30 July 2008

இன்றைய விஷயம் - 30-07-2008 : தமிழ்ச் சினிமாவில் இரட்டை வேடம்...

கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடித்த படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு – 1 : அண்ணன் – தம்பி, அப்பா - மகன் வேடங்கள் இல்லை.
உப-குறிப்பு – 2 : ஒரே நடிகரின் இரண்டு டபுள் ஆக்‌ஷன் படங்கள் இல்லை.

1. பிரபுதேவா... ஜானகிராமன்... சுருக்கினால்... Super Star
2. கண்ணா... ரஜினிகாந்த்... செவாலியே... Never
3. ரெண்டு தளபதி... ரெண்டு தளபதி... Diamond Girl
4. சின்னா... விவேக்... STD Booth
5. பழைய கேடி... புதிய பதிப்பு... I am Back
6. இலங்கை ரேவதி... செல்லப்பா... Dancer Hero
7. பிரபு... விசு... கண்ணகி புருஷன்... Director
8. இருக்கு... இல்லை... Best Friend
9. குவாட்டர் கோவிந்தன்... சுத்தி சாமியார்... Cool Drinks

நீங்களும் முயற்சிக்கலாமே...

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்... இரா. அரங்கன்...

23 June 2008

இன்றைய விஷயம் : 23-06-2008 – தமிழ்ச்சினிமாவில் வினோதத் தொடர்ச்சி


தரப்பட்டிருக்கும் குறிப்புகளில் இருந்து ஜொடியான இரண்டு தமிழ்ப்படங்களின் பட்டியலைக் கண்டுபிடியுங்கள். முதல் படத்தின் பெயரின் கடைசி வார்த்தைதான், இரண்டாது படத்தின் பெயரின் முதல் வார்த்தை. (உம். உன்னால் முடியும் தம்பி – தம்பி தங்கக் கம்பி) இந்த இரு படங்களில், முதல் படத்தின் கடைசி வார்த்தைதான் இரண்டாவது படத்தின் முதல் வார்த்தை. என்ன... புரிஞ்சுதா,,, ? இரண்டு படங்களுக்கான குறிப்புகளும் ‘+’ ஆல் வேறுபடுத்தப்பட்டுள்ளன.

1. பூவே செம்பூவே + ஜெயராம் – குஷ்பு ஜோடியின் மூன்றில் ஒன்று.
2. இவங்க ஜோடி ஜோர்யா (பேர்லயே கூட) + கூர்கா இயக்குனரின் தமிழர் விளையாட்டு.
3. சென்னை பட்டணம் + சுஜாதா, P.C கூட்டணி.
4. தக்காளி ராஜ்கபூர் + கலைப்புலியின் கோட்டை
5. லைலா - மணியின் பிரியமான சிஷ்யை + கவிப்பேரரசின் தேசிய விருதும்
6. சூப்பர் ஸ்டார் மிருகமாக + சுப்பரும் இல்லாமல் குட்-ஆகவும் இல்லாத இரண்டாது புதல்வன்.

7. வில்லுக்கு சமஸ்கிருதம் – முதல் படம் + என்னடி மீனாட்சி
8. நேற்று போல் இன்று இல்லை + இது என்ன ஊர்... சிங்கப்பூர்...
9. புரட்சித் தலைவர் JB-யாக + வைஷ்ணவியும் பொம்மைப் பேயும்...
10. அது பரிட்சை இல்லை... ஒரு ஃபீலிங் + குண்டலகேசியாக கவுண்டர்

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்…

+ நேசத்துடன்... இரா. அரங்கன்…

30 May 2008

இன்றைய விஷயம் - 30-05-2008 : சினிமாப் பாட்டில் உடல் உறுப்புகள்



தமிழ்ச் சினிமாப் பாடல்கள் சிலவற்றின் முதல் வார்த்தை நம் உடல் உறுப்பில் ஒன்றாக இருக்குமாறு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட பாடல்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. அல்டிமேட் ஸ்டார் + அல்டிமேட் ஸ்டார்
2. மூன்று ரிப்பீட்டுகளில் ஒன்றின் தம்பி + சேனாதிபதியின் அமிர்தம்... காம்பினேஷனே கிரேஸியா இருக்கே... !
3. வைஷ்ணவி + ராமு + மதுமிதா + விசு + கிருஷ்ணவேணி etc.,
4. மின்னல் சென்னும், போடாங்கோ நாயகனும், குத்துப் பாட்டும்.
5. பஞ்சாப் முதலாளியும், கல்கத்தா முதலாளியும்...
6. டிராவல்ஸ் டிரைவரும், ராஜகுமாரியும் flower-ம், bell-மாய் இணைந்த படப்பாடல். (ராஜகுமாரனின் மனைவி ராஜகுமாரிதானே... ! )
7. நீ வருவாய் என படத்தில் நட்புக்காக நடித்தவர் இதில் நாயகன். அதே படத்தின் ஹீரோ இதில் கௌரவ நடிகர். சின்னத்திரையில் சமீபத்தில் கால் பதித்த பெரிய திரை நாயகி...
8. மீண்டும் அமிர்தம் + மாதவ படையாச்சி = Mrs. (bharath+vikram)
9. குள்ளராஜன் + ஆதியின் சுமி சேர்ந்து... “இது இப்போது ஜாஸ்தியாயிருக்கு” எனப் பாடுவார்கள்.
10. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்பார் “இங்கே என்னடி INJURY… ?”

