11 April 2007

இன்றைய விஷயம் - 11-04-2007 : தமிழ் சினிமாவும் ஜிகு… ஜிகு… ரயிலும்…

தமிழ் சினிமாக்களில் சிலவற்றில், ரயில் நிலையத்திலோ, ரயிலிலோ கிளைமாக்ஸ் இருக்கும். அப்படிச் சில படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. ஹீரோ - நவீன மோகன். ஹீரா. லப் டப்.

2. சுப்பம்மா + சசி.

3. கமலி.

4. சத்தம் போடாமல் ஆலாபனை.

5. ஆபாவாணன், டேவிட், ஆடி மாசம் பொறந்துருச்சி.

6. விஜி, ஊட்டி, சுப்பிரமணி.

7. கதிர், ஓஹோன்னானான், ஹீரா.

8. சித்தி, சுதாகர்.

9. கேப்டன், சந்திரசேகர், தலைவலி.

10. A.V.M. + ரஜினி


நீங்களும் முயற்சியுங்களேன்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

02 March 2007

இன்றைய விஷயம் – 02-03-2007 : தமிழ் சினிமாவில் சரியா… தவறா… ?

தமிழ்ப் படங்கள் சிலவற்றைப் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. அவை சரியா, தவறா என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : "தவறு" என்றால் சரியான விடையையும் / விளக்கமும் தரலாமே… !

1. அஜீத்துக்கு இதுவரை யேசுதாஸ் பின்னணிப் பாடியது இல்லை.
2. வித்யாசாகர், ரஜினி, கமல் இருவருக்கும் தலா ஒவ்வொரு படத்திற்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார்.
3. பாலு மகேந்திரா இயக்கித் தமிழில் வெளிவந்த கடைசிப் படம் 'ஜூலி கணபதி'.
4. பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி இயக்குனராக அறிமுகமான படம் ‘ரன்’.
5. புட்டண்ணா, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், விக்ரமன், K.S. ரவிக்குமார், ரமேஷ் கண்ணா (குரு-சிஷ்யர்கள் வரிசையில் இது சரியா ?)
6. 'ரட்சகன்' படத்தின் வசனம் எழுதியது பாலகுமாரன்.
7. தமிழ் சினிமாவோடு சம்பந்தப்பட்ட பிரபலமான மூன்று ‘விக்ரம்’கள்…
அ. நடிகர்
ஆ. கமல் படம்
இ. ‘அலை’ படத்தின் இயக்குனர்
8. ஒரு பாட்டுக்கு ஆடியது எல்லாம் இல்லாமல் ‘சோனாலி பிந்த்ரே’ நடித்த இரண்டாவது தமிழ்ப்படம் ‘வேதம்’
9. 'கொடி பறக்குது' படத்தில் வில்லன் மணிவண்ணனுக்கு குரல் தந்தது ‘பார்த்திபன்’
10. 'சுயம்வரம்' படத்தின் பல இயக்குனர்களில் 'ராஜ்கபூரும்' ஒருவர்.

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/03/02-03-2007.html) சொடுக்கவும்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


21 February 2007

இன்றைய விஷயம் : 21-02-2007 – தமிழ்ச் சினிமாப் பாடல்களில் வித்தியாசப் பூக்கள்…


தமிழ்ப் படப் பாடல்களில் சில பூக்களின் பெயரில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளில் இருந்து தமிழ்ப் பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு-1 : ஒரே பூ இரண்டு பாடல்களுக்கோ, ஒரே படத்தில் இருந்து இரண்டு பாடல்களோ இல்லை. பத்து பூக்கள். பத்து பாடல்கள். பத்து படங்கள்.
உப-குறிப்பு-2 : ரோஜா, மல்லிகை இரண்டு பூக்களும் எந்தப் பாடலிலும் இல்லை.
உப-குறிப்பு-3 : பூவின் பெயர் பாடலின் முதல் வார்த்தையிலேயே இருக்கும்.

ரெடி. ஜூட்…

1. பாரதியின் பளார் வரிகள்-இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தின் பெயர்.
2. தாவணிக்கனவுகள் படத்தில் வரும் சிகப்புத் தாமரைப் பாட்டு.
3. ஸ்ரீதர் ரஜினியை வைத்து எடுத்த படத்தில் வரும் பாட்டு.
4. “இதுவரை எங்கள் கிராமத்திற்குத்தான் சினிமா வந்திருக்கிறது. முதன்முதலாக எங்கள் கிராமம் சினிமாவில் வந்தது இந்தப் படத்தில்தான்” என்று வைரமுத்து பாராட்டிய படத்தில் வந்த பாட்டு.
5. இரண்டு சிவாஜி (ஒருவன் உத்தமன்) படத்தில் வந்த கானடா ராகத்தில் அமைந்த பாட்டு.
6. பாரதிராஜாவுக்காக வித்யாசாகர் இசையமைத்த ஒரே படத்தில் வந்த பாட்டு.
7. ஒரு நாள் கூத்து படத்தில் வந்த குட்டிப் பாட்டு. விருந்தினரோடு சம்பந்தம்.
8. அரவிந்த்சாமி – ரேவதி இணைந்த படத்தில் வரும் பாட்டு.
9. தலைவர் படப் பாட்டு. தமிழ்ப் பூவின் ஆங்கிலப் பெயர்.
10. விஜய் படத்தில் உள்ள இந்தப் பாடல் இப்படி தொடங்கும். “கலர்… கலர்… கலர் பூ… “

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2007/02/21-02-2007.html
) சொடுக்கவும்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

12 February 2007

இன்றைய விஷயம் – 12-02-2007 : தமிழ் சினிமா – ஒரு வித்தியாசமான தொடர்ச்சி… !



தரப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு – 1 : முதல் படத்தின் பெயரில் ஏதோ ஒரு வார்த்தைதான் அடுத்த படத்தின் பெயரில் முதல் வார்த்தை. உம். இரட்டை ரோஜா – ரோஜாவைக் கிள்ளாதே.

