குனரின் இரண்டாவது படம்)
7. துபாய் கஜா… (சூர்யா… செல்வா… ஹுசேன் பாய்)
8. பேர் வெச்ச காலேஜ் (பேர் வைக்காத காலேஜ்)
9. மாற்றப்பட்ட மறை (முதல்வனின் இயக்கத்தில் ப்ளாப் படம்… காரணம் வினீத்… !)
10. HAPPY NEW YEAR (யம்மாடி… ஆத்தாடி)

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…