நீங்களும் முயற்சிக்கலாமே... மீண்டும் சந்திப்போம்...
+ நேசத்துடன்... இரா. அரங்கன்...

09 May 2008

இன்றைய விஷயம் : 09-04-2008 – தமிழ்ச்சினிமாவும் பறவைகளும்...

தமிழ்ப்படப்பாடல்களில் சிலதில் முதல் வார்த்தையில் ஒரு பறவையின் பெயர் அமைந்திருக்கும் (றெக்கை இருப்பதெல்லாம் பறவைகளே !) அப்படிப்பட்ட பாடல்கள் / படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தைக் கண்டுபிடித்து பாடலையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. மலேயா போலிசாக M.R. ராதா நடித்த படம் (தாதா மிராஸி)
2. இருக்கு… ஆனா இல்லை…
3. ஆங்கிலப் பறவையே… ஆங்கிலப் பறவையே… (இது பாடலின் ஆரம்பம்)
4. நூ ஒஸ்தானண்டே நேனு ஒத்தண்டானா…
5. தேங்காய் சீனிவாசன் – ராதிகா (அன்பே… என்ன ஒரு ஜோடி… !)
6. சிம்பாஸ்தேவாரம் நடித்த படம்…
7. சோலையம்மாவும், ஓ போடு நாயகியின் பெயரைத் தன் பெயரோடு ஒட்டிக் கொண்டுள்ளவரும் நடித்த படம்…
8. வினிதாவும், விருதாலம் சட்டமன்ற உறுப்பினரும் ஜோடியாகப் பாடிய பாடல்.
9. நந்தகோபாலாஆஆஆ… குமாரிஈஈஈ… இது இரண்டும் ஹீரோ, ஹீரோயின் பெயர் இல்லை… ஆனால் படத்தில் இந்த வார்த்தைகள் வரும்…
10. ஒரு பழைய குழந்தைகள் விளையாட்டு… சம்மனமிட்டு உட்கார்ந்துகொண்டு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி ஒருவர் பாட, மற்றவர்கள் விளையாடுவார்கள். (அப்பாடா… சுத்தி வளைச்சு க்ளூ கொடுத்தாச்சு… )

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… இரா. அரங்கன்…

21 April 2008

இன்றைய விஷயம் - 20-04-2008 : தமிழ்ச் சினிமாவில் உறவுகள்


தமிழ்ப் படப் பெயர்களில் சிலவற்றில் உறவுகள் ஒளிந்திருக்கும். (உம். அன்புள்ள அப்பா) அப்படிப்பட்ட படங்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. சினிமாப் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
உப-குறிப்பு 1 : எந்த உறவும் இரண்டு முறை தரப்படவில்லை.
உப-குறிப்பு 2 : படங்களின் பெயர்களில் இடம்பெற்ற உறவுகள் (+ சில additional உறவுகள்)கேள்விகளுக்குக் கீழே தரப்பட்டுள்ளன (வரிசையாக அல்ல)

1. இட்லி நடிகையும், இன்று போய் நாளை வந்த நடிகரும் இணைந்த படம்…
2. வெத்தலை மடிச்சு கொடுத்த பொம்பளையாக ஊர்வசி நடித்த படம்…
3. வி. சேகர் இயக்கத்தில் ஜனகராஜ் மாமனார்…
4. வைதேகி காத்திருந்தாள் (விஜயகாந்த்+ரேவதி+சுந்தர்ர்ராஜன்) வெற்றிக்கூட்டணியின் அடுத்த வெற்றிப்படம்…
5. கங்கை அமரன் இயக்கத்தில் செல்வா, ரஞ்சிதா நடித்த படம்…
6. வேலுத்தொண்டைமானாக A. Ars நடித்த படம்.
7. பராசக்தியில் உடன்பிறப்புதான் இதிலும் உடன்பிறப்பு (சிம்புவும் உண்டு)
8. கபி… கபி… மேரே தில் மே… (தமிழ் படத்தில் வந்த காமெடி குட்டிப் பாடல்-தாடிக்காரர்)
9. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று M.G.R பாடிய படம்…
10. நாரதர் நாயுடுவா அப்பாவின் அண்ணன்… !