உப-குறிப்பு – 2 : இது பத்து படங்களுக்கும் பொருந்தும். அதாவது, இது ஒரு தொடர் சங்கிலி.

உப-குறிப்பு – 3 : ஒரே வார்த்தையில் தொடங்கும் இரண்டு படங்கள் தரப்படவில்லை.

ரெடி… ஜூட்…

1. தலைநகரம் – கம்யூனிசக் கலர் – மூன்று பேர்.

2. 1979ல் வந்த பாரதிராஜாவின் பூ படம்.

3. T. ராஜேந்தர் இசையில் (இயக்கம் அல்ல) வந்த, “மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்” என்ற இனிய பாடல் இடம் பெற்ற படம்.

4. தூது போ செல்லக்கிளியே (நேரடிக் குறிப்பு)

5. மம்முட்டி – கனகா

6. A.P. நாகராஜன் இயக்கத்தில் 1969ல் வந்த படம். மூன்று வார்த்தைப் படம். முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் ஒன்றே.

7. தமிழில் முதன்முதலில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இடம் பெற்ற பாடல் உள்ள படம்.

8. “ஏ புள்ள கருப்பாயி” என்ற பாடல் இடம் பெற்ற படம்.

9. சங்கீதாவும், அஞ்சு அரவிந்தும் இணைந்து நடித்த ஒரே படம்.

10. கார்த்திக் கவுண்டமணி காமெடி கலக்கல்… யுவன் இசையில்…

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/02/12-02-2007.html) சொடுக்கவும்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

01 February 2007

இன்றைய விஷயம் : 01-02-2007 – தமிழ் சினிமா – பொருத்துக… !



வழக்கமான பொருத்துக (Match the following) தான்…

உப-குறிப்பு : வலது பக்கத்தில் ஒரே ஒரு விடை மட்டும் தவறு… மற்றவை சரி… ஒன்பது பொருத்தமான விடைகளையும்… ஒரே ஒரு பொருந்தாத விடையையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ரெடி… ஜூட்…

1. சாணக்யா - அ. சுந்தர். C
2. முத்துராமன் - ஆ. காவியத்தலைவி
3. ஜோதிகா - இ. கார்த்திக்
4. பிரபு – தேவா - ஈ. காவியத்தலைவன்
5. சத்யராஜ் - உ. புது வசந்தம்
6. பானுப்ரியா - ஊ. டும்… டும்… டும்…
7. பாலசந்தர் - எ. செம்பருத்தி
8. பானுமதி - ஏ. முதல் வசந்தம்
9. மாதவன் - ஐ. சர்வர் சுந்தரம்
10. சௌகார் ஜானகி - ஒ. சிம்பு

நீங்களும் முயற்சிக்கலாமே… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/02/01-02-2007.html) சொடுக்கவும்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


30 January 2007

இன்றைய விஷயம் : 25-01-2007 – தமிழ்ச் சினிமாவும், கேள்வியில் பதிலும்…


தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயின், வில்லன், நகைச்சுவை நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பு நிறுவனம், இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிய குறிப்புகள் தர தரப்பட்டுள்ளன. அதற்கான விடைகளும் அந்தக் குறிப்புக் கேள்வியிலேயே ஒளிந்துள்ளன.

உ.ம். அரசியலுக்கு வராத ஜித்தன் இனி இவர் ஒருவர்தான்.
விடை : அசியலுக்கு வராத ஜித்தன் இனி இவர் ஒருவர்தான். (ரஜினி)


ரெடி… ஜூட்…

1. என்னம்மா கண்ணு, ஜித்தன் படங்களில் நடிக்காமல் சதிலீலாவதியில் நடித்தவரை யாரென்று தெரியுதா பார்… !

2. வேண்டி வேண்டி ஹிந்தியில் இருந்து பாடல்களைச் சுட்டு தமிழில் தந்து தாக்கிய பழைய இசையமைப்பாளர் இவர்… !

3. காதலன், ஜெண்டில்மேன் போன்ற மிகப் பிரம்மாண்டப் படங்களுக்கெல்லாம் தாத்தா படத்தை எடுத்த இனிய நிறுவனம் இது… !

4. சின்னக் கதாபாத்திரம் என்றாலும், தொட்டு ரசிக்கச் சொல்கின்ற சுல்தானா இவர்… !

5. பெறுகின்ற விருதுகளும், மயக்கும் நடிப்பும், ரசிக்கும் உடற்கட்டும் இவர் குணாதிசயங்கள்… வேதாளத்தோடு தொடர்புடையவர்… !

6. இளம் இசையமைப்பாளர்களில் சுமார் என்றால், அது இந்த அசுரன்தான்… !

7. வால்டர் தந்த சுகமான இயக்குனர்… !

8. ஆஹா… ஓஹோ படங்களோ… புஸ்ஸென்று போகும் படங்களோ நோகாமல் தயார்… ! என்னும் இந்த உலக விருதுக்கார கம்பெனி… !

9. இத்தனை சிறிய காலத்தில் இத்தனை பெரிய படங்களா… ? உஷார் பார்ட்டிதான் இந்த வர்ஷ நாயகி… !

10. சரியான ரகளை வில்லன் இந்த ராஜ்… !


நீங்களும் முயற்சிக்கலாமே… !

விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/25-01-2007.html) சொடுக்கவும்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

22 January 2007

இன்றைய விஷயம் – 22-01-2007 : தமிழ்ப் படங்களில் இரட்டை வேடம்… !



கதாநாயகனோ, கதாநாயகியோ, வேறு யாரோ இரட்டை வேடத்தில் நடித்த தமிழ்ப்படங்கள் சிலவற்றைப் பற்றிய குறிப்பு தரப்பட்டுள்ளது. அது என்ன படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ?

உப குறிப்பு – 1 : இரட்டை வேடத்திற்குள் அப்பா-மகன் (அ) அண்ணன்–தம்பி உறவு இல்லை.