(அண்ணன், அக்கா, அம்மா, தங்கை, மாமனார், மாமன், அத்தை, தம்பி, மச்சினி, மச்சான், மாமியார், மாப்பிள்ளை, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி)

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + இரா. அரங்கன்…


28 March 2008

இன்றைய விஷயம் : 28-03-2008 – ஆங்கிலமும், தமிழ்ச்சினிமாவும்


தமிழ்ச் சினிமாப் பாடல்களில் ஆங்கில வார்த்தையில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பாடல்களையும், படங்களையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : தரப்பட்டுள்ள குறிப்புகளும் ஆங்கிலத்திலேயே (உடைந்த) உள்ளன.

1. Tring Tring… Who is smiling ?
2. The name of the film – One of the two heroes in THIRUDA THIRUDA
3. It’s the dancer-actor’s JACKPOT to dance with this heroine, at least for a song.
4. A flower from this PLANET-METAL.
5. Annai Mary Matha + Sammanasu Pandian : A hero is born, and he is not OLD.
6. Alphabets from a Universal Hero.
7. Double Bell + a big sea director (C-ing him now as an actor)
8. What if one month goes ? It’s all because of YOU…
9. Hey… what happened to my question… you opposition party… !
10. Oh… Pair of Birds… ! sings the Parrot of Karnataka…

நீங்களும் முயற்சிக்கலாமே… மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

05 March 2008

இன்றைய விஷயம் : 03-03-2008 – விடுகதைக்குள் தமிழ்ப் படம்


தரப்பட்டுள்ள விடுகதைகளைக் கொண்டு தமிழ்ப் படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். (8 மட்டும் கொஞ்சம் கடினம்… ?)

1. இமயமாம் இந்த ராசா… இணைஞ்சதாம் திலகத்தோட… அது என்ன ?
2. திரிச்சிப் பேசுன பொய்க்காக பிரிச்சிப் போட்டானாம் பேச்சுறுப்ப… !
3. தாலாட்டு கேக்குதம்மா… திருட்டு முழிக்காரன்கிட்ட…
4. மச்சு வீடு கட்டிப் பார்க்க… மக்கா குடும்பமே வந்தது கிராமத்துக்கு…
5. செல்லாத காசு பேர வெச்சு… செல்லுலாய்டில் ஒரு சிற்பம்…
6. அஞ்சு பேரக் கொன்னுட்டுப் பொறந்தா… அவன் பேரு கடவுளா… ?
7. கட்டுன பூ இல்லாம பாக்கிய வெச்சு… கலக்கலா ஒரு காவியப் படம்
8. மூக்குங்குறது விடையானா… அதுக்கான விடுகதை என்ன… ?
9. இம்மாம் பெரிய பேரு வெச்சு… இந்தக் காலத்துல ராஜா படமா… ?
10. ஆட்டத்துக்கு நடுவுல ஆசைக் காதல்… ஆத்தி… ! இது தபால் குறியீடு…

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

28 January 2008

இன்றைய விஷயம் : 28-01-2008 : திரைப்படத்துக்குள் சினிமா… அது என்ன ?


தமிழ்ச் சினிமா பெயர்களில், சிலவற்றில், இன்னொரு தமிழ்ச் சினிமா பெயரும் ஒளிந்திருக்கும்.
(உம்.)
Main Cinema : தேவதாஸ் - ஒளிந்த சினிமா : தாஸ்

Main Cinema வைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒளிந்த சினிமா பற்றிய குறிப்பு IN BRACKETS. திரைப்படங்களின் பெயர்களைக் (ரெண்டு… ரெண்டு… படங்கள்) கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. King and a Small Flower (சுந்தரபாண்டியபுரம். திருநெல்வேலி மாவட்டம்)
2. மனோஜ் பட்நாயக் இசையமைத்து, இயக்கிய விஜய் படம் (ஐஸ்வர்யா-முருகன்)
3. முப்பிக்குள் சித்து (திவான்… SUPER STAR)
4. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு… (விஜயகாந்த் இப்படத்தில் இரு வேடம்)
5. சாகேதராமன் – ஷாருக் கான் (பருத்திவீரனின் முன்னோடி)
6. ஜெய்சங்கர் வில்லனான முதல் படம் (திமிர் பிடித்த இயக்குனரின் இரண்டாவது படம்)
7. துபாய் கஜா… (சூர்யா… செல்வா… ஹுசேன் பாய்)
8. பேர் வெச்ச காலேஜ் (பேர் வைக்காத காலேஜ்)
9. மாற்றப்பட்ட மறை (முதல்வனின் இயக்கத்தில் ப்ளாப் படம்… காரணம் வினீத்… !)
10. HAPPY NEW YEAR (யம்மாடி… ஆத்தாடி)