உப குறிப்பு – 2 : ஹீரோ இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் KNN (கதாநாயகன்) என்றும், ஹீரோயின் இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் KNI (கதாநாயகி) என்றும், மற்ற யாராவது இரட்டை வேடத்தில் நடித்திருந்தால் VY (வேறு யாரோ) என்றும் குறிப்பு தரப்பட்டுள்ளது.

ரெடி… ஜூட்…

1. தேவருக்காக ரஜினி நடித்த கடைசிப் படம் (KNN)

2. தமிழில் வெளிவந்த ஒரே சமகால அரசியல் படம் - இதை இயக்குனர்
ஒத்துக்கொள்ளாவிட்டால் கூட (KNI)

3. இந்தப் படத்தின், இந்தி இன்றைய வடிவம் வெளிவந்து சரியாக ஓடவில்லை (KNN)

4. “அடடா வயசுப்பொண்ணு அடியெடுத்தா… ஜல் ஜல் ஜல்” என்ற பாடல் இடம்பெற்ற படம்
(KNN)

5. படத்தில் முழுதாக இடம்பெறாமல், கேஸட்டில் இடம்பெற்ற “உன் நெஞ்சத் தொட்டுச்
சொல்லு… என் ராசா என் மேல் ஆசை இல்லையா… ?” என்ற பாடல் இந்தப் படத்தில் உண்டு
(KNN)

6. சிம்ரன் – செல்லப்பா (VY)

7. இரட்டை வேடப் படங்கள் இப்படிக்கூட இருக்குமா என்று ஆச்சர்யப்படுத்திய படம்.
வித்யாசாகர் – அர்ச்சனா (KNN)

8. கதாநாயகி இரட்டை வேடத்தில் நடித்துத் தமிழில் வெளிவந்த கடைசிப் படம். சில
நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் நாயகன் பெயரும், இந்தப் படத்தின் நாயகன் பெயரும்
ஒன்றே. (KNI)

9. இந்தப் படத்தின் நாயகி இலங்கைப் பெண்ணாக நடித்திருப்பார். கதாநாயகனின் கதாபாத்திரப்
பெயர் சேது (KNN)

10. அனேகமாக கதாநாயகனும், கதாநாயகியும் இரட்டை வேடத்தில் நடித்துத் தமிழில்
வெளிவந்த கடைசிப் படம் இதுதான். ஸ்னேகா, கமிஷன் மண்டி கஜேந்திரா ஆகிய
பெயர்கள் இந்தப் படத்தில் உண்டு. (KNN / KNI)

நீங்களும் முயலுங்களேன்… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/22-01-2007.html) சுட்டுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


19 January 2007

இன்றைய விஷயம் : 19-01-2007 : தமிழ்ப் படப் பெயரும், பாடலின் தொடக்கமும் ?



தமிழ்ப் படப் பெயர்கள் சில ஏதோ ஒரு பாடலின் தொடக்க வரியாக இருக்கும். அப்படிப்பட்ட சில பாடல்களின் நடு வரிகள் தரப்பட்டுள்ளன. பாடலின் தொடக்கத்தை, அதாவது, தமிழ்ப் படப் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Simple. நடுவரிகள் தரப்பட்டுள்ள பாடலின் தொடக்க வரிகள் ஒரு தமிழ்ப் படத்தின் பெயர். அது என்ன ?

உப குறிப்பு – 1 : பாடல் அதே படத்தில் இடம் பெற்றிருக்காது.

உ.ம்.
1. அண்ணாமலை அண்ணாமலை
படம் : அண்ணாமலை.

2. காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
படம் : காதலிக்க நேரமில்லை.

இது மாதிரி இல்லை.

உப குறிப்பு – 2 : எந்தப் படமுமே ஒரு வார்த்தைப் படம் அல்ல (குறைந்த பட்சம் இரண்டு வார்த்தைகளாவது உண்டு.)

உப குறிப்பு – 3 : சில கேள்விகளுக்கு மட்டும் கண்டுபிடிக்க வேண்டிய படத்தைப் பற்றிய குறிப்பும் தரப்பட்டுள்ளது. (IN BRACKETS)

ரெடி… ஜூட்… (அப்பாடா… ! ஒரு வழியா கேள்விகளுக்கு வந்தாச்சு)

1. போகப் போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும். (அஜித் – ராஜ்கபூர்)

2. சட்டென்று… சலனம் வரும் என்று… ஜாதகத்தில் சொல்லலையே…

3. பெண்ணாலே கெட்டு… போவேனோ என்று…
ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.

4. தங்கச் சிலைபோல் வந்து மனதைத் தவிக்க விட்டாளே…

5. ஐயாவோட மானம்… அந்தக் கவரி மான மீறும்…
அந்தக் கவரி மானு பரம்பரைக்கே உன்னாலதான் பேரு…

6. பெண்ணென்றாள் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ…
(பிரபு – மந்த்ரா)

7. இடது விழியில் தூசி விழுந்தால்… வலது விழியும் கலங்கி விடுமே… (நிவேதா)

8. கால் போன பாதைகள் நான் போனபோது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…

9. காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்…
காற்றிடம் கோபம் கிடையாது…

10. எனக்குக் கட்சியும் வேணாம்… ஒரு கொடியும் வேணாம்… (விஜயகாந்த் படம்)

நீங்களும் முயலுங்களேன்… விடைகளுக்கு இங்கே ( http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/19-01-2007.html) சுட்டுங்கள்…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

04 January 2007

இன்றைய விஷயம் – 04-01-2007 : தமிழ் சினிமாவில் வேறு மொழிப் பாடல்கள்



குறிப்பு : தமிழ்ச் சினிமாப் பாடல்களில் சில வேறு மொழி வார்த்தைகளில் தொடங்கும். அவ்வாறான பாடலைப் பற்றியோ (அல்லது அந்தப் பாடல் இடம் பெற்ற படம் பற்றியோ) சில குறிப்பு(கள்)தரப்பட்டுள்ளன. பாடலையும், படத்தையும் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

உப-குறிப்பு : எல்லாப் பாடல்களுமே வேறு வேறு மொழிகளில் தொடங்கும்.