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

17 December 2007

இன்றைய விஷயம் : 17-12-2007 : கிசுகிசுவும், சினிமாவும்…


கிசுகிசுக்களைக் கொண்டு தமிழ்ச் சினிமா பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்…

1. ஃ இன்பாவும், கஸ்தூரிமானும் சேர்ந்து நடித்த படம் நன்றாக ஓடியது.
2. ரதிபதி படத்தில் உஷாபதி மகன்.
3. வறுமையின் நிறம் ஆங்கிலம்… அது… !
4. ஆசை, மனலி கஜா, பெட்ரோல் பங்க் சேகர், அகரம் சேது…
5. ஜிந்தா… ஸ்டீபன் ராஜ்…
6. ஐந்தெழுத்து நடிகரும், மூன்றெழுத்து வாரிசு நடிகரும் நடித்த கைலாச நாயக, நாயகி படம்.
7. சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படம் எடுத்த இயக்குனரின் சத்தம் போடாத கடல்.
8. கைப்புள்ள, நாய் சேகரான… சென்னை படம்.
9. ஐஸ்வர்யாவாகக் காதலித்த நடிகை இந்தப் படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவர்.
10. விஜய் நடித்த படத்தின் பெயர் கொண்ட மன்னர் கட்டிய படம் இது.

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

04 December 2007

இன்றைய விஷயம் : 04-12-2007 – க முதல் கௌ வரை… தொடங்கும் படங்கள்.


“கெ மற்றும் கௌ” இரண்டு எழுத்து தவிர… மொத்தக் கேள்விகள் பத்துதானே தரவேண்டும்… அதனால்தான்… !

1. தூங்கி எழுந்தா துபாய்… கஜா கா தோஸ்த்…
2. அசோகர்.. உங்க மகருங்களா… ? (இன்னும் க்ளூ தர நேரமில்லை)
3. பொன்னுரங்கத்துக்கு என்ன பிடிக்கும்… ?
4. சிவாஜி-சரிதா நடித்த அற்புதமான படம் (கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்)
5. சிவா-ஜெனி (Let’s Watch the Play… ! )
6. டபுள் ரோல் பரத் (மதுரையின் மற்றொரு பெயரோ… ? )
7. ------------
8. காக்கிநாடா காஞ்சனம்மாவாக ஜெயசித்ரா நடித்த படத்தில் வரும் பாடலின் முதல் அடிதான் இந்தப் படம்…
9. சின்னி ஜெயந்த அறிமுகமான ஸ்ரீதர் படம் (ரஜினியா… ஹீரோ… ? )
10. இசை என்னும் இன்ப வெள்ளத்தில்… (இன்னுமா தெரியலை… )
11. அப்பா-மகன்… சகோதரர்கள் லெவலில் நடித்த சிநபிமிதா படம்…
12. ------------

ஆக மொத்தம் பத்து…

நீங்களும் முயற்சிக்கலாமே… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

21 November 2007

இன்றைய விஷயம் : 21-11-2007 – ‘அ’ வரிசை – 2 முதல் 11 வரை


‘அ’ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ப் படங்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : படங்களின் பெயர்களில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 2 முதல் 11 வரை இருக்கும். அதாவது, முதல் படத்தின் பெயரில் உள்ள எழுத்துக்கள் 2, அடுத்தது மூன்று… இப்படி... 11 வரை செல்லும். படத்தின் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது.

ரெடி… ஜூட்…

1. ஹீரோ – ஹீரோயின் இருவருமே இரட்டை வேடம். இரண்டாம் வேடத்திற்கான காஸ்ட்யூம் வெறும் நீலம். (2)

2. மகாராணியாக ஒரு டூயட்ராஜா நடித்த படம். (3)

3. எதிர் வீட்ல பொறந்திருக்கலாம்… கீழ் வீட்ல பொறந்திருக்கலாம்… (4)

4. இந்தப் படத்தில், சொர்ணமால்யாவுக்கு - விவேக் முறைப்பையன்… (5)

5. பழைய சஸ்பென்ஸ் படம். இன்றுவரை மிஞ்ச வேறு படமில்லை. ரிம்… ஜிம்… எத்தனை பூக்கள்… ! (6)

6. ஹீரோ இந்தப் படத்தின் கதைப்படி ஒரு படம் தயாரிப்பார்…கிரேஸி… (7)

7. “சார்… லட்டு… !” “நம்பியண்ணே… !” அஞ்சுவைக் கடத்து (8)

8. “வசந்த காலத்தில் மழை தரும் மேகம்… “ இந்த வரிகள் இடம் பெற்ற பாடல் இடம்பெற்ற படம் (9)

9. தியாகராஜன் – சில்க், கணவன் – மனைவியாக நடித்த “என் இனிய…” படம் (10)

10. “பீம்சிங்-கா பேட்டா ராம்சிங்… “ “மாதவா… எப்படிரா… ?” (11)


நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

31 October 2007

இன்றைய விஷயம் : 31-10-2007 – ஊர் பேர்ல பாட்டு…


தமிழ்ச் சினிமாவில் சில பாடல்களின் முதல் வார்த்தை ஒரு ஊரின் பெயரில் தொடங்கும். அப்படிப்பட்ட பாடல்களைப் பற்றியோ, இடம் பெற்ற படங்களைப் பற்றியோ குறிப்புகள் தரப்பட்டுள்ளன. பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : எல்லா ஊர்களும் தமிழ்நாட்டிலேயே உள்ளன.


1. எம்.ஜி.ஆர். கிணத்தடி (படம்-நல்லவன் வாழ்வான்)


2. டவுசர் ராஜன் – ரேகா – சாந்திப்ரியா (விஜய் டி.வி. சீரியல்)

3. அம்மா நானா ஒக தமிழ் அம்மாயி (இதன் தமிழ் ரீ-மேக்கில் இடம் பெற்ற பாடல்)

4. விஜய்-சங்கவி-C. ரங்கநாதன் (கூகிளில் தேடவும்)

5. காதலன் படத்தை அடுத்து வந்த பிரபுதேவாவின் FLOP படம். (ரோஜா)

6. கார்த்திக்-செல்வா-ஆனால் கௌசல்யா இல்லை (மீண்டும் கூகிள்)

7. முருகர் பாடல் (படம் : தெய்வம்)

8. ஒத்த புள்ள ஒயிலா (அஹானா) நடித்த படத்தில் இந்தப் பாட்டு வரும்.

9. ரஞ்சித்-சிவரஞ்சனி-செல்வமணி (மூன்றாவது முறையாகவும் தேடவும்)

10. எல்லா ஊரில் இருந்தும் வேறு வேறு பாகங்கள் (இங்கிருந்து மட்டும் மண்)


மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

17 August 2007

இன்றைய விஷயம் - 17-07-2007 - தமிழ் சினிமா – ஹீரோ பேர் ஹீரோவேதான் !

தமிழ்ச் சினிமாவில் சில படங்களில், ஹீரோவின் கதாபாத்திரப் பெயர் இன்னொரு புகழ்பெற்ற ஹீரோவின் நிஜப் பெயராக இருக்கும்.

அப்படிப்பட்ட சில படங்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. முடிந்தால் ஹீரோவின் கதாபாத்திரப் பெயரைக் கண்டுபிடியுங்கள்.

உம். “கௌரவம் படத்தில் சூப்பர் ஸ்டார்“ என்ற கேள்விக்கு விடை “ரஜினிகாந்த்” (சிவாஜியின் பெயர்)

ரெடி. ஜூட்… !

1. சக்தி என்பது கதாநாயகியின் பெயர், படத்தில் நவரச நாயகன்.


2. ஆபரேஷன் தனுஷில் படையப்பா மாப்பிள்ளை.

3. மன்னரின் படைத்தலைவர் படத்தில் அன்புச்செல்வன்.

4. காதலியின் எதிர்ப்பதத்தில் செவாலியே புத்திரன்.

5. கட்டெறும்பு (சித்தெறும்பு அல்ல) பாடல் இடம்பெற்ற படத்தில் ‘காதல்’ நாயகன்.

6. டபுள் ரோல் சினேகா படத்தில் கிறுக்கிய புதுமைப்பித்தன்.

7. ஒரு மதராஸ் பெண்குட்டி சோதிச்ச படத்தில் ப்ரியமான தோழன்

8. ‘ஒதலவா’ படத்தில் காட்டன் சோல்டர் சித்தப்பு

9. “Respect for Love” படத்தில் சௌத்ரிகாரு புத்ருடு

10. “இவன்” படத்தில் இவர் பெயர் - “இவன் அவனில்லை” என்று இவனே மறுபடி மறுபடி சொல்லும் நாயகன் பெயர்.

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்

30 July 2007

இன்றைய விஷயம் : 30-07-2007 : தமிழ் சினிமா – அ முதல் ஃ தானடா… !