1. பிரித்தால் மூன்று வளையங்களாக வரும் மோதிரம்.
2 சிவரஞ்சனி – நாசர் - இந்த்ரஜித்.
3. பல்லவி – ரவிச்சந்திரன் – கல்யாண கலாட்டா.
4. கைலாஷ் - பயம் – கொடைக்கானல்
5. சுஜாதா (நடிகை அல்ல) – ரஜினி - அம்பரீஷ்
6. கோவா – கரண் – மலேயா
7. பஞ்சாபி – வைஷ்ணவி - மாதேஷ்
8. ப்ராந்து – உம்மா – திருவனந்தபுரம் மகாராணி.
9. தேவலிபி – டப்பா படம் – Theme Song.
10. அன்வர் – ரங்கசாமி - கேசவன்.


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/04-01-2007.html) சொடுக்கவும்.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.

02 January 2007

இன்றைய விஷயம் : 02-01-2007 - தமிழ்ப் படமும் – விளையாட்டும்


தமிழ்ப்படங்கள் சிலவற்றில் சில விளையாட்டுக்கள் முக்கியமாகப் பிரபலமடைந்திருக்கும். அவ்வாறான விளையாட்டுக்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவை எந்தெந்த விளையாட்டு என்று கண்டுபிடித்து, அதற்கான படத்தையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில விளையாட்டுக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிரபலமடைந்திருக்கலாம்.

1. இந்த விளையாட்டு நடக்கும்போது மைதானத்தில் குறைந்த பட்சம் 15 பேர் இருப்பார்கள்.
2. சுத்தி… சுத்தி… சுத்தி… சுத்தி… போதுமடா… ! விடு ஆளை… !!
3. பைக் ரேஸ் (நேரடிக் குறிப்பு)
4. நாலு தட்டு தட்டி, ஓங்கி அடிச்சாத் தெரியும்.
5. கோழிச் சண்டை (நேரடிக் குறிப்பு)
6. வாழக்கா பொரியல்… வாடா மச்சான் சாப்பிடலாம்…
7. பனிச் சறுக்கு (நேரடிக் குறிப்பு)
8. படித்துவிட்டும், பறக்கவிட்டும் பெறலாம்.
9. பத்து தலை ராட்சனனின் சத்துருவின், மித்துருவின், சத்துருவின் பந்து.
10. ரியல் மேட்ரிட், செல்சி விளையாட்டு.

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2007/01/02-01-2007.html) சொடுக்கவும்....


மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

28 December 2006

இன்றைய விஷயம் - 28-12-2006 : இந்தப் பட்டம் யாருக்குச் சொந்தம் ?


தமிழ் நடிக, நடிகையரின் பட்டங்கள் அதாவது அடைமொழிகள், (உம். சூப்பர் ஸ்டார் – ரஜினிகாந்த்) சில தரப்பட்டுள்ளன. அந்த அடைமொழிக்குச் சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. கன்னடத்துப் பைங்கிளி
2. லட்சிய நடிகர்
3. இளம் புயல்
4. புன்னகை இளவரசி
5. நாட்டியப் பேரொளி
6. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்
7. மக்கள் நாயகன்
8. புரட்சித் தமிழன்
9. நடிகையர் திலகம்
10. நடிகவேள்

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-12-2006.html)
சொடுக்கவும்…

மீண்டும் சந்திப்போம்…
+ நேசத்துடன்… இரா. அரங்கன்…

26 December 2006

இன்றைய விஷயம் - 26-12-2006 : மிருகம்… பாட்டு… தமிழ்ப் படம்…



கரடி, புறா மாதிரியான விலங்குகளின் பெயரில் தொடங்கும் தமிழ்படப் பாடல்கள் சில உண்டு… உம். "குயிலப் புடிச்சி… கூண்டில் அடைச்சி… கூவச் சொல்லுகிற உலகம்… " (சின்னதம்பி)

இப்படிப் பட்ட பத்து பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன (குறிப்புகள் விலங்கினைப் பற்றியோ அல்லது அந்தப் பாடல் இடம் பெற்ற படம் பற்றியோ இருக்கலாம். விலங்கு அல்லது படம் என்று தரப்பட்டுள்ளது)

நீங்கள் செய்யவேண்டியது… அந்தப் பாடலையும், படத்தினையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப குறிப்பு - 1 : பாடலின் முதல் வார்த்தையிலேயே விலங்கின் பெயர் இருக்கும்…

உப குறிப்பு - 2 : ஒரே மிருகம் இரண்டு முறை இல்லை... ஒரே படமும் இரண்டு முறை இல்லை...

சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேக்குதா – தவறு.
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே – சரி.

ரெடி… ஜூட்…

1. ராமாயண விலங்கு – ரன்னிங்குக்கு பெயர் போனது (விலங்கு)

2. டில்லி – டி.ஜி.பி கல்யாணம் – சொக்கலிங்க பாகவதர் (படம்)

3. காட்டான் நடிகர் – கண்ணழகி – ராகதேவன் (படம்)

4. உன் ஜம்பம் சாயாது… என்கிட்ட ஆகாது… ஹே… தரத்தர தரத்தரத்தர… (படம்)

5. காட்டு ராஜா (விலங்கு)

6. ‘எங்கள் கிராமத்திற்குத் திரைப்படம் வந்து பார்த்திருக்கிறேன்… எங்கள் கிராமம் திரைப்படத்தில் வந்தது இந்தப் படத்தில்தான்’ – இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து (படம்)

7. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிக்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல் (படம்)

8. சிங்கம், புலிக்கு அடுத்தது இந்த மிருகம் – படம் சிவனுக்கு அடுத்தது (விலங்கு)

9. கிருஷ்ணன் பஞ்சு – V.C. கணேசன் படத்தில் வரும் பாட்டு (படம்)

10. A.V.M. – ரூபிணி – சந்திரபோஸ் இணைந்த படத்தில் வரும் பாட்டு (படம்)


நீங்களும் முயற்சிக்கலாமே…


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/26-12-2006.html) சொடுக்கவும்

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



21 December 2006

இன்றைய விஷயம் – 21-12-2006 : இந்த SCENE – SHOT எந்தப் படம் ?