தமிழ்ச் சினிமா பாடல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. குறிப்புகளைக் கொண்டு பாடல்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

உப-குறிப்பு : பாடல்கள், அ முதல் ஃ வரையிலான எழுத்துக்களில் தொடங்கும். (13 பாடல்கள் – 13 எழுத்துக்கள் அதே வரிசையில்)

ரெடி… ஜூட்…

1. தியாகராஜன் – பார்வதி – டூயட் – பூவுக்குள் பூகம்பம் (அ)


2. கமலுக்கு மலேசியா பின்னணி – காக்கையில்லாச் சீமையிலே (ஆ)

3. கமலின் ஹீரோயினுக்கு L.R. ஈஸ்வரி பின்னணி – பாலசந்தர்–சுஜாதா (இ)

4. ரஞ்சித் பரோட் (ஈ)

5. ரஜினிக்கு யேசுதாஸ் டூயட் – A.V.M. – கார்த்திக்கோடு கூட்டணி (உ)

6. இளையராஜா – M.S.V கூட்டணி – R. சுந்தர்ராஜன் கூட்டணி (ஊ)

7. பார்க்க முடியாத அந்நியன் – பாடகர் ஹரிஹரன் (எ)

8. “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” (ஏ)

9. ரேஸிங் டிராக்கில் டூயட் – சிற்பி – கார்த்திக் (ஐ)

10. ஜெயலலிதா + நாகேஷ் + தசரதன் – வீட்டுக்குள்ளே ரேடியோ (ஒ)

11. கிரிஜா – சுந்தரத்தெலுங்கு ஹீரோ – இருட்டு இயக்குனர் (ஓ)

12. செல்லப்பா – முதலியார் – சேதுராமன் (ஔ)

13. விஜய் – சங்கவி – சுவலட்சுமி (ஃ)

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…

25 July 2007

இன்றைய விஷயம் : 24-07-2007 : தமிழ் சினிமா – ஐந்தில் ஒன்று கிடையாது… !


1. இந்த ஐந்து படங்களில் ஜீவா ஒளிப்பதிவு செய்யாத படம் எது ?
காதலன், ஆசை, ரன், ஜீன்ஸ், ஜெண்டில்மேன்


2. இந்த ஐந்து படங்களில் இளையராஜா இசையமைக்காத படம் எது ?
வீரா, புதுக்கவிதை, மனிதன், நெற்றிக்கண், பாண்டியன்

3. இந்த ஐந்து படங்களில் ப்ரியதர்ஷன் இயக்காத படம் எது ?
கோபுர வாசலிலே, லேசா லேசா, அன்பே சிவம், சிறைச்சாலை, சினேகிதியே

4. இந்த ஐந்து படங்களில் கமல் நடிக்காத படம் எது ?
உருவங்கள் மாறலாம், மை டியர் மார்த்தாண்டன், அக்னி சாட்சி, மை டியர் குட்டிச்சாத்தான்,
பார்த்தாலே பரவசம்

5. இந்த ஐந்து படங்களில் வெங்கி Special Effects செய்யாத படம் எது ?
இந்தியன், அபூர்வ சகோதரர்கள், ஜெண்டில்மேன், அம்மன், காதல் மன்னன்

6. இந்த ஐந்து படங்களில் ஹீரோ மொட்டை கெட்டப் போடாத படம் எது ?
ராமச்சந்திரா, சிட்டிசன், சிவாஜி, அமைதிப்படை, விருமாண்டி

7. இந்த ஐந்து படங்களில் இளையராஜா சொந்தக் குரலில் பாடல் பாடாத படம் எது ?
பட்டியல், காசி, சேது, கரகாட்டக்காரன், பருத்திவீரன்

8. இந்த ஐந்து படங்களில் கதாநாயகி கடைசியில் இறக்காத படம் எது ?
காதலர் தினம், பூக்களைப் பறிக்காதீர்கள், காக்க காக்க, புன்னகை மன்னன், சேது

9. இந்த ஐந்து படங்களில் பிரபு-குஷ்பு ஜோடியாக நடிக்காத படம் எது ?
சின்னதம்பி, சுயம்வரம், உத்தமராசா, நாளைய செய்தி, வெற்றி விழா

10. இந்த ஐந்து படங்களில் எந்தப் படத்தின் கிளைமேக்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் இல்லை ?
இணைந்த கைகள், இதயம், காதல் கோட்டை, செந்தூரப்பூவே, மூன்றாம்பிறை

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…

18 July 2007

இன்றைய விஷயம் : 18-07-2007 : தமிழ் சினிமா – குட்டீஸ் பாட்டு



தமிழ் சினிமாப் பாடல்களில் சிலவற்றில் குழந்தைகளோடு பாடுமாறு அமைந்திருக்கும். அப்படிச் சில பாடல்களின் முதல் வரி தரப்பட்டுள்ளது. பாடல் இடம்பெற்ற படத்தைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்… !

1. என்னைப் பாடச் சொல்லாதே… நான் கண்டபடிப் பாடிப்புடுவேன்…

2. ஆடுங்கள்… பாடுங்கள்… பிள்ளைப் பொண்வண்டுகள்… !

3. முத்துமணிச் சுடரே… வா…

4. விடியும் நேரம் அருகில் வந்தது… இருளும் விலகி ஓடப்போகுது…

5. பூ… பூபோல் மனசிருக்கு…

6. செல்லக்கிளிகளாம் பள்ளியிலே…

7. இனி அச்சம் அச்சம் இல்லை…

8. இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…

9. பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று…

10. சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…


06 July 2007

இன்றைய விஷயம் : 06-07-2007 : தமிழ் சினிமா – ஒரே குழப்பமப்பா… !


ஒரு திரைப்படத்தைப் பற்றிய இரண்டு குறிப்புகளும், விடையும் (எழுத்துக்கள் மாற்றி) தரப்பட்டுள்ளன.

உம்.
அ. சிவாஜியின் முதல் படம்
ஆ. கலைஞர் வசனம்.
விடை : திராபக்ச (பராசக்தி)

ரெடி… ஜூட்…

கேள்வி ஒன்று :
1. விஜய் – A. வெங்கடேஷ் இணைந்த முதல் படம்.
2. சங்கவி, சுவலட்சுமி கதாநாயகிகள்.
விடை : வாவேலா நி

கேள்வி இரண்டு :
1. ரஜினிகாந்த்-விஜயகாந்த் சேர்ந்து தோன்றிய ஒரே படம்.
2. S.P.B. நடித்த முதல் தமிழ் படம்.
விடை : திஉறு தினமல் டுண்வேம்

கேள்வி மூன்று :
1. நளினியின் முதல் படம்.
2. செயின் ஜெயபால்.
விடை : வயிறுரைள்உள ஷாஉ

கேள்வி நான்கு :
1. எம்.ஜி.ஆர்.
2. நிலா நிலா ஓடி வா.
விடை : தியம்சரோதந்

கேள்வி ஐந்து :
1. மாரிமுத்துக் கவுண்டர்
2. கவர்ச்சி சுகன்யா
விடை : மதிருதி னிச்பசாழமி

கேள்வி ஆறு :
1. சுக்கா போட்ட நவாபு
2. மயக்கும் மாலை
விடை : லிபவகுகாலே

கேள்வி ஏழு :
1. மலையாள ஒரிஜினல்
2. அஞ்சி தங்கை – ஒரு அண்ணண்
விடை : லிரிடமிட்

கேள்வி எட்டு :
1. செல்வபாரதி - விஜய்
2. ராதிகா சௌத்ரி
விடை : ரிளேமாப்னயவ

கேள்வி ஒன்பது :
1. மூன்று சாவிகளும், அதன் மூன்று மடங்கு நாயகர்களும்
2. A.P. நாகராஜன் இயக்கம்.
விடை : ரித்வராநதி

கேள்வி பத்து :
1. சங்கீதா-ரோஜா.
2. கலா கலா.
விடை : கதநீசமரிப

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்... + நேசத்துடன்… இரா. அரங்கன்…

14 June 2007

இன்றைய விஷயம் : 14-06-2007 : சிவாஜி ஸ்பெஷல் – ரஜினி QUIZ


சிவாஜி ரிலீஸை முன்னிட்டு இந்தப் பதிவு.

ரஜினி, தான் நடித்த படங்களில் பேசிய வசனங்கள் தரப்பட்டுள்ளன. அவை எந்தப் படங்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ? அவ்வளவு சுலபம் அல்ல…

1. “உன்னைவிட இந்த உலகத்துல ஒசந்தவங்க யாரும் இல்ல… அதேமாதிரி, உன்னைவிட தாழ்ந்தவங்க யாரும் இல்ல… இதுதான் ஸார் எங்க அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தது… “

2. “கெடைக்கிறது கெடைக்காமப் போகாது… கெடைக்காதது கெடைக்கவே கெடைக்காது… “

3. “நான் தட்டிக் கேப்பேன்… ஆனா கொட்டிக் கொடுப்பேன்… “ (டபுள் ரோல்)

4. “புருஷன் வீட்ல நடக்கறத வெளியில சொல்றவ பொம்பளை இல்ல… தங்கச்சி படற கஷ்டத்தைப் பாத்துட்டு சும்மா இருக்கறவன் ஆம்பளை இல்ல… “