உதவி இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் நடிகரிடமோ, நடிகையிடமோ (கதாநாயகன், கதாநாயகி, வில்லன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) ஒரு SHOT பற்றிய விவரிப்பு செய்வது இங்கே தரப்பட்டுள்ளது. அது எந்தப் படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ரெடி... ஜூட்...

1. “மேடம்… இந்த ஷாட்ல நீங்க இந்த CHAIRல உட்கார்ந்த மாதிரியே RIGHT SIDE திரும்பறீங்க… அப்படியே… கண்ணுல தண்ணி வரணும்… உங்க PHOTO ஒண்ணு எடுத்துக் காட்டறீங்க… ஒரு ரெண்டு செகண்ட் கழிச்சு அப்படியே PHOTOவைத் திருப்பறீங்க… அவ்வளவுதான்…”

2. “சார்… நீங்க மாட்டு வண்டியில படுத்திருக்கீங்க… அப்ப ஒரு கூட்டம் அந்தப் பக்கமா போகுது… அதுல கோயில் யானையும் உண்டு… நீங்க வானத்தையே பாக்கறீங்க… கைல ஒரு சுருட்டு… கொஞ்ச நேரத்துல கோயில் யானை உங்க பக்கம் வருது… கட் பன்றோம்… “

3. “சார்… ஹீரோயின் சத்தம் போட்டுட்டு, போறதுக்காகத் திரும்பறாங்க… அப்ப அவங்க சுடிதார்ல ஒரு செயின் மாட்டிக்குது… செயினோட இன்னொரு முனை உங்க கைல இருக்கு. அப்படியே FEELINGஆ ஒரு லுக்… அங்க ஒரு கட்… “

4. “சார் நீங்க கதவைத் தொறந்துகிட்டு ரூமுக்குள்ள வர்றீங்க… LONG SHOTல நீங்க… CLOSE UPல அவங்களும், அவரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நிக்கறாங்க… அந்த அம்மா அழுதுகிட்டு இருக்காங்க… நீங்க அப்பாவியா அதிர்ச்சியாயிட்டு அப்பறம் டயலாக் பேசறீங்க… பேசிக்கிட்டே போய் நீங்க கட்டிப் பிடிக்கறீங்க… அப்ப உங்க மனைவி ENTRY… கட்… “

5. “மேடம்… நீங்க பன்றீங்க… SCHOOL UNIFORMலயே அப்படியே தொறந்திருக்கிற ஒவ்வொரு CLASS ROOM கதவையா சாத்திக்கிட்டே வர்றீங்க… கட்… “

6. “சார்… நீங்க ஆர்வமா கேட்டுக்கிட்டே வந்து அங்க இருக்கிற சேர்ல முனையில உட்கார்றீங்க… ஒரு அஞ்சு செகண்ட் GAP விட்டு இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி உட்கார்றீங்க… இன்னும் உள்ள… இன்னும் உள்ள நல்லா சாஞ்சி உட்கார்ந்து கால் மேல கால் போட்டுக்கறீங்க… “

7. “சார்… அந்த அம்மா கொண்டு வந்த சாப்பாட்டை சாப்டுட்டு… கையைத் துடைக்க, நோட்ல இருந்து ஒரு பேப்பரைக் கிழிக்கிறீங்க… அப்ப அந்த அம்மா அவசரமா தன்கிட்ட இருக்கிற வாட்டர் பாட்டிலைத் தர்றாங்க… நீங்க அவங்களை ROMANCEஆ பாத்துக்கிட்டே கையைக் கழுவுறீங்க… “

8. “மேடம்… நீங்க ஓடற ரயில்ல இருந்து குதிச்சு ஹீரோவைப் பாத்து ஓடி வர்றீங்க… கண்ணுல ஆனந்தக் கண்ணீர்… ஹீரோவோட சட்டையைத் தொட்டுக் காட்டி அது நான்தான்னு சைகை செய்யறீங்க… கட்… “

9. “மேடம்… நீங்க கல்யாண டிரெஸ்ல, அழுதுகிட்டே ஓடி வந்து இங்க சாஞ்சு உட்கார்றீங்க… பயங்கரமா அழறீங்க… CAMERA அப்படியே ZOOM BACK ஆகி, TOP ANGLE போய், ஒரு FULL ROUND அடிச்சு, TILT DOWN ஆகுது… அங்க அந்தப் பக்கம் ஹீரோ அழுதுகிட்டே இருக்கார்… கட்… “

10. “காரை விட்டு அந்த அம்மா இறங்கினதும்… நீங்க காருக்குள்ள இருந்த மாதிரியே உன்னோட வீட்டு நம்பர் என்னன்னு கேக்கறீங்க… அவங்க பதில் சொல்லாம… காரோட கண்ணாடில 18ன்னு எழுதுறாங்க… அதை இந்தப் பக்கம் இருந்து பாக்கற நீங்க 81ன்னு புரிஞ்சிக்கறீங்க… “


நீங்களும் முயற்சிக்கலாமே…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/21-12-2006-scene-shot.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்… இரா. அரங்கன்…



19 December 2006

இன்றைய விஷயம் – 19-12-2006 : படம் – பப்படம்…

கீழே தரப்பட்டுள்ள படங்களில் (PICTURES) இருந்து தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில படங்களுக்குக் குறிப்புகள் தனியே தரப்பட்டுள்ளன.


























குறிப்புகள் :
2. விஜயகாந்த் படம்
7. வெயில் + வானத்துத் தாரகை
8. லூசுப்பையன்
நீங்களும் முயற்சியுங்களேன்...
விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/19-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

14 December 2006

இன்றைய விஷயம் – 14-12-2006 : இந்த CAPTION எந்தப் படம்


தமிழ்ப் படங்களுக்கு CAPTIONS வைப்பது என்பது வழக்கமாகிவிட்ட ஒன்று. அப்படிச் சில படங்களின் CAPTION-கள் தரப்பட்டுள்ளன.. படங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. காதலும் கற்று மற.....

2. THINK BEFORE YOU INK...

3. LAW WITHOUT FORCE IS IMPOTENT...

4. தமிழ் வாழ்க...

5. ANOTHER EPISODE IN A POLICE OFFICER'S LIFE...

6. FIGHT FOR RIGHT...

7. MAN OF THE MATCH...

8. FOR GALS...

9. பேரன்பும், பெருங்கோபமும் கொண்டவன்....

10. SOMETHING SPECIAL...


விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/14-12-2006-caption.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்....

+நேசத்துடன்..... இரா. அரங்கன்....


11 December 2006

இன்றைய விஷயம் – 11-12-2006 : உடைந்த படம்… என்ன படம்… ?

கிழிந்த செய்தித்தாள்களில் தமிழ்ப் படங்களின் உடைந்த பெயர்கள் உள்ளன. அவை என்ன படங்கள் என்று முடிந்தால் கண்டுபிடியுங்கள்… குறிப்புகளும் உண்டு.

ரெடி… ஜூட்…



விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/11-12-2006.html) சொடுக்கவும்...
மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

















06 December 2006

இன்றைய விஷயம் - 06-12-2006 : படங்களில் எண்கள்…



கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் இருந்து படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப குறிப்பு - 1 : படத்தின் பெயரில் ஒன்று முதல் பத்துவரை ஏதாவது ஒரு எண் இருக்கும் (ஒரு, ஒருத்தி, இருவர், ஒருவன் இதுபோல)

உப குறிப்பு – 2 : இரண்டு கேள்விகளுக்கு ஒரே எண்ணுள்ள படங்கள் தரப்படவில்லை. எல்லாமே தனித்தனி எண்கள்.

உப குறிப்பு – 3 : எண்கள் மாறி மாறியும் வரலாம். அதாவது முதல் கேள்விக்கான விடையில் ஐந்து என்ற எண் ஒளிந்திருக்கலாம்.

ரெடி… ஜூட்…


1. சிம்புவும், சிம்புவும் சேர்ந்தால்…

2. ஆசான், வஸந்தி, கோபி

3. மக்கள் திலகம் நடித்த படம் (Flop)

4. இட்லி, இளநீர், இடுப்புக்கு மேல் வேஷ்டி

5. தாயின் பந்தம்… (படத்தின் பெயருக்கான குறிப்பு இது… படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம்)

6. எட்டில் பாதியும் எல்லாமும் அறிந்தவன்.

7. குலுவாலிலே, குலுவாலிலே, குலுவாலிலே (A. Jeganathan படம்)

8. வில்லன், ராஜசேகர்–ராபர்ட்-ரஹீம் என்று மூன்று கெட்டப்களில் வருவார்.

9. மாதவனும். மாதவனும் கேளடி கண்மணி நாயகி.

10. இந்தப் படத்தின் நாயகனும், நாயகியும் இந்த ஒரே படத்தில்தான் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். (ஆனால், இருவரும் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்)


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/06-12-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

04 December 2006

இன்றைய விஷயம் : 04-12-2006 – இது யார் ஸ்டைல்… ?



நம்முடைய தமிழ் இயக்குனர்கள் / வசனகர்த்தாக்கள் சிலர் ‘காக்கா – வடை – நரி’ கதையை எடுப்பதற்காக தங்களின் டைரியில் குறிப்பு எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து வந்து விட்டோம். ஆனால் எது – யார் எழுதியது என்று குழப்பமாக உள்ளது. கொண்டு வந்த குறிப்புகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன. அதை வைத்து அந்த இயக்குனர் / வசனகர்த்தா யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்… ! (எல்லாமே கற்பனைதான்… ! )

கதை இப்படி ஆரம்பிக்கிறது…

நரி வடையைத் தூக்கிகிட்டு போனவுடனே…


1. காக்கா நரியிடம் : ஏன்… ?
நரி : பசி.
காக்கா : எனக்கு… ?
நரி : அஸ்க்கு…
காக்கா : குடு…
நரி : மாட்டேன்.
காக்கா : அப்ப நான்…
நரி : ஓடிரு… (இயக்குனர்)


2. காக்கா நியாயம் கேக்கப் பஞ்சாயத்துக்குப் போச்சு. அங்க நரி, பொய்சாட்சியா, ஓநாயைக் கொண்டு வந்து நிப்பாட்ட, நொந்து போன காக்கா இறந்து போய்டுது. அந்தக் காக்காவோட இரண்டு பிள்ளைங்களும் வளர்ந்து, நரியைப் பழிவாங்கறதோட மட்டுமில்லாம, தன்னோட அப்பா காக்காவோட களங்கங்கத்தையும் துடைக்கறாங்க. (இயக்குனர்)


3. வடையை எடுத்திட்டுப் போன நரி ராத்திரி தூங்கறப்போ, கனவுல காக்கா வந்து பரிதாபமா நிக்குது. அனுதாபப்பட்ட நரி, மறுநாளே காக்கா வீட்டுக்குப் போய், தான் செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தமா காக்காவோட மேற்படிப்புக்கு உதவி செஞ்சி, கல்யாணம் வரைக்கும் ஏற்பாடு செய்யுது. தாலி கட்டுற நேரம் பார்த்து ஒரு உண்மை தெரிய வருது. கிளைமாக்ஸில் பயங்கர டச்சிங்கா டயலாக் பேசிட்டு நரி போய்டுது. (இயக்குனர்)


4. காக்கா தன்னோட ‘Remote Satellite Connection’ மூலமா நரி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சு, தானே ஒரு நாள் நரியா இருக்கிற மாதிரி ஒரு சின்ன Ordinance போட்டு, நரியையே தந்திரமா ஏமாத்தி வடையைத் திரும்பி வாங்கிடுது. (வசனகர்த்தா)