5. “பொம்பளப் பிள்ளைங்க வெளில போனா கெட்டுப் போய்டுவாங்க… ஆம்பளைப் பிள்ளைங்க வீட்ல இருந்தா கெட்டுப் போய்டுவாங்க… “

6. “என் மூச்சு இருக்கிறவரைக்கும் முத்தமிழை மறக்கமாட்டேன்… “

7. “நீ விரும்பறவனைக் கல்யாணம் பண்ணிக்கறதவிட உன்னை விரும்பறவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் வாழ்க்கை நல்லா இருக்கும்… “

8. “வாழ்க்கையில பயம் இருக்கலாம்… ஆனா… பயமே வாழ்க்கை ஆகிடக்கூடாது… “

9. “ஒரு மொட்டை… ஒரு மீசை… நாலஞ்சி ஸ்கூல் பசங்க… “ (நூறு வருஷம்)

10. “உனக்கு எப்பவுமே ஒண்ணைவிட ஒண்ணு பெட்டராத் தெரியும்… “ (எஸ் பாப்பா)

நீங்களும் முயற்சிக்கலாமே…

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்…

04 June 2007

இன்றைய விஷயம் : 04-06-2007 : தமிழ் சினிமா – வில்லன் எப்படி இறப்பான் ?


தமிழ்ப் படங்கள் சிலவற்றில் வில்லன் இறக்கும் விதம் தரப்பட்டுள்ளது. அது எந்தப் படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

1. குழந்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே பார்க்க, கத்தியால் குத்துப்படுவார்.

2. தன்னுடைய தங்கக் காரில் இருந்தபடியே உருகி இறப்பார்.

3. சர்க்கஸ்ஸில் சிங்கத்தால் கொல்லப்படுவார்.

4. உயிர்ப்பிச்சை அளித்த ஹீரோவைக் கொல்ல ஓடி வரும்போது லாரி இடித்து தூக்கி வீசப்படுவார்.

5. கூடப்பிறந்த அக்காவைக் கொன்றதற்காக சொந்தத் தம்பியாலேயே கத்தியால் குத்துப்பட்டு இறப்பார்.

6. இரண்டு வில்லன்களில் ஒருவன் தலைகீழாகத் தொங்கியபடியே, இன்னொருவனுக்கு மின்சார ஷாக் கொடுத்துக் கொல்லுவான்.

7. வில்லனைக் காரில் தப்பிக்கவிட்டு, சிந்திய பெட்ரோலில் குச்சி கிழித்துப் போட்டு, Close பண்ணுவார், bad man ஹீரோ.

8. உடல் முழுவது பட்டாசு சுற்றியும், ஹீரோவிடம் கிண்டலாகப் பேச, ஹீரோ தீக்குச்சியால் ராக்கெட் பற்றவைத்து அனுப்பி, அதனால் காலி.

9. பழிவாங்கும் ஹீரோ, வில்லனை ஹெலிகாப்டரில் இருந்து தள்ளிவிட, வில்லன் தொங்கியபடியே. கெஞ்சியபடியே உயிரை விடுவார்.

10. சொல்லச் சொல்லக் கேட்காத வில்லனை, ஹீரோ, பொட்டல் காட்டில், ஒரு உணர்ச்சி வேகத்தில் அய்யனார் அரிவாளால் ஒரே சீவு.


நீங்களும் முயற்சிக்கலாமே… !

மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.


29 May 2007

இன்றைய விஷயம் : 29-05-2007 : தமிழ்ச் சினிமா – இன்னுமொரு QUIZ


தமிழ் சினிமாக்கள் சிலவற்றில் இரண்டு கதாநாயகர்கள் இருப்பார்கள் (உம். பார்த்தால் பசி தீரும்) அப்படிப்பட்ட படங்களில் இருந்து, அந்த இரு நாயகர்களில் ஒருவரின் கதாபாத்திரப் பெயர் தரப்பட்டிருக்கிறது. இதைக் கொண்டு அந்தப் படத்தின் பெயரைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சில குறிப்புகளும் உண்டு.

1. கோசி.
2. ஸ்டீபன் ராஜ்.
3. சந்த்ரு. (பங்களா பெயிண்டிங்)
4. சந்தோஷ். (ஈச்சங்காட்டுல)
5. டேவிட் (ஆடி மாசம் பொறந்திருச்சி)
6. கௌதம் விஷ்வநாத்
7. கதிர் (ஆத்துக்குள்ள அயிரை மீனு)
8. அப்பாஸ்
9. ஜேம்ஸ் (பார்த்திபன்)
10. நல்லசிவம்.


மீண்டும் சந்திப்போம்… + நேசத்துடன்… இரா. அரங்கன்.