5. சுட்ட வடையை ஒளிச்சு வைக்க நரி இடம் பார்க்குது. அப்ப காக்கா அங்க வந்துடுது. ஒரு பைட். நரி தப்பிச்சுடுது. படத்தோட இயக்குனர் திடீர்னு ஸ்கிரீன்ல வந்து… ‘இது பாக்கத்தான் காக்கா… பாஞ்சா கார்கில் பீரங்கி’ அப்படீன்னு டயலாக் விடுறாரு… காக்கா, பாக்கி இருக்கிறவங்களோட இன்னொரு சண்டை போடுது. நரி இருக்கிற இடம் தெரிஞ்ச உடனே நேர்லயே போய் வடையை வாங்காம வெறும் சவால் மட்டும் நாலு முறை விட்டுட்டு இன்னொரு சண்டை. ஒரு சில குழந்தைத் தனமான தந்திரங்களால நரியை வெற்றி கொள்கிற காக்கா, கிளைமாக்ஸில் நரியைக் கொன்னுட்டு, ஜெயுலுக்குப் போகாம வெளியையே சுத்துது. (இயக்குனர்)


6. காக்கா வடையைத் திரும்ப வாங்கும் முயற்சியில் உதவுவதற்காக, காக்காவோட ஒண்ணு விட்ட மாமா ‘காரைக்கால் காத்தவராயன்’ வர்றாரு. வந்து பாத்தா, ஏற்கனவே காக்காவோட குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சனைகள். தன்னோட இம்சை ஐடியாக்களால அத்தனை பிரச்சனைகளளயும் சமாளிக்கிற காத்தவராயன் நரிகிட்ட கடைசியா வடையை வாங்கும்போது காக்காவே வேண்டாங்குது. ஏன். அது கிளைமாக்ஸ். (இயக்குனர்)


7. காக்கா சோகமாகுது. ஒரு பாட்டு. வடையை நினைத்துப் பாக்குது. ஒரு பாட்டு. நடுவுல ‘ரெண்டு பலாப்பழக் காமெடி’. நரி அந்தப் பக்கம் வடையைத் திங்குது. ஒரு பாட்டு. காக்காவும், நரியும் கனவுல ஒருத்தரை ஒருத்தர் நெனெச்சு ரெண்டு பாட்டு. கிளைமாக்ஸில் மாரியம்மன் கோயிலில் ஒரு பாட்டு. (இயக்குனர்)


8. திருடிக்கிட்டுப் போன வடையைத் திரும்பக் கேக்க நரியோட வீட்டுக்குக் காக்கா போகுது. ஆனா, நரியோ சாமர்த்தியமா, அந்த வடையைத் திருடினது தான் இல்லை, தன்னோட தம்பின்னு சொல்லி ஏமாத்திடுது. காக்கா விடாம தினமும் நரியோட வீட்டுக்குப் போக, நரியும் எப்படியோ கஷ்டப்பட்டு, ஒரு நாள் ரியல் கெட்டப்லயும், ஒரு நாள் தம்பி கெட்டப்லயும் வந்து ஆள் மாறாட்டம் செஞ்சி, குண்டக்க மண்டக்க டயலாக் பேசி, குழப்பித் தப்பிச்சுடுது. (வசனகர்த்தா)


9. காக்கா தன் அடியாள் காக்காவிடம் : வயசான பாட்டி சுட்ட வடையைத் திருடறவனெல்லாம் இந்த பூமிக்கு எதுக்கு. போட்டுத் தள்ளு. போட்டுத் தள்ளு.

(அதே நாள் ராத்திரி) : இதெல்லாம் செய்யறதுக்கு சாமியா வரும். நாமதான் செய்யனும்.
(இயக்குனர்)


10. காக்கா வருத்தத்தோட கொஞ்ச நாள் இருக்குது. அப்புறம், வடை திருடிய நரின்னு தெரியாமலேயே அதைக் காதலிச்சு கல்யாணமும் செஞ்சுக்க முடிவு செய்யுது. இதுக்கு நடுவுல அந்த நரியோ, காக்காவோட அப்பா காக்காவை விரும்ப ஆரம்பிச்சுடுது. அதே நேரம், இந்த நரியோட அம்மா நரி அந்த முதல் காக்காவோட குடும்பமே நடத்தற அளவுக்குப் போயிடுச்சு. (இயக்குனர்)


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/04-12-2006.html) சொடுக்கவும்...



மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

01 December 2006

இன்றைய விஷயம் : 01-12-2006 – இந்த வேற்றுமொழிப்படம் தமிழில் எந்தப் படம் ?



வேறு மொழிப் படங்களில் இருந்து தமிழுக்கு Remake செய்யப்பட்ட படங்கள் சில தரப்பட்டுள்ளன (அந்தந்த மொழிப் பெயர் மட்டும்) அவை தமிழில் எந்தப் பெயரில் படமாக வந்தன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இதில் Dubbing / Semi-Dubbing படங்கள் (வைஜெயந்தி I.P.S / கண்டேன் சீதையை) எல்லாம் சேர்த்தி இல்லை.

Only Remakes…

குறிப்பு : சில படங்களுக்கு Clues தரப்பட்டுள்ளன.

1. வாஸந்தியும், லஷ்மியும் பின்னே நானும் - மலையாளம்
2. கோல்மால் – இந்தி
3. ப்ரேம லோகா – கன்னடம் (பழைய பேரழகி… )
4. அதனொக்கடே – தெலுங்கு
5.தொம்மனும் மக்களும் – மலையாளம்
6. தோ ஆங்கேன் பாஹ்ரா ஹாத் – இந்தி (பழசு… கண்ணா… பழசு)
7. அய்தே – தெலுங்கு
8. தேவா – கன்னடம் (தமிழில் மது(ஹீரோவாக அல்ல) நடித்த படம்)
9. ராமோஜி ராவ் ஸ்பீக்கிங் – மலையாளம்
10. அம்மா நாணா ஓ தமிழ அம்மாயி – தெலுங்கு


நீங்களும் முயற்சியுங்களேன்…

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/01-12-2006.html) சொடுக்கவும்...

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…


28 November 2006

இன்றைய விஷயம் - 28-11-2006 : என்ன படம்… என்ன படம்… ?



இங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளில் ஹீரோவின் கதாபாத்திரப் பெயரும் (ஹீரோயின் பெயரோ கூட) இருக்கும், கூடவே வேறு சில வார்த்தைகளும் இருக்கும். கேள்வி, குறிப்பு வடிவத்தில் ஐந்து வாக்கியங்களில் இருக்கிறது. படத்தின் பெயரைக் கண்டிபிடியுங்கள்.

உ.ம். சபாஷ் மீனா. எங்க ஓரு பூவாத்தா

(அண்ணாமலை, வீரா, அவ்வை சண்முகி போன்ற ஒரே வார்த்தைப் படங்களெல்லாம் இல்லை)

உப குறிப்பு : அந்தப் பெயர் அதே படத்தின் ஹீரோவோ, ஹீரோயினோ தானே தவிர, வேறு படங்களின் கதாபாத்திரப் பெய்ர்கள் இல்லை.

ரெடி… ஜூட்…

1. வாரிசு நடிக, நடிகையர் நடித்த படம். ஹீரோவின் தந்தையும், ஹீரோயின் தாயும் பழங்கால நடிக, நடிகையர்கள். அந்த இன்னொரு வார்த்தை ஒரு ஊரின் பெயர். கோயில்களில் பிரசித்தம் அந்த வார்த்தை.

2. மணிரத்னத்தின் ஒரு படத்தின் ஹீரோதான் இந்தப் படத்தின் ஹீரோவும். படத்தின் பெயரில் அடிமைப்படுத்தியவன் தெரிவான். நிழல்கள் ரவிதான் வில்லன். ‘புதிய தத்துவம்’ என்ற வார்த்தை இந்தப் படத்தில் மிகப் பிரபலம். இந்தப் படத்தின் இணை இயக்குனர், இந்தப் படத்தின் ஹீரோ கூடவே கிட்டத்தட்ட படம் முழுதும் வருவார்.

3. யோவான்தான் கதாநாயகனின் பெயர். PENTAMEDIA தயாரிப்பு. பிரவீன்மணி இசை. படம், பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. முன்னாள் அணித்தலைவரின் முன்னாள் காதலியின் தங்கைதான் ஹீரோயின்.

4. ஹீரோ இன்றும் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறார். இந்தப் படத்தின் வில்லனும் சில படங்களில் ஹீரோ. இந்தப் படத்தின் பெயரில் ஒரு பிரபலம் உண்டு. 100வது படம்.

5. கதாநாயகனின் பெயரில் பாதி இந்தப் படத்தின் பெயரில் பாதி. கதாநாயகனின் பெயரில் பாதி இந்தப் படத்தின் பெயரில் பாதி. (மீண்டும், Yet Convicingly – சகாதேவன் மகாதேவன் ரகம் இல்லை). இந்தப் படத்தின் இசையமைப்பாளர், இந்தக் கதாநாயகரின் படத்திற்கு ஒரே முறைதான் இசையமைத்துள்ளார். கடவுளே… கடவுளே. இரு வார்த்தைப் படம்.

6. டீத்தூள் கதாநாயகனின் தந்தை இந்தப் படத்தின் ஹீரோ. மறுபடியும் கடவுளே… கடவுளே… அந்த இன்னொரு வார்த்தை ஒரு ஊரின் பெயர். இந்த ஹீரோ ஒரே ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மாம்பழம் வாங்கலையோ மாம்பழம்… !

7. இந்தப் படத்தின் இரு வார்த்தைகளில் ஒன்று வெளிவந்த பழைய படம் (அதே பெயரில் இன்னொரு புது படமும் வெளிவந்தது) மற்றொன்று வெளிவரப்போகும் படம். முதல் வார்த்தையில் பாதியும் ஒரு படத்தின் பெயரே. (இவன் ரொம்ப நல்லவன்) துஷ்டனைக் கண்டால் தூர விலகு. அரசன் இவன். மிகப்பெரிய வெற்றி பெற்ற படமும் கூட.

8. கதாநாயகியின் பெயர் உண்டு இந்தப் படத்தில். கதாநாயகனின் பெயர் சன்முகசுந்தரம். இந்தப் படத்தின் பெயரில் தொடங்கும் தாத்தாவான நடிகரின் பாடல் ஒன்று உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சியும் உண்டு. இந்தப் படம் ஒரு மைல்கல்.

9. இந்தக் கதாநாயகன் இன்றும் கதாநாயகன். மற்றொரு வார்த்தை ஒரு ஊரின் பெயரே. கதாநாயகனின் பாத்திரப் பெயரில் எங்களின் ஒரு படமும் உண்டு. இதே கதாநாயகி இவருடன் பல படங்களில் நடித்தார் (தோராயமாக 5, 6 படங்கள்). இந்தக் கதாநாயகன் நடித்த மற்றொரு படம் ‘சுயம்வரம்’ (இதெல்லாம் ஒரு க்ளூவா… ? )

10. காதலன் படத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி வித்தியாசமாகச் சொல்லும் வார்த்தைதான் இந்தப் படத்தின் கதாநாயகன். எங்கள் வீட்டுப் பிள்ளை படத்திற்கும், இந்தப் படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இந்தப் படத்தின் ஒரு வார்த்தையில் நவரச நாயகனின் படத்தின் பாதி ஒளிந்திருக்கிறது. (அந்தப் படத்தின் நாயகி சௌந்தர்யா… ) இந்தக் கதாநாயகனின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று இது. மோனைப் படம் இது. (பெண்கள் வீட்டின் கண்கள் மாதிரி... முதல் வார்த்தையிலும், மூன்றாம் வார்த்தையிலும் மோனை இருக்கும்)

நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

விடைகளுக்கு இங்கே (http://vellithirai-vidaigal.blogspot.com/2006/12/28-11-2006.html) சொடுக்கவும்


மீண்டும் சந்திப்போம்.

+ நேசத்துடன்… இரா. அரங்கன